News
540 சீனி மூடைகள் மாயம்
25 இலட்சம் ரூபா பெறுமதியான 540 சீனி மூடைகள் மாயமாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்து ள்ளது. குறித்த முறைப்பாட்டில், இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூடைகளை போக்குவரத்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய போதிலும், அது இன்னும் தமது நிறுவனத்திற்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்த நிறுவனத்திடம் போக்குவரத்து உரிமையை பெற்ற, மற்றுமொரு உப ஒப்பந்த நிறுவனத்தினால் அந்த சீனி மூடை கொள்கலன் எடுத்துச்…
மஹிந்தவிற்கு வயதாகிவிட்டது – அமைச்சர் ராஜித
70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை…
ஐஸ்கிறீமுக்கு இரண்டு காலவதி திகதிகள்
– எம்.றொசாந்த் இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொலையாளிகள் மாவனல்லையில் தலைமறைவு?
பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் 8 வர்த்தகர்களின் சாரதிகளிடமும் விசாரணை தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் ஆய்வு விசாரணைக்கு 20 பொலிஸ் குழுக்கள் கொழும்பு,பம்பலப்பிட்டி, கொத்தலாவல எவனியூ பகுதியில் கடத்தப்பட்ட கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானை படுகொலை செய்த கொலையாளிகள் மாவனெல்லை பகுதியில் தலைமறைவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளை உள்ளடக்கிய 20…
ஜனாதிபதியின் இணையத்தளம் முடக்கம்: மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப உத்தரவு!
ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்று (29) கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதானவரை செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இணைத்தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2050-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியை எட்டும்
உலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரமிக்கதக்க வகையில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டிவிடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அந்த சமயத்தில ஆசிய நாடுகளின் மக்கள்…
இருவருக்கு அமைப்பாளர் பதவி!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன, கண்டி-உடுதும்புரவுக்கான அமைப்பாளராகவும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி- யட்டிநுவரவுக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் தர நிர்ணயமானது – தென்னகோன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – சதொச மற்றும் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் உரிய முறையில் தர நிர்ணயத்துக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனத்தினை பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்வதிலிலுந்து அதனை பாதுகாத்துக் கொள்வது அரச அதிகாரி என்ற வகையில் தமது பொறுப்பு என்றும் கூறினார். அண்மையில் மின்னேரிய பிரதேச அரிசி ஆலையில் மீள் சுத்திகரிப்புக்கு என கொண்டுவரப்பட்டிருந்து ஒரு தொகை அரிசியினை பொது சுகாதார பரிசோதகர்கள்…
மும்மன்ன முஸ்லிம் வித்தியாலய விவகாரம்: அதிபருக்கு இடமாற்றம்
மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்துக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் பெரும்பான்மை சமூகத்தினால் உரிமை கொண்டாடப்படும் நிலையில் அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்டு வந்த வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்பவரே இவ்வாறு கிரி/ அதார ஆரம்ப பாடசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2016.08.24 ஆம் திகதியிட்ட இடமாற்றக் கடிதம் நேற்று திங்கட்கிழமையே அதிபரைச் சென்றடைந்துள்ளது. அதிபர் இடமாற்றம்…
பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்
இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட நாட்டிலுள்ள தமிழ் – சிங்கள அரசபாடசாலைகள் நாளை 31ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் கல்விச்செயற்பாடுகளுக்காக திறக்கப்படுகின்றன. இப்பாடசாலைகளில் கடந்ததவணை இறுதிநாள் வரை இரண்டாம் தவணைப்பரீட்சைகள் நடைபெற்றதனால் அத்தவணைக்கான மாணவர் முன்னேற்ற அறிக்கையை வழங்கமுடியாத சூழ்நிலைக்கு பாடசாலைகள் தள்ளப்பட்டிருந்தன. மூன்றாம் தவணைக்காக மேற்படி பாடசாலைகள் நாளை 31ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும். இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக கடந்த 06.06.2016முதல் 06.07.2016வரை மூடப்பட்டிருந்தன. கல்விச்செயற்பாடுகளுக்காக கடந்த 11ஆம் திகதி மீண்டும்…
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய இரண்டாவது சந்தேக நபர் கைது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்தை ஊடுறுவியதாக கூறப்படும் இரண்டாவது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான மொரட்டுவை பகுதியினைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்தனர். குறித்த கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று (30) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
10 மீனவர்கள் கைது!
கதிரவெளி கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் நேற்று (29) கைது செய்துள்ளனர்.
