News
சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா
வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் சீனாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒபாமா பதிவு செய்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் நாம் கட்டுப்படுகிறோம் என்றால், அது நிர்பந்தத்தினால் அல்ல. ஆனால், சர்வதேச ஒழுங்குமுறையை நாம் ஏற்றுக் கொள்கிறோன்…
நூலகத்தில் புத்தகத்தை திருப்பி தராவிட்டால் ஜெயில் தண்டனை
நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது. அமெரிக்காவில் இப்படி ஏமாற்றும் நபர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். அங்குள்ள அலபாமா நகரில் உள்ள நூலகத்தில் ஏரளமான புத்தகங்கள் திரும்பி வரவில்லை. சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள புத்தகங்கள் இப்படி திரும்பி வராமல் உள்ளது. எனவே புத்தகங்களை திருப்பி தராதவர்களுக்கு கடும் தண்டனை வழங்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது. அமெரிக்காவை பொறுத்தவரை நாடு…
சுகாதார அமைச்சர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு விஜயம்
எல்பிட்டடிய அரச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது . சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமீபத்தில் இந்த வைத்தியசாலைக்கு விஜயம் செயது இது தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்தத கோரிக்கை;கு அமைவாக வைத்தியசாலைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
தடையை மீறி 3 ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா
சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் இன்று வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம்…
அச்சம் இன்றி வாழக்கூடிய சூழுல் உருவாக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி
நாட்டில் இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் சமாதானமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக எதுவித அச்சமும் இன்றி வாழக்கூடிய சூழுல் இன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். சிரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருணாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்று (4) நடைபெற்ற வருடாந்த கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்கனை குறிப்பிட்டார். அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக அச்சம்…
நாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஒழிக்க புதிய வேலைத்திட்டங்கள்
நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் அளவானது இந்த வருடத்திற்குள் 70 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்கள் ஊடாக அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கசல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தத்தமது பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அன்றாடம் பிரதேசத்தின்…
மலேசிய மாநாட்டில் அமைச்சர் றிஷாத் உரை
அமைச்சின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் இன்று (05/09/2016) ஆரம்பமான பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்று அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் இடம்பெற்ற “நிலைபேறான பொருளாதார முன்னேற்றம்” என்ற கருப்பொருளிலான இரண்டாவது நிகழ்விலும் அமைச்சர் உரையாற்றினார்.
இலங்கைத்தூதுவர் மீதான தாக்குதல்: வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை
மலேஷியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மலேஷியாவுக்கான உயர்ஸ்தானிகர் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான உயர்ஸ்தானிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல்களை நடாத்தியவர்களை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகளை நடாத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தாக்குதல் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக இலங்கை…
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை: 8 பேருக்கு விளக்கமறியல்
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2050ல் பூமியில் பாதி காணாமல் போய்விடும்
-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்து வந்தால் 2050க்குள் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போதிருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் பூமி தப்பும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னும் 33 வருடங்களில் பூமியிலிருந்து 8 லட்சம் உயிரினங்கள்…
மீண்டுமொரு முஸ்லிம் வர்த்தகரை காணவில்லை
பண்டாரகம – அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின் பொருட்டு தனது குழுவினருடன் நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். நேற்று -04- முதல் இன்றுவரை அவருடனான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும், எனவே இவர் காணாமல் போயிருக்கலாம் என அவரது தந்தை பண்டாரகம பொலிஸ்…
எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் சுமார் எட்டு லட்சம் பேர் தமக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என…
