News
நாமல் ராஜபக்ஸவுக்கு பிணை
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால்சென்ற வாரம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று 22ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை ஆகி உள்ளார்.
தேசிய உணவு பாதுகாப்பு வாரம்
தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று திங்கட்கிழமை(22) முதல் 29ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள், உணவுகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், உணவகங்களை சோதனைகளுக்கு உட்படுத்தல் மற்றும் பாடசாலைகளின் சிற்றுண்டிசாலைகளை சோதனைக்கு உட்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனியின் மட்டத்தை குறிக்கும் அட்டவணை வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் தேடி ஆராய்ந்து பார்க்கப்படும். தேநீருக்காக சீனியை புறம்பாக வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது குறித்தும் சோதனை செய்யப்படும்.
ஜக்கிய நாடுகள் அமையத்தின் சர்வதேச மாநாடு
-அஷ்ரப் ஏ சமத் – ஜக்கிய நாடுகள் அமையத்தின் இளைஞா் அமைப்பின் தேசிய இளைஞா் அமைப்பின் 2 நாட்கள் கொண்ட சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று (20) பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இம் மாநாடு இளைஞா் அமைப்பின் செயலாளா் நாயகம் இன்சாப் பாக்கீா் மாக்காா் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இம்மாநாட்டிற்கு ஜக்கிய நாடுகள் உறுப்புரிமை நாடுகளின் இளைஞா் பிரநிதிகள் உட்பட 200 இளைஞா்கள் கலந்து கொள்கின்றனா். ஆரம்ப வைபத்தில் உயா்கல்வி இராஜாங்க அமைச்சா்…
போதைப்பொருளை முற்றாக அகற்றுவது தொடர்பில் தீர்மானம்
-நாச்சியாதீவு பர்வீன் – மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்,அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வில் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். மட்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த…
நாமல் நீதிமன்றில் முன்னிலை!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படஉள்ளார். நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த போதே நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாமல்…
நிறைவடைந்தது ஒலிம்பிக் – அமெரிக்காவுக்கு முதலிடம்!
ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில்…
கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது
மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும். வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்துக்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச்…
2017 ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்டம்
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.பி.க்களுக்கான ஒழுக்கக் கோவை!
தேசிய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஒழுக்கக் கோவை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். ஒழுக்கக்கோவையை அமுல்படுத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த வாரம் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த ஒழுக்கக்கோவையில் சில திருத்தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை…
இலங்கை வரும் பான் கீ மூன்
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியுடன், ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், பான் கீ மூன் சிறிலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கிறார். செப்ரெம்பர் 3ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார். இதன் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பலரையும், எதிர்க்கட்சித் தலைவர்…
பட்டம் விடுவதில் அவதானம் : சிறுவர்களிடம் கோரிக்கை!
அதி உயர் மின்னலுத்தங்கள் காணப்படும் இடங்களில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஸ்ரப் சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேடமாக தங்கூசி என்ற நூலினைப் பயன்படுத்தி பட்டங்கள் விடும் போது, பட்டங்கள் மின்மாற்றி அல்லது மின்கம்பங்களால் சிக்குவதுடன் இதன்மூலம் மின்சாரத் தாக்குதலுக்கு சிறுவர்கள் உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெற்றோர் தமது குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், விசேடமாக…
சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவோம் – கூட்டு எதிர்க்கட்சி
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களும் அமைப்பாளர் பதவிகளை விட்டு விலகிக் கொள்ள உள்ளனர். ராஜினாமா கடிதங்கள் வெகு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமது குழுவினை சுயாதீன ஓர் குழுவாக…
