News
இன்று நாடு திரும்பபும் இலங்கை அகதிகள்
தமிழகத்தின் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 45 பெண்கள் உட்பட 45 பேர் இன்று இலங்கை திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்படுவதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2015ஆம்…
கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்க்க அழைப்பு
-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – புத்தளம் மக்களுக்கு பெருந்தொந்தரவாகவும்,பாதிப்பாகவும் அமையப்போகும் கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான அழைப்பினை கொழும்பு –புத்தளம் குப்பைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது. மேற்படி இயக்கம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள பிரசுரமொன்றின் மூலம் இந்த அழைப்பினைவிடுத்துள்ளது. – அந்த பிரசுரத்தில் தெரவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன – புத்தளம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையவுள்ள இந்த திட்டம் தொடர்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது மக்களினால் முன்னெடுக்கப்பட்ட…
பாலஸ்தீனில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை
பாலஸ்தீனில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் நபிவழி திடல் தொழுகை (புகைப்பட தொகுப்பு) யூத தீவிரவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்டு வருடம் முழுவதும் மரண ஓலங்களையே கேட்டுக்கொண்டிருக்கும் ஓர் தேசத்தில் இறைவன் வழங்கிய இனிய பெருநாளில் மகிழ்ச்சியுடன் இருக்கும் குழந்தைகளின் படங்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் படங்களின் தொகுப்புகள்.
வல்லரசு நாடுகளை பின்தள்ளிய இலங்கை!
உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் எவை என்ற பட்டியலை Happy Planet Index வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. ஆனால் இலங்கை 28வது இடத்தில் இருக்கிறது. முதல் 30 இடங்களிலுள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு, 1 Costa Rica 2 Mexico…
தேசிய வனத்திற்குள் குப்பைக் கொட்ட முயற்சித்தவர்கள் கைது
பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வனத்திற்குள் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் நடவடிக்கை பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் இதன்போது மற்றுமொரு ட்ரக் வண்டியொன்றில் குப்பை கொட்டுவதற்கு வந்தவர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று பொலன்னறுவை நீதவான்…
மாலி நாட்டை பாதுகாக்க தயாராகும் இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் அமைதி பணிகளுக்காக விரைவில் மாலிக்கு அனுப்பப்படவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இந்தநிலையில் இலங்கை படையினருக்கு நவீன ரக ஆயுத பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு பாதுகாப்பு அமைச்சர் மட்டக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக்கோரிக்கையும் இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இது இலங்கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி பலி
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மனநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவரது இறப்பு தற்கொலையா? அல்லது தவறி விழுந்தமையினாலா என்பது தெரியவரவில்லை எனவும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் கூறியுள்ளார். மேலும், மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது சகோதரர்கள் ஒன்றுகூடி அழுது,தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகின்றனர். நமக்கு அந்த பாக்கியம்…
தமிழ் மொழியில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவு
வட மாகாணத்தில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவினை தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்தார். வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இதன்போது மக்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மொழி பற்றிய விழிப்புணர்வு அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏறாவூரில் தாயும் மகளும் அடித்துக் கொலை!
மட்டக்களப்பு – ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து…
மருத்துவ பீட மாணவர் விடுதியில் சடலம் மீட்பு
கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரம்
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு, செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அளவில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் நிதி அமைச்சும் திறைசேரியும் ஈடுபட்டுள்ளன. புதிய வரவு, செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறார். நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் நிதித்துறை சார்ந்த நிபுணர்கள், அமைச்சுக்களின்…
