News
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயார்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பாக அறிவுறுத்தலுடன்,துஸ்பிரயோகங்களின் போது சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முறைகள் தொடர்பான நடவடிக்கைகயை அறிமுகப்படுத்தல் என்பனவே இந்த கொள்கைகள் தயாரித்ததன் நோக்கம் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது தேசிய மற்றும், மாகாண சபை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவளை சிறுவர் பாதுகாப்பு…
134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
சவுதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று காலை (05) நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு திரும்பினார் மஹிந்த!
மலேசியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று காலை 10.30 மணிக்கு மலேசியா விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 319 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் மலேசியா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விசேட பிரேரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்தார். இதன்போது ஏழு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பாதுகாக்கும் செயற்திட்டத்தை பாராட்டியும், இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்தல், இன நல்லிணக்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதன்போது அமைச்சர் பிரேம்ஜயந்த மேலும் உரையாற்றுகையில், ஒற்றையாட்சிக்குள்…
சகவாழ்வை ஏற்படுத்துவோம் – அமைச்சர் ருவன் விஜேவர்த்தன
நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போதுதான் உரியவர் தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளது. இனிவரும் எந்தவொரு சவாலையும் துணிந்து எதிர்க்க தயாராவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 சம்மேளனம் நேற்று குருணாகலில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு வரவேற்புரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இன,மத அடிப்படையிலான வேறுபாடுகள் எவையும் இருக்கவில்லை. அதுவே கட்சியின் உருவாக்க தந்தையான…
ஏ9 வீதியில் விபத்து
ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், நாலந்த உடுதேனிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 மற்றும் 24 வயதான இருவர் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம்; நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். தற்போது சடலம் நாலந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது….
பங்களாதேஷ் பேராசிரியர் யூனுஸ் சந்திப்பு
கிராமின்வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நுண்கடன் திட்டத்தின் ஸ்தாபகரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை, பங்களாதேஷில் சந்தித்துப் பேசிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதிய வளங்கள் இருப்பதால். அங்கு வந்து கிராமின்வங்கித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் விதவைகள்,யுவதிகள், இளைஞர்கள் தொழில்வாய்ப்பு…
அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா றிஷாத் பதியுதீனிடம் வங்காலை மக்கள் கோரிக்கை
-சுஐப் எம் காசிம் – வங்காலை கிராமத்துக்கு அணித்தான இரண்டு பிரதேசங்கள் பறவைகள் சரணாலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பல்வேறு பாதிப்புக்களையும் நெறுக்கடிகளையும் ஏற்படுத்தி இருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் வங்காலை கிராம மக்கள் எடுத்துரைத்தனர். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னாருக்கு விஜயம் செய்த காமினி ஜயவிக்ரம பெரேரா மன்னார் கச்சேரியில் வனவளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக…
முல்லைத்தீவு மாணவன் புத்தளத்தில் மாயம் தகவல் தரக்கோரிக்கை
முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பரீத் முகம்மது இல்ஹாம் (வயது 16) என்ற மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரம் கற்கும் குறித்த மாணவன் 4 அடி 8 அங்குல் உயரமுடையவர் எனவும், காணாமல் போன போது நீல நிற காற்சட்டையும், ரோஸ் நிற சேர்ட்டும் அணிந்தி ருந்து ள்ளார். கடந்த மாதம்…
வடகொரியா உடன் அதிகப்படியான பதற்றத்தை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும்
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு…
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் க்சி ஜின்பிங்-ஐ இன்று சந்தித்தார். இந்தியா – சீனா நாடுகளுக்கிடையிலான உறவுகளில் நீடிக்கும் சிக்கல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார்.
