Headlines

மாவனல்லையில் முஸ்லிம் வியாபாரியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது தொடர்பில் முறையான விசாரனை வேண்டும்

அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது .பல சேனாக்களின் வருகைக்கு பின்னர்தான் இந்த சம்பவங்கள் இடம்பெறுகிறது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று 18 அதிகாலை மாவனலை நகரில் தீக்கிரையாகியுள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தொடர்பில் வினவியபோதே மேற்படி தெரிவித்தார் .  மேலும் அவர் தெரிவித்த தகவலில் , மதவாதிகளின்…

Read More

ஊவா மாகாண சபை தேர்தல்! பதுளையில் அமைச்சர் ரிஷாத்

ஊவா மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பதுளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.  இதன்போது, பசறை, பண்டாரவளை மற்றும் பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Read More

பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்-ஹுனைஸ் பாரூக்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலிப்பிரதேச சபைத் தலைவர் எஹியான் மற்றும் பிரதேச சபை ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் சந்தித்து முசலிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.  இதன் போது எழுத்து மூல மகஜர் ஒன்றும் மாவட்ட…

Read More

சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சி

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புக் காடைத்தனமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அளுத்கமயில் உள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தொடர்ந்தும் குறிப்பிடும்போது குறித்த வர்த்தகர் அளுத்கமவில் சிறப்பாக தொழில் புரிந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரது உயர்ச்சியை…

Read More

முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு! அமைச்சர் ரிஷாத் பார்வை

அளுத்கம முஸ்லிம் வர்த்தக நிலையத்தின் மீது தீ வைக்கப்பட்டமை காடைத்தனமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே இந்த சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டார். குறித்த வர்த்தக நிலையத்திற்கு அமைச்சர் றிசாத் இன்று பி.ப 3 மணியளவில் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து  அவர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இதுவொரு…

Read More

தம்புள்ளைப் பள்ளிவிவகாரம் ஜனாதிபதி பணிப்பில் நிலைமை சுமுகம்

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை உட்பட முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் வியாழனன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துரையாடியதனையடுத்து தம்புள்ளை பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி முயற்சிகள் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரவைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்ற பின் அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார். தம்புள்ளையில் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதிக்கு அமைச்சர்…

Read More

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணை ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மை!

‘ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குறிய ஒரு சந்தை மட்டுமல்லாது, இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சிகளுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது.  இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணையின் ஊடாக எடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிட்ட உணவு, பானங்கள், மின்னணுவியல், நவரத்தினங்கள்,   நகைகள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை திறனை அடையாளம் காண உதவுவதோடு வர்த்தக ஒத்துழைப்புக்கான பரஸ்பர நன்மைகளை நிலைநாட்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இலங்கை…

Read More

500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் ரிஷாட் வழக்கு

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தனக்கு 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை (7) வழக்கு தாக்கல்செய்துள்ளார். பொதுபல சேன அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் இல்லையேல் வண.கலகொட அத்தே ஞானசார தேரரிடம் ரூபா 500 மில்லியன் நட்ட ஈடாக…

Read More

முஸ்லிம்களை மீளக் குடியேற்ற முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே! அமைச்சர் ரிசாத்

மண்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பான்மையினர் வாழ்ந்த பிரதேசமாக  3 இடங்களில் பெரும்பான்மையினம சார்ந்த பெயர்ப்பலகைகளை நாட்டி விட்டுச் சென்றுள்ளனர்.  என அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் தெரிவித்தார். இன்று கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் சமுகஜோதி ரபீக்கின் மகன் டாக்டர் ஏ.ஆர். அசீம் எழுதிய “ எனக்கும் உனக்குமான உலகம்”  நோய் விழிப்புணர்வு நூலான வரும்முன் காப்போம்” எனும் இரு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.  இந்…

Read More

திவிநெகும மூலம் 1.8 மில்லியன் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடு­விப்­பு

வறு­மைக்கு எதி­ராகப் போராடி மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘திவி­நெ­கும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்­திட்டம் வறு­மையற்ற இலங்­கையை உரு­வாக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை என கைத்­தொழில் மற்றும் வர்த்­தகத்து­றை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். மஹிந்த சிந்­த­னைக்கு அமை­வாக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் வழி­காட்­ட­லுடன் வாழ்வின் எழுச்சி திட்டம் (திவி­நெ­கும) நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நிகழ்வு அண்­மையில் வவு­னியா பிர­தேச சபை சமுர்த்தி சங்­கத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வினை பாரம்­ப­ரிய கைத்­தொ­ழில் மற்றும் சிறு­தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர்…

Read More

பஹ்ரெயினிலுள்ள இலங்கையரை ஜனாதிபதி சந்திப்பு! அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பங்கேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹ்ரெயின் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரெயினிலுள்ள இலங்கைத் தூதரகத்தினரால் நேற்று பிற்பகல் ரிட்ஸ் கால்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பஹ்ரெயினில் வாழும் இலங்கை பிரஜைகள் பலரும் இதில் கலந்துக் கொண்டனர். ‘காலங்கடந்தாவது பஹ்ரெயின் அரசுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தமை தமக்கு மகிழ்ச்சியை தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இங்கு தூதரகம் ஒன்று திறக்கப்பட்டமையினால் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகவும்   ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று பஹ்ரெயின்…

Read More

பொதுபலசேனாவுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தால் பதவி துறப்பேன்!

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று பொதுபல சேனாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன்.அதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவறையெல்லாம் நான் மேற்கொள்வேன். இந்த நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் அதனையும் துறப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். நாட்டில் சிறுபான்மையினர் கௌரவமாக வாழ்வதற்காக எவ்வாறான தியாகத்தையும் மேற்கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத்…

Read More