News
பாடசாலை சீருடைகளுக்காக காசோலை வழங்க நடவடிக்கை
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதற்காக காசோலை முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர் முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதுவரை காலமும் இலவசமாக பாடசாலை சீருடைகளை நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தரமான சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர்களை அறிமுகம் செய்திருந்தது. எனினும் வவுச்சர் முறையிலும் சில குளறுபடிகள் காணப்பட்டதாக பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வவுச்சர் முறைமைக்கு பதிலீடாக…
இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிக்க புதிய நடவடிக்கை!
இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 26ஆம் தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியில் நேற்று பங்கேற்ற போது ஊடகவியலாளாகளிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலை சர்வதேச அளவில் விரிவு படுத்துவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்….
முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேசத்தை நோக்கி: ஏகபிரதிநிதியாக றிஷாத்
-இப்னு ஜமால் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக செயற்பட்டுவருவதை அரவது துணிச்சல் மிக்க முன்னெடுப்புக்கள் கட்டியம் கூறுகின்றன. அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் குரல் வளைகள் எங்கெல்லாம் நசுக்கப்பபடுகின்றதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலித்த ரிசாத் பதியுதீனின் குரல் இன்று சர்வதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளமை இதற்கு சாண்றாக அமைந்துள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் பாங்கி மூனை ரிசாத்…
ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று 65வது பிறந்த தினம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் குடியேற்றத்திட்டத்தின் ஊடாக அவரது குடும்பத்துக்குக் காணித்துண்டொன்று கிடைத்த நிலையில், சிறு வயதிலேயே பொலன்னறுவைக்கு இடம்பெயர்ந்திருந்தார். சிறு வயதில் கம்யூனிச சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன தனது 17வது வயதில் சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து…
பான் கீ மூனை றிஷாத் சந்தித்துப் பேசினார்: மகஜர் ஒன்றும் கையளிப்பு..
-சுஐப் எம்.காசிம் – இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை (02/09/2016) சந்தித்தார். கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ் ஆகியோரும் உடனிருந்தனர். முஸ்லிம் சமூகமும் மோசான முறையில் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத், வடமாகாணத்தில் வாழ்ந்த…
நல்லிணக்கத்திற்கான கால வரையறை விதிக்கவில்லை
இலங்கையில் நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான கால வரையறையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக நீடித்த யுத்தத்தில் இருந்து மீளுவதற்கு கால அவகாசம் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆகவே இதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு சந்தித்துள்ளார். தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அனைத்து மாகாணங்களுக்கும் நியாயமான அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்…
பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்
பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறாக பூமியை நெருங்கி செல்லவுள்ள இந்த விண்கல் ஆனது 35 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றது. இந்த விண்கல்லினால் பூமியிலிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும்…
தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அவமரியாதை தந்ததாக புகார்
தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தின்போது, கிம் யாங் ஜின் மோசமான நிலையில் உட்கார்ந்திருந்து, நாட்டின் தலைவருக்கு அவமரியாதை தந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பாக அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது
மு.கா.வின் மூத்தபோராளிகள் பலர் அ.இ.ம.கா.வில் இணைவு
கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷாத்அவர்களுடன் தாம் இணைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி யும் கலந்து கொண்டார். கல்முனை 3 ல் அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்த வைபவத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…
‘மென் சக்தியின் தாக்கம் சக்திவாய்ந்தது’
ஜே.ஏ.ஜோர்ஜ் ‘உலக நாடுகளில் கடின சக்தியின் எதிர்விளைவுகள் அதிகரித்துள்ளதையடுத்து, மென் சக்தி மற்றும் அதன் தாக்கம் அண்மையகாலத்தில் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. இதனை அண்மையில் ஏற்பட்ட அரபு வசந்தத்தில் காண முடிகிறது. மென்மையான சக்தி பரவலாகியுள்ளதுடன் தேசிய வலிமைக்கான ஒரு முக்கியமான காரணியாக இப்போது மாறியுள்ளது’ எனப் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2016’ இல் கலந்துக்கொண்டு சிறப்புரை…
மனைவியை சுட்ட விவகாரம்: சுழல் துப்பாக்கியும் ஆற்றிலிருந்தே மீட்பு
அத்துருகிரிய, இசுருபுரவில் தன் வீட்டில் வைத்து மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் பிரதீப் குமார தென்னசிங்கவை இராணுவ சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ய, இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணைகளை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தளபதி கட்டளையிட்டுள்ளார். அதேபோல, இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியாக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்…
