News
வற் வரி திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்
வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான வற்வரி அதிகரிப்பு திருத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் அமைச்சரவையில் நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வகையில் அமைச்சரவையானது வற்வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் இந்த உத்தேச திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் மாதம் 12…
திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – ஜெயலலிதா
திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – முதல்வர் ஜெயலயலிதா…..!! திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் என்று முதல்வர் ஜெயலயலிதா பக்ரீத் பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில்… இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள்…
இஸ்லாமிய முறையில் உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது: சோதனை மூலம் நிரூபனம்!
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர். ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை…
மோட்டார் சைக்கிள் விபத்தால் 50 சதவீதமானோர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 50 சதவீதமானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனை வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் 666 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தினால் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துகளில் பகல் வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 355 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரவு வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 311 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இரவு…
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இலங்கை விவகாரம் இம்முறை விவாதத்துக்கு உட்படுத்தப்படாதபோதும், எதிர்வரும் வியாழக்கிழமை பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா.செயற்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போதல்கள் இலங்கையில் நீண்டகாலமாக இழுபட்டுவரும் விடயமாக காணப்படும் சூழ்நிலையில், 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான செயற்குழுவினர் தமது விஜயத்தின் அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். எனினும், ஐ.நா மனித…
பயிற்சியை பூர்த்தி செய்த 3225 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 1046 தமிழ்மொழி ஆசிரியர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு இடம் பெறவிருப்பதாக கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக மேலதிக செயலாளர் ஐ.எம்.கே.பி.இங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். இவர்களது நியமனம் அந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருமென்றும் குறிப்பிட்ட அவர் ஆசிரியர் வெற்றிடங்கள்…
இலங்கை வரும் இந்திய அமைச்சர்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விரைவில் இலங்கை வரவுள்ளதாகப் பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இவர், ஏற்கெனவே இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புதுடெல்லியில் இவருக்கிருந்த பொறுப்புக்கள் காரணமாக அது தடைப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை தொடர்ந்தும்…
போதைப்பொருளுடன் பொலிவியா பெண் கைது
சுமார் மூன்று கிலோகிராம் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை, இலங்கைக்கு கடத்திவந்த பொலிவியா நாட்டுப் பெண்ணொருவரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே, மேற்படி பெண் கைது செய்யப்பட்டதாக, விமான நிலையப் பொலிஸார் கூறினர்.
நிமோனியா காய்ச்சலால் ஹிலாரி கிளிண்டன் அவதி
நிமோனியா காய்ச்சலால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். இவர் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் (11) நேற்று நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். அப்போது…
எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார் கேமரூன்
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜூன் 23-ம் தேதி இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். அவரை தொடர்ந்து தெரசா மே இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது,…
இந்தியாவுக்கு எதனையும் வழங்கமாட்டோம் : அரசாங்கம்
இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்கும் முடிவெதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அது தொடர்பில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிராகரிக்கும் அரசாங்கம்.“எட்கா” உடன்படிக்கை இறுதி வடிவம் பெற்றதும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னரே கையெழுத்திடப்படுமென்றும் அறிவித்தது. இதுதொடர்பாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மேலும் தெரிவிக்கையில், இன்றைய அரசாங்கம் எதைச் செய்தாலும் அதனை வெளிப்படைத் தன்மையாகவே மேற்கொள்ளும். நாட்டுக்கும் மக்களுக்கும் அனைத்தையும் அறியத்தருவோம். கட்டுநாயக்கா விமான நிலையத்தையோ அல்லது இலங்கையின்…
இரண்டு சிறுவர்களை காணவில்லை ; தேடுதல் பணிகள் தீவிரம்
திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் நேற்று (12) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள சிறுவர்கள் 9 மற்றும் 11 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களை தேடும் பணிகளில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
