News
தபாலில் வந்த போதை மாத்திரை
நெதர்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக தபாலில் அனுப்பப்பட்ட போதை மாத்திரை ஒரு தொகை கொழும்பு மத்திய தபால் நிலையத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தபால் பொதியானது கிரான்ட்பாஸ் பகுதி வர்த்தகர் ஒருவருக்கு நெதர்லாந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பெறுமதி 50 இலட்சம் என பிரதி சுங்க அதிகாரி லால் வீரக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த பொதியினை தபால் நிலையத்திலிருந்து விடுவிக்க உதவிய தபால் நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடைய…
கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார்
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊடாக இலங்கையின் 37 இணையத்தளங்கள் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டள்ளது. இந்த…
வலயக் கல்வி அலுவலகத்தில் தீ
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தீ விபத்தால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மின்சாரக் கோளாரே இந்த தீப் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி மூடப்படுகிறது!
யால தேசிய விலங்குகள் சரணாலயத்தின் ஒரு பகுதி நாளை (1) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் உள்ளக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, விலங்குகள் வேறு பிரதேசங்களுக்குச் செல்வதை தடுப்பதற்காக மின்வேலிகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Qatar விமான நிலையத்தில் பயணிகளுக்கு 35 ரியால் நுழைவு வரி
எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். இதன் தலைநகர் DOHAவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு வருகை தரும் விமான பயணிகளுக்கு 35 ரியால் அதாவது ரூ.1400 நுழைவு வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் டிக்கெட் எடுப்பவர்களிடம் கட்டணத்துடன் சேர்த்து நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் அது டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதில் 2 வயதுக்கு கீழ் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அது…
சீனா, பாகிஸ்தானில் நிலநடுக்கம்
சீனாவின் சிச்சுவான் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை உண்டான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ள நிலையில், பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் நேற்று பின்னிரவு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வு அருகாமையில் உள்ள நான்கானா சாஹிப், கசுர், ஷேக்புரா…
அரச அலுவலகங்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸ் பிரதமரின் திடீர் விஜயம்!
துபாயின் அமீரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபாயிலுள்ள அரச அலுவலகங்களுக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின்போது, உயர் அதிகாரிகள் பலர் அலுவலங்களில் இல்லாதிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதையடுத்து 9 சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரை பணியலிருந்து ஓய்வு பெறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 65 வயதான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உப ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிப்பதுடன், துபாயின் அமீராகவும் (ஆட்சியாளர்) விளங்குகிறார். கடந்த ஞாயிறன்று அவர் துபாயிலுள்ள அரச…
ரஷ்ய நகர மக்களை அச்சமடையச் செய்த முகில்
ரஷ்ய நகரமொன்றில் பாரிய காளான் போன்ற உருவம் கொண்ட முகில் தோன்றியமை அந்நகர மக்களை அச்சமடையச் செய்தது. மேற்கு சைபீரிய பிராந்தியத்திலுள்ள கேமேரோவோ நகரில் கடும் இடிமின்னலுக்கு மத்தியில் இந்த முகில் தென்பட்டது. ஆனால், அணுகுண்டு வெடிப்புகளின் போது இத்தகைய பாரிய காளான் உருவிலான புகை ஏற்பட்டதை அறிந்திருந்த மக்கள், இந்த முகிலைக் கண்டு அச்சமடைந்தனராம். அந்நகருக்கு சற்று தொலைவிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏதேனும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதோ எனவும் சிலர் அச்சம் கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்….
மஹிந்த கவலை!
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு நெருக்கமான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ நியமித்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மகிந்த நீக்கியுள்ளார். இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக…
மண்ணுக்குள் புதையுண்ட ரோலர் இயந்திரம்!
கினிகத்தேனை – பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது….
அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிக்கு “நிதியம்”
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது. இன்று கொழும்பு வரும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அனுசரணையுடன், இந்த நிதியத்தை உருவாக்குவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிகள் பலவற்றுக்கும் ஆதரவை வழங்கும் வகையிலேயே இந்த நிதியத்தை…
புனித ஹரமின் சேவகன் என்று அழைப்பதில் மகிழ்ச்சி!
சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களை இரு புனித தலங்களின் சேவகர்கள் என்று தான் செய்தி நிறுவனங்கள் அறிமுகபடுத்தும். இது பற்றி மன்னர் சல்மான் குறிப்பிடும் போது, என்னை சவுதி மன்னர் என்று அழைப்பதை விட புனித ஹரமின் சேவகன் என்று அழைக்க படுவதில் நான் மகிழ்ட்சி அடைகிறேன். புனித தலங்களுக்கும் அதை நாடி வருபவர்களுக்கும் சேவை செய்வது எங்களது மிக முக்கிய பணி. அந்த பணியினால் தான் எங்களை இறைவன் சிறப்பான நிலையில வைத்திருக்கிறான். எங்களால் எந்த…
