News
புலிகளை விடவும் மோசமான அமைப்பே பொதுபல சேனா! அமைச்சர் ரிசாத்
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டுவர பொதுபல சேனா அமைப்பினர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும் மக்கள் நம்பியிருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையை பொதுபல சேனா அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு மேலும்…
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி பாராட்டு
வில்பத்து சரணாலயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சட்டவிரோதமாக குடியேற்றங்களை ஆரம்பித்திருப்பதனால் வேறு சில அமைச்சுகள் இதுபற்றி முரண்பட்டிருக்கிறது என்றும் இதனால் பிரச்சினை பெரிதாவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்ட போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வில்பத்து பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வீடமைப்புத்திட்டம் வில்பத்து சரணாலயத்திற்கு உள்ளேயா, அல்லது வெளியிலா ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் முதலில் விசாரணை செய்து பார்க்க வேண்டும். அரசாங்கம் வில்பத்து சரணாலயத்திற்குள் வீடமைப்புத் திட்டத்தை ஏற்படுத்த இடமளிக்காது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து…
முசலி பிரதேச சபை பொது பல சேனாவிற்கு எதிராக கண்ட தீர்மானம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் முசலி பிரதேச சபைதயின் மாதாந்த அமர்வு நேற்று (2014-04-24) நடைபெற்றது. இவ் அமர்வின் போது சபையின் தவிசாளர் எகியா பாய் அவர்களினால் இந்த நாட்டில் இனங்களுக்கிடைய பிரச்சினையினை ஏற்படுத்தி வரும் பொது பல சேனாவின் நடவடிக்கையினை கண்டித்தும் மன்னார் மறைக்கார் தீவு மக்கள் காணி இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் காணியினை வழங்க வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு சபையினால் ஏகமனதாக நிறைவேற்றபட்டன….
மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு காணிகள் வில்பத்து சரணாலயத்துக்குரியதல்ல- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சிக்கட்டி மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ள காணி வில்பத்து சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது நீதிமன்றத்தில் உறுதியானால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு வெளியேறும் 73 குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வில்பத்து சரணாலயத்தின் எல்லை மோதரகம் ஆறு என்ற ஆற்றுடன் முடிவடைகிறது. அதற்கு வெளியே முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சுகட்டி,…
பொதுபலசோனாவின் அடாவடித்தனத்தனம்! அமைச்சர் ரிசாத் கண்டனம்
அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில்,வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும்,அதற்கு பின்னால் இருந்து செயற்படும் இந்த பொதுபல சேனாவின் செயற்பாட்டினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வண்மையாக கண்டித்துள்ளார். இன்று பிற்பகல் பொதுபலசேனா அமைப்பின் 5 மதகுருக்களும்,இன்னும் சில நபர்களுமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் செயற்பட்டதுடன்,சட்ட விரோதமான முறையில் தெடுதல் ஒன்றினை நடத்தியிருப்பது வணடமையான கண்டனததுக்குரியதாகும். மேலும்…
அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்திய பொதுபலசேனா
-சர்ஜூன் ஜமால்தீன்- அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் பிக்குமார் இவ்வமைச்சில் வட்டரக விஜித தேரரை மறைத்து வைப்பதாகவும் அவரை உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். அமைச்சின் முற்றத்தில் ஊடகவியலாளரை சந்தித்த பொதுபலசேனாவின் பிக்குமார் பின்னர் அமைச்சுக்குள் நுழைந்து வட்டரக தேரருக்கு அமைச்சர் ரிசாத் ஆதரவு வழங்குவதாகவும்…
பொதுபல சேனா அமைப்பு உண்மைதான் சொல்கின்றார்களாக என பார்க்க சென்ற ஊடகவியாளர்களுக்கு அதிர்ச்சி.
மரைக்கார் தீவு மக்களின் அவல நிலையினை நேரில் கண்ட ஊடகவியாளார்கள் சில ஊடகவியாளர்கள் கண்கலங்கின நிலையில் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் ஒரு விடயமாக மன்னார் மரைக்கார் தீவு மக்களின் காணி பிரச்சினை உள்ளது. மீள்குடியேறும் இந்த மக்கள் வில்பத்து சரணாலயத்தில் காடுகளை அழித்து வில்பத்துகு உரிய காணியில் விடுகளை அமைத்து வருகின்றார் இவர்களின் நடவடிக்கையினை தடை செய்ய வேண்டும். என பொதுபல சேனா என்ற அமைப்பினால் பல விதமாக கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் மக்களின் உண்மை…
முன்பள்ளி சிறுவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 முன்பள்ளிகளில் கல்வி கற்றும் முன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை(21) வழங்கி வைத்துள்ளார். 16 முன்பள்ளிகளில் கல்வி கற்கும் சுமார் 700 சிறுவர்களுக்கும் இவ்வாறு பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இச்சிறுவர்களின் கற்றல் நடவடிக்கையினை விருத்தி செய்யும் முகமாகவும்,சிறுவர்களின் ஆரோக்கியமான செயற்பாட்டை விருத்தி செய்யும் முகமாகவே குறித்த பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண…
கொள்கைகளை மறந்து உலமாக்கள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்
கொள்கைகளை மறந்து நாட்டிலுள்ள உலமாக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக விட்டுக்கொடுப்புகள் அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். “இலங்கையில் வாழும் 10 சத வீத முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தாய் நாட்டுக்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளனர்” எனவும் அமைச்சர்…
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் கருத்தரங்கு-அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.
அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் கருத்தரங்கு ஒன்று நேற்று (21) மாலை கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி ஆலோசகர் எம்.எம்.சுகைர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் றிஷாத் முஸ்லிம் சமூகத்துக்காக துணிவுடன் முன் நகர உறுதிபூண்டுள்ளார்
நாட்டில் மீண்டும் இன ,மத வன்முறையை தூண்டும் விதமாக நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல் படையாக தம்மை பிரகடனப்படுத்தி தடைகள் இன்றி செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவின் அடாவடித்தனங்களை சட்டரீதியாக ஒடுக்கும் நடவடிக்கைகளை அறிவித்தது போன்று முன்னெடுக்க அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மீண்டும் உறுதிபூண்டுள்ளார் . பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புக்களின் அடாவடித்தனங்களை ஜனாதிபதியும் பாதுகாப்புத் தரப்பும் கட்டுப்படுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்…
பொதுபல சேனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது
வில்பத்து வனாந்தரத்தில் 22 ஆயிரம் ஹெக்டேயர் காணி சுத்தம் செய்து பள்ளிவாசல்களை நிர்மாணித்து வீடுகளை கட்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். (2014-04-17) மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினர்.1990 ஆம் ஆண்டுகளில் ஒரு…
