News
முடியாவிட்டால் சர்வதேச உதவியைக் கூட நாட நானும் எனது கட்சியும் தயார் ;தேரருக்கு பதிலடி
நேற்று முன்தினம் (01) பாராளு மன்றத்தில் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் மு.ப. 10.30 மணியளவில் பிரதி அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்திற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர், இந்து, கிறிஸ்தவ, பௌத்த முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் அத்துரலிய ரத்ன தேரருக்கும் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்கு வாதம்…
அ.இ.ம.காங்கிரஸினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராக ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரமே கொழும்பு வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டஅங்கீகாரமே கொழும்பு மாவட்ட வெற்றி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர்எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் ஒருஆசனத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர்தெரிவித்தார். அவர் மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் நடைபெற்று முடிந்த…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு மக்கள் அமோக ஆதரவு
அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பு மக்கள் அங்கிகரித்துள்ளனர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பலத்த போட்டிக்கு மத்தியில் முதல் முறையாக தனது சொந்த சின்னத்தில் தனித்து களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 15491 வாக்குகளைப்பெற்று மேல்மாகாண சபையில் ஆசனமொன்றினை கைப்பற்றியுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு மக்களின் ஆணையை கோரிய கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவொன்று என…
நீங்கள் வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்;அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு
மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு ஓர்ஆசனத்தைப் பெற்ற நமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஸாத் பதியுதீன் தெரிவித்தார்.தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- வடக்கு கிழக்கிற்கு வெளியே முதற்தடவையாக தனித்து எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் களம் இறங்கியபோது கொழும்பு மாவட்டத்தில் ஓர் அங்கத்தவரேனும் எமது கட்சிக்கு இருந்திருக்கவில்லை. மிகக்குறுகிய காலத்தில் நாம் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறியே பிரசாரத்தில் ஈடுபட்டோம்….
இனவாத சக்திகளின் வாய்க்கு பூட்டுப்போடுவோம்-றிசாத் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொழும்பு புதுக்கடை இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதித்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உங்கள் முன்னிலையில் உரையாற்றுதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் அரசியல் செய்து பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பிரதிநிதிகளை பெற்றிருக்கின்றது. அந்த மக்களின் விடிவுக்காக உழைத்தும்…
முஸ்லிம்களுக்கு எதிராக பொய்பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஹூனைஸ் பாரூக்
பள்ளிவாசல்கள் தகர்ப்புக்கு பௌத்தர்கள் காரணமல்ல எனவும் முஸ்லிம் அமைப்புக்களிடையிலான மோதலினாலேயே இவை உடைக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்தை முற்றாக மறுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார். இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்:- இஸ்லாமிய மதத்தில் இருக்கும் வேறு பிரிவினர்களுக்கிடையலான போராட்டமே பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமைக்கு காரணம், குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் ஆகிய இரு பிரிவினர்களுக்கிடையலான மதப்போராட்டமே பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க பத்தரமுல்லை…
பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டித்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை
1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு கடந்த 24 வருடங்களாக அகதி முகாம்களிலும் ஓலைக் கொட்டில்களிலும் அவதி வாழ்க்கை வாழ்ந்து வரும் வடபுல முஸ்லிம்கள் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து தாம் வாழ்ந்த பிரதேசங்களில் குடியேறும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியை தடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு அண்மையில் பல்வேறு காழ்ப்புணர்வு கொண்ட கருத்துக்களை பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரப்பி வருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்துவரும் பொதுபலசேனா தற்போது…
ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பல அதிதிகள் வருகை தந்தனர். இக்கூட்டத்தில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாளிகாவத்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி தேர்தல் பிரச்சாரக்கூட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (25) நடைபெற்றது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலர் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான உலமாக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். மௌலவி முபாரக் தலைமையில் இது நடைபெற்றது.
பொய்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுபல சேனா 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் – றிஷாத் பதியுதீன் (video)
வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரியுள்ளார். இதுதவிர, வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுபல சேனா கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விகிதாசார அடிப்படையற்ற வகையில் மக்களை மீளக்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் மீது தாக்குதல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட 31ம் இலக்க வேற்பாளர் சஹார் இன் புதுக்கடை தேர்தல் காரியாலயம் 2014.03.24ம் திகதி இரவு 11.00மணியளவில் தாக்கப் பட்டுள்ளதை படங்களில் காணலாம்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் மூர்வீதி மற்றும் தலைமன்னார் மக்களுடனான சந்திப்பு
-எம்.சுஐப்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேறி கொழும்பிலே வாழும் யாழ்ப்பாணம் மன்னார் மூர்வீதி, தலைமன்னார் மக்களை கொழும்பில் சந்தித்தபோது ஆற்றிய உரையின் தொகுப்பு நாமெல்லாம் அஷ்ரப் அவர்களின் காலத்திலே முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள். வடபுலத்திலே மு.காவை வளர்த்தவர்கள். தேர்தல்களில் மு.காவை ஆதரித்து உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினோம். அஷ்ரப் அந்த உதவியை மறக்கவில்லை. வடபுல மக்கள்மீது நன்றியுள்ளவர்களாகவே வாழ்ந்தார். 1990ம் ஆண்டு நாம் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அகதியானோம். 1994இல்…
