News
நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி
கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம்
வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாது வாகனங்களை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வாகன உரிமை கோராது வாகனங்களை பயன்படுத்தி வருவோர் வாகன உரிமையை கோர முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வாகன உரிமை கோரப்படாத வாகனங்களின் உரிமை மாற்றம் செய்யப்படும் போது வழமையாக உரிமை…
SLS தர நிர்ணய தலைக்கவசங்களுக்கான சட்டம் இன்று முதல் கட்டாய அமுல்
இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று (1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்குடன் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த சட்டமானது பல வருடங்களுக்கு முதலே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதாகவும், தலைக்கவசம் அணியாமல் நாளொன்றிட்கு 7 அல்லது 8 மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே தர நிர்ணயம் கொண்ட தலைக்கவசங்களை மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள்…
ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. “இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த…
ஒலுவில் கடலரிப்பு – அமைச்சரவையில் என்ன நடந்தது என்ன?
-ஒலுவில் கமால் அஹ்மட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை -31- ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார். அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்த அர்ஜூன ரணதுங்க ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை தடுக்க அமைச்சர் றிசாத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதுகுறித்து என்னுடனும், எனது அதிகாரிகளுடனும் பலதடவை உரையாடினார். அந்த மக்கள் படும் அவலங்களை என்னிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தார் அதன் பயனாக…
இலங்கையில் வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை
ஜேர்மன் நாட்டின் வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னதெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம், இது தொடர்பான அறிவிப்பினை தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்இதனைத் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கென இடத்தை ஒதுக்கும் நடவடிக்கைகள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், வொக்ஸ்வெகன் நிறுவனம் இலங்கையில் தனது தொழிற்சாலையை அமைக்காது என ஏற்கனவே தெரிவித்தமைக்கான காரணம் “குறித்த நிறுவனத்தின் பொருளாதார…
இன்று பாதுகாப்பு மாநாடு!
கொழும்பு பாதுகாப்பு மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. வலயம் மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில், உள்நாட்டு மற்றும் வௌிநாடுகளை சேர்ந்த புத்திஜீவகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு இராணுவ தளபதி லுத்தினல் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின்…
அநியாயமாக இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் றிஷாத்திடம் முறையீடு
எந்தவிதமான காரணங்களுமின்றி முறைகேடான வகையில், தாங்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையிட்டனர். அம்பாறை கச்சேரியில் இன்று காலை (01/09/2016) அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த அவர்கள், இந்த திடீர் இடமாற்றத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், மனக்குறைகளையும் எடுத்துரைத்தனர். முஸ்லிம் கட்சி ஒன்று, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, இந்த தான்தோன்றித்தனமான இடமாற்றத்தை வழங்கியுள்ளதாக அவர்கள் கவலை…
அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கவேண்டும்
-அமைச்சரின் ஊடகப்பிரிவு – இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னாசிய பிராந்திய வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உதவிச்செயலாளர் மைக்கல் ஜே.டெலனி மற்றும் இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர், அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று மாலை (31/08/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய…
மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய காலக்கெடு
சட்ட ரீதியான முறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு வருகிறது இலங்கை தயாரிப்பு முச்சக்கர வண்டி
மிக விரைவில் இலங்கை தயாரிப்பு முச்சக்கர வண்டி சந்தைக்கு வரவுள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி உற்பத்தி நிறுவனம் மார்க்ரோ அறிவித்துள்ளது. இந்திய பஜாஜ் நிறுவன முச்சக்கர வண்டிக்கு ஒப்பானதாக இந்த தயாரிப்பும் ஆமைந்துள்ள போதும் இதன் சந்தை விலை 475000 என அறிவிக்கப்பட்டுள்ளது .
மூனின் கவனத்தை ஈர்க்க, யாழ்ப்பாண முஸ்லிம்களும் முயற்சி
இலங்கைக்கு இன்று (31) வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பானகீ மூனின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாழ்பாண முஸ்லிம்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்ற வேளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஈடுபடவுள்ளார்கள். தமது பாரம்பரிய தாயகத்தில் மீள்குடியேற்றம், இதில் ஐ.நா. தலையிட வேண்டும், புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான தமக்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் மேற்கொள்ளும் அநீதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
