News
சமூகத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் போராடும் அருமையான போர் வீரன் அமைச்சர் ரிசாத்- அஸ்வர் எம்.பி. புகழாரம்
விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களது மீள் குடியேற்றத்திற்காக சுயநலம் பாராது முழுமையான அர்ப்பணிப்புடன் போரா டுகின்ற ஓர் அருமையான போர் வீரனாக அமைச்சர் ரிசாத் பதியுதீனைத் தான் பார்ப்பதாக ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி பாராளு மன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். அன்று புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அநாதரவாக புத்தளத் திற்கு வந்தபோது நான் ஒரு பிரதியமைச்சராக இருந்து அம்மக்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்தேன். இன்று பல வருடங்களாக அம்மக்களுக்காக இந்த இளம் அமைச்சர் பதியுதீன் போராடுகிறார்….
ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்!
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்ளிவாசல்கள் மற்றும் 60 பாடசாலைகள் அழிக்கப்பட்டன. ஆனால் இன்று சஜித் பிரேமதாச முஸ்லிம்கள் வில்பத்து காட்டில் குடியேற்றப்படுவதாக விமர்சித்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீளக்குடியேற்றி அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஜனாதிபதி வழங்குவார் என்ற திடமான நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்….
பேரினவாதிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக ஐ.தே.க. ஏன் குரல்கொடுப்பதில்லை?
வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஐ.தே. கட்சிக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் இன்று வட கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பேரினவாதிகளின் இனவாத செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கட்சி ஏன் பேசாமல் இருக்கிறது? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு…
வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய நிகழ்வு ; பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்
நிகவரெட்டி, வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு 2014.05.22ம் திகதி கல்லூரியின் அதிபர் எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய இணைந்து செயற்பட தயார்- அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்
நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்வதிலுள்ள சாத்தியப் பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக மலையக முஸ்லிம் கவுன்சிலின் (UCMC) அழைப்பில் பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, வெளிமட எப் சி மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், “ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயார்.” என்று தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ்…
வெலிமடையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மக்கள் சந்திப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வெலிமடை எப் சி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வெலிமடை மற்றும் அயல் பிரதேசங்களின் முக்கிய தலைவர்கள், பிரதேச வாசிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ரிசாத் காடளிப்பதாக கூறப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
-கே.சி.எம்.அஸ்ஹர்- அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வடமாகாணத்தில் இருந்து 1990ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அம்மக்களின் மக்கள் பிரதிநிதி இம்மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் இவரே,வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் 23 வருடங்களாகப் படுகின்ற அகதிவாழ்வையும் ,அவல வாழ்வையும் இவரைவிட அதிகம் அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. இவரின் ஒரே சிந்தனை தனது அரசியல் காலப்பகுதிக்குள் எப்படியாவது வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களைக் கௌரவமாக மீளக்குடியேற்றி விடவேண்டும் என்பதே ஆகும். பொதுசன முன்னணி அரசின் வெற்றிக்கும்,ஜனபதிபதியின் வெற்றிக்கும் இவரும்,இம்மக்களும் செய்தவை…
இலங்கையை சில நாடுகளுடன் மோதவிட சதி!
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எமது அரசாங்கத்துடன் மோதவிடும் சதித்திட்டமே போதை வஸ்தை முதன்மைபடுத்தி எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையாகும். எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21-05) இடம்பெற்ற ஐ.தே.கட்சி அரசுக்கெதிராக முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…
முஸ்லிம் சமுகத்தின் மீது காடைத்தனத்தை கட்டவிழ்த்து முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்-றிப்கான் பதியுதீன் எச்சரிக்கை
முஸ்லீம் சமுகத்தினை தொடர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்து அந்தச் சமுகத்தின் பொறுமையைச் சோதிக்க, இனவாத கும்பல்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். அளுத்கமையில் முஸ்லீம் வர்த்தகருக்குச் சொந்தமான நிலையமொன்று எரிப்பு முடிந்து சூடு தனிவதற்கு முன்னரே மாவனல்லையில் மற்றுமொரு முஸ்லீம் வர்த்தகரின் ஹாட்வெயார் கடை ஒன்றை எரித்துள்ளனர். ஏனைய இனங்களுடன் சகோதரத்துவமாக வாழநினைக்கும் முஸ்லீம் சமுகத்தின் மீது பொதுபலசேனா இயக்கம் ஏன் இவ்வாறான காழ்ப்புணர்வுடன் செயல்படுகின்றது. இந்த இயக்கம் கடந்த 3 வருடகாலமாக…
முஸ்லிம் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு
அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று (19) திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது இச் சந்திப்புக்கான திகதி தீர்மானிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் போக்கு உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பின் போது பேசப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எஸ்.கே)
பிரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களை மு.கா ஒன்றிணைக்க வேண்டும்
பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கௌரவிப்பு வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அமீர் அலி பிரிந்து போயிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஓரணியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு…
மாவனல்லையில் முஸ்லீம் கடைகளின் தீவைப்பு – விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி ரிசாத் வேண்டுகோள்!
மாவனல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஸ்தல விசாரணைகளினை மேற்கொண்டு வரும் பொலிஸாரிமே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாவனல்ல குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சூத்திரதாரிகளினை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது…
