News
24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி
கிளிநொச்சி – இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை
ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்தஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம்இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“உயரிய சில்லறை விலையை” மீறி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை
வற்வரி திருத்தங்களின் போது அத்தியாவசியப் பொருட்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படாது. அரசின் “உயரிய சில்லறை விலையை” மீறி அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வோரை கண்டுபிடிக்க நாடு முழுவதும் விழிப்புக்குழுக்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன என்று அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் குழு தெரிவித்தது. கொழும்பில் நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் செயலாளரும் அரசாங்கத்தின் வாழ்க்கை செலவு தொடர்பாக ஆராயும் குழுவின் தலைவருமான ரி.வி.கே.பி.தென்னகோன் மேலும்…
மத்திய மாகாணத்தில் வெளி மாணவருக்கு அனுமதி மறுப்பு
மத்திய மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் 2017 ஆம் ஆண்டு உயர்கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பித்த வெளி மாகாண மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இரத்தினபுரி மாவட்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் உயர்தரப் பிரிவுகளில் கலை, வர்த்தகப் பிரிவுகள் மாத்திரமே போதிக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான, கணித பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாணத்திற்குச் செல்கின்றனர். தற்போது, இம் மாணவர்களுக்கு அங்கும் கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதால்,…
கொழும்பு – கண்டி நகரங்களுக்கு இடையில் விசேட புகையிரத சேவை
இந்த வாரத்தின் இறுதியில் கொழும்பில் இருந்து கண்டிக்கு இரண்டு விசேட புகையிரத சேவைகள் நடைபெறும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை போயாதினம் என்பதால் அன்றைய தினம் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனையடுத்தே குறித்த புகையிரத சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளைய தினம் மாலை 5.20இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டியை நோக்கி விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் நாளை மறுதினம் காலை 5.50 மணியளவில் கண்டியிலிருந்து…
துமிந்தவை சிறையில் சந்தித்த நாமல்!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் CSN
சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட விஜய நியுஸ் பேப்பர் நிறுவனத்திடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். தனது சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க ஊடாகவே இவர் குறித்த நட்டஈட்டு பணத்தை கோரியுள்ளார். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குறித்த நிறுவனத்தின் சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்தே, ரொஹான் இந்த நட்டஈட்டு தொகையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகை செய்தியில், ‘சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் 157.5 மில்லியன் ரூபா நிதி அரசுடமையாக்கப்பட்டுள்ளது’ என்ற தலைப்பின்…
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விமல் ஆஜர்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினுடைய வாகனங்கைள முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்கவே முன்னிலையாகியுள்ளார். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதியும் விமல் வீரவன்ச அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை…
சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் வகுப்புத் தடைக்கு உள்ளான மாணவர்களுக்கு வகுப்புத் தடையினை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தரது அலுவலகத்தை மூடவிடாது நேற்று இரவு வரை இவர்களது ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை வகுப்புத்தடைக்கு உள்ளான மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் இருப்பதாகவும், இவர்களுக்கான வகுப்புத்தடை தற்காலிகமானது என்றும் எதிர்வரும் 23ஆம்…
வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதை கூறினார். மேலும், நாட்டில் தற்போது 1164 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள அனுபவமிக்க வைத்தியர்களின் ஓய்வூதிய வயதை மூன்று வருடங்கள் அதிகரிப்பதால் வைத்தியர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் ராஜித…
சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு
இலங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருளாதார உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சீனாவின் நணிங்கில் இடம்பெற்ற சீன-ஆசிய எக்ஸ்போ13 (CAEXPO13) கண்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கையின் விஷேட விருந்தினராகப் பங்கேற்று உறையாற்றினார். சீன, ஆசிய நாடுகளின் 15 தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் றிசாத்துக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தென்னாசியாவின் ஒரேயொரு…
கர்நாடகத்தில் பதட்டம் நீடிப்பு: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு
தமிழர்களுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் காரணமாக கர்நாடகத்தில் பதட்டம் நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தின. இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் சுப்ரீம் கோர்ட்டு, காவிரியில் இருந்து தமிழ் நாட்டுக்கு 20-ந்தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்…
