News
பொதுபலசேனாவின் அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமியுங்கள் -அமைச்சர் றிசாத் பதியுதீன்
பொதுபலசேனாவினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது. அத்துடன் ஜாதிகபலசேனாவினால் கடந்த புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை பொதுபலசேனா அமைப்பு குழப்பியதற்கும் அக்கட்சி கண்டணம் வெளியிட்டுள்ளது. இனங்களிடையே புரிந்துணர்வையும் சேர்ந்து வாழ்தலையும் தனது நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜாதிகபலசேனா என்ற அமைப்பினால் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் அல்லது வழிநடத்தியவர்களில் முக்கியமானவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து உருவானவர்கள்-ஹுனைஸ் எம்.பி
மகாப்பொல வழங்கும் நிகல்வில் ஹுனைஸ் எம்.பி கருத்து….. ஒரு நாட்டில் இடம்பெறுகின்ற புரட்சியைப் பொறுத்த மட்டில் அதாவது நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதாக இருக்கலாம் அல்லது அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அதில் பல்கலைக் கழக மாணவர்களின் பங்கு அதிகம் உள்ளது. தென் இலங்கையில் இடம் பெற்ற ஆயுதப் போராட்டமோ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் இதன் ஆரம்பம் பல்கலைக் கழகத்திலிருந்து உருவாக்கப் பட்டது….
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதித் தவிசாளர் சுபைருக்கு நன்றி தெரிவிப்பு!
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சியிலிருந்து எமது நியமனத்தைப் பாதுகாத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு புதிதாக கிழக்கு மாகாணத்தில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளனர். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்…
வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் எதிர் நோக்கும் சவால்களும்.
-சுஐப் எம். காசிம் – நமது நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் எவ்வாறு நீண்ட காலம் வாழ்கிறார்களோ அவ்வாறே நீண்ட காலம் வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகும். முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுடனும் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடனும் அன்பு பேணி ஐக்கியம் வளர்த்து வாழ்ந்து வருபவர்கள். சமய ரீதியான தனித்துவங்களும் வழிபாட்டு முறைகளும் வேறுபட்ட போதும் மொழியால் ஒன்றுபட்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள். வடக்கு…
மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட அகதி முஸ்லிம்களுக்கு கிடையாதா?-றிப்கான் பதியுதீன்.
மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட அகதி முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படி ஒரு சோதனை என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(12) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில். 1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அனாதரவற்ற முஸ்லிம்களுக்கு இன்று பொது பலசேனாவால் நெருக்கு வாதங்கள் ஏற்பட்டுள்ளது. -இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.அந்த வகையில் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு இது. அழகான முறையில் கொண்டு செல்லும் அதிமேதகு ஜனாதிபதியின்…
புலிகளைப் போன்று பொதுபல சேனாவும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருகின்றது –ரிஷாட் பதியூதீன்
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே பொதுபல சேனா இயக்கமும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். ஏதெனும் ஓர் இடத்தில் எந்த நேரத்திலாவாது போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ நடத்தும் பொதுபல சேனா எவரின் கேள்விக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக சென்று விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சிறுபான்மை இன மக்களினால் எதிர்நோக்கப்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்து விசாரணை நடாத்த ஓர் விசாரணை…
வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டம் கண்காட்சியை அமைச்சர் றிஷாத் குழுவினர் பார்வையிட்டனர்.
வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியும், மலிவு விற்பனையும் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறித்த கண்காட்சியை இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் வி.பவாகரன் மற்றும் மன்னார் பிரதேசச் செயலக பணியாளர்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இந்த நிலையில் இன்று மாலை…
அபிவிருத்தி நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறுகின்றது – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
கடந்த நான்கு வருடங்களில் கல்வி,கலாசாரம் ,தொழில்வாய்ப்பு, உற்பத்தி ரீதியாக பாரிய அபிவிருத்தியினை நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறிவருகின்றது. என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவத்தார். நேற்று முல்லைதீவு நகரில் பிரதேச சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘வாழ்வின் எழுச்சி’ என்ற புத்தாண்டு சந்தையை திறந்து வைக்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்நு இங்கு உரையாற்றுகையில்:…
புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்
விடுதலைப் போர் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளையும் உயிர் காவுகளையும் முன் கொண்டு வருவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்க்குச் சொல்ல வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதர்ந்த அமர்வு கடந்த மாதம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் நாட்டில் இடம்பெற்ற 30வருட கால யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் கூடியளவு…
இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை-
பொதுபலசேனா அதிதீவிரவாத இயக்கமாகும். இவ் இயக்கம் முஸ்லீம்களின் மீது தொடர்ந்தும் வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களின் பொறுமையை சோதிக்க நினைக்கின்றது. பௌத்தர்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு அதில் குளிர்காய நினைக்கும் இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை. என வடக்கு மாகணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார். நாமும் இந்த நாட்டின் தேசிய இனமே. நாம் இங்கு வந்தான் வரத்தான் அல்ல. அமைதியாக வாழ்ந்து வரும் எம்மீது அடவாடித்தனத்தையும், அடக்குமுறையையும் பிரயோகித்து காட்டுமிராண்டித்தனமான இந்த இனவாத சக்திகளின்…
அமைச்சர் ரிசாத் மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச மக்களிடம் கலந்துரையாடல்
-இப்னு ஜமால்தீன்- மறிச்சிக்கட்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக நேற்று (2014-04-05) மறிச்சிக்கட்டிக்கு விஜயம் செய்தார். 1990 ம் ஆண்டு புலிகளால் துரத்தப்பட்ட இம்மக்கள் இப்பிரதேசத்தை விட்டு விரட்டப்பட்டவேளை 65 குடும்பங்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது 270 குடும்பங்களாக அதிகரித்திருப்பதனால் மறிச்சிக்ட்டி முஸ்லிம்கள் இடப்பிரச்சினயை எதிர்நோக்கி வருகின்றனர்.தமது பூர்வீகக் காணிகளில் காணிகளை பெற்றுக்கொள்வதில் இம்மக்கள் பல இடர்பாடுகளை…
ரிதிதென்ன இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா
மட்டக்களப்பு-ரிதிதென்ன அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய ஒருங்கமைப்பாளருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரிதிதென்ன இக்ரா குர்அன் மதரசா மாணவா்களின் பல்வேறு பட்ட திறமைகளைப் பாராட்டி பிரதம அதிதி பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாMA/MP அவர்களினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இன்றைய நிகழ்வின் போது விசேட…
