News
எனக்கு எதிராக 100 மடங்கு எழுதினாலும் நான் பயப்படபோவதில்லை;இம்மக்களுக்காக போராடுவேன்
தமிழ் மக்களோடு முஸ்லிம் சிங்கள மக்களுக்கும் சிறந்த தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு அத் தீர்வு கிடைக்குமாயின் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார். செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ‘வட மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். இவ்வாறு வாழ்கின்ற சூழலை குழப்புவதற்காக அல்லது…
செட்டிக்குள பிரதேச சபையின் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்வு
செட்டிக்குள பிரதேச சபையில் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை என்பவற்றை முறையே வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைப்பதையும். மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.
இந்தியாவில் தோன்றிய அரசியல் மாற்றத்தினால் இலங்கையுடனான வர்த்தக உறவு அதிகரிக்கும்
இந்தியாவில் புதிய பிரதமர் பதவியேற்றமை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்களை ஏற்ப டுத்துவதோடு இலங்கை, இந்திய வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றமடையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இலங்கை வந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் உயர்மட்ட பிரதிநிதி குழுவின ருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் உரையாற்றும் போதே…
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை பொதுப் பிரச்சினை. அது தொடர்பில் மூன்று அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிவாசலை இடமாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு ள்ளதாக வெளியான செய்தி குறித்து ஆச்சரியமடை ந்ததோடு இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்விடயத்தில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாய் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை தனிப்பட்ட பிரச்சினையல்ல. அது…
தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக வருமானம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்
தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று (03.06.2014) அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடும்போதே தென்கொரிய தூதுவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் உழைப்பு எமது நாட்டுக்கு அதிக வருமானத்தையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பனி பாராட்டுக்குரியது. அதற்காக விசேடமாக…
அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அறிக்கை விட வேண்டாம்- றிப்கான் பதியுதீன் சாட்டை
சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்றதும் ஓர் அப்பட்டமான குற்றச்சாட்டும் ஆகும். வடக்கில் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உழைத்து வரும் அமைச்சர் றிஷாட்டின் பணிகளைப் பொறுக்கமாட்டாத இனவாத சக்திகள் அவர்மீது காழ்ப்புணர்வான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக தவறான…
பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது-முத்துமொஹமட்
வவுனியா பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதும் கண்டனத்துக்குஉரியது. என வவுனியா மாவட்ட தமிழ் முஸ்லீம் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் எம். ஜ. முத்துமொஹமட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது– மேற்படி மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கூறியதாக அப்பகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவத்தம்பி ஆனந்தன் தெரிவித்துள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திகளுக்கு…
இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக அப்துல் பாரி கண்டனம்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் வவுனியா பாரதிபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களை வெளியேறுமாறு நேற்று (28) மிரட்டல் விடுத்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்தானது, இனவாதமே அன்றி வேறொன்றுமில்லை. ஓற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே தயவு செய்து இனவாத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என வவுனியா மாவட்ட இன நல்லுறவிற்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இக் கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:-…
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மன்னார் விஜயம்
பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் காசீம் குரைஸ் இன்று (28) காலை அமைச்சர் றிசாத்;பதியுத்தீனின் அழைப்பின் பேரில் மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். அவர் அப்பிரதேசங்களில் எவ்வித அடிப்படையுமின்றி வாழ்ந்து வரும் முஸ்லீம்களையும் அவர்களது அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படம்.
முஸ்லிம் மீள் குடியேற்ற பணி மிகவும் சுமை மிகுந்ததொன்றாகும்
-இர்ஷாத் றஹ்மத்துல்லா- காலம் கடந்த ஞானம் தொடர்பில் அவ்வப்போது பலரும் பேசுவார்கள்.ஒரு விடயத்தை செய்ய வேண்டிய காலத்தில் அதனை செய்யாது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் செய்கின்ற போது அதனைது பெறுமதியினைாக எடுத்துரைக்கும் போதே இந்த பழமொழியினை கேட்கலாம்.அது அப்படியும் பொருந்தும் இல்லாவிட்டால் இப்படியும் பொருந்தும்.எது எவ்வாறாக இருந்தாலும் இ்ன்றைய காலத்தில் இந்த வெளிப்பாடு ஒரு சாதகமான சூழலுக்கு வழியிட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எடுத்ததற்கெல்லாம் விமர்சனங்களை செய்வதும்,குற்றம் சாட்டுவதும் இன்று பழகிப்போன வழக்கமாகும்.இவற்றுக்குள் மத்தியில் நல்லதை…
முஸ்லிம் சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பவர் அமைச்சர் ரிசாத்-மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோண்
வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக்காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காணவேண்டுமென்பதற்காகவே இங்கு நான் விஜயம் செய்தேன். மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோண் நேற்று முசலிப் பிரதேசத்தில் விஜயம்செய்து அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சருடன் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார். இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் மேன்மையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்கவும் ஓர் அமைச்சராகவும்…
முஸ்லீம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை இனவாதம் பேசி தடுக்காதீர்!
யுத்தத்தினால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது, இனவாதத்தை தூண்டவேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தினவீரக்கோன் தெரிவித்துள்ளார். இன்று(26) மண்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குணரத்தினவீரக்கோன், மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மண்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடினார். இதன்போது, அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹனைஸ் பாருக் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய ஆகியோறும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு…
