News
இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் – ஞானசாரர்!
இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள பௌத்த மத உரிமைகளை உறுதி…
இனங்காணப்பட்டால் அங்கொட வைத்தியசாலைக்கு
எபோலா உயிர் கொல்லி வைரஸ் இலங்கைக்குள் நுழையாதிருக்கும் வகையில் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன ஏதாவது தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் உடனடியாக அங்கொட தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி. ஜி. மகிபால தெரிவித்துள்ளார். எபோலா வைரஸ் நமது நாட்டினுள் எந்த வகையிலும் நுழைய முடியாத வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் பூரண…
உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள “எபோலா”
சேவை அளிக்கும் தன்னார்வ மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காத நிலை ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது உயிர்கொல்லியான எபோலோ. இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ராலியோன் ஆகிய நாடுகளை சேர்ந்த 1232 பேர் பலியாகிவிட்டனர். மிகவேகமாக ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் இரு…
தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று!
அப்துல்லாஹ் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடு பூராகவும் இடம்பெறுகின்றது. நாடு பூராகவும் 2870 பரீட்சை மத்திய நிலையங்களில் 335585 பரீட்சார்த்திகள் இன்று இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார். பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம், பரீட்சார்த்திகளுக்கும், பெற்றோருக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. விடை எழுதுவதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் தொடர்பாக மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். பகுதி ஒன்று வினாப்பத்திரம் 45 நிமிடங்களை உள்ளடக்கியதாகும்….
பொதுபல சேனா அமைப்பின் பேஸ்புக் பக்கம் மீள் இயக்கம்
பொதுபலசேனா அமைப்பின் பேஸ்புக் பக்கம் இன்று முதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. பேஸ்புக் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்து பொதுபலசேனா அமைப்பின பேஸ்புக் பக்கம் கடந்த ஜுன் மாதம் முதல் பேஸ்புக் நிர்வாகத்தினால் அகற்றப்பட்டது. குறித்த சமயத்தில் பொதுபலசேனா அமைப்பின் பேஸ்புக் பக்கத்திற்கு 10,000 விருப்பங்களும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் பக்கத்திற்கு 15,000 விருப்பங்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. இந்த நிலையிலேயே குறித்த…
ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா வேட்பாளர்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தாம் களமிறக்க உள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வுக்கும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அறிவிக்க உள்ளதாகவும் அவ்வாறு இந்த யோசனைக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் தாம் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (VK)
மடு ஆலயத்தில் பறந்தது எமது விமானம் அல்ல ; தெரிவிக்கிறது விமானப் படை
மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில்…
சீன ஜனாதிபதி, இலங்கை வருகிறார்
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய அமைப்பு உருவாக்கம்?
ஆளும் கட்சியின் பௌத்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு இணைந்து செயற்படவுள்ளனர். பௌத்த மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புத்திஜீவிகளும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். மாநாயக்க தேரர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது….
ஞானசார தேரரிடம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்கும் அமைச்சர் ராஜித
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூபா 100 கோடி வழங்க வேண்டும் எனக்கோரி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின தனது சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்தின சார்பாக அவரது சட்டத்தரணி சனத்வீரரத்தின இந்த நோட்டீஸை கலகொட அத்த ஞானசார தேரருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த…
பாணந்துறையில் பொதுபல சேனா
பாணந்துறை கெஸல்வத்தை திக்கல வீதியில் உள்ள பூர்வராம பௌத்த விகாரையில் பொதுபலசேனாஅமைப்பின் அனுஷ்டான பூஜை நாளை ஞாயிறு பிற்பகல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் பாணைந்துறையில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வுக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிப்படுகின்றது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் பொதுபலசேனாவின் நிகழ்வு நடைபெறவுள்ளதால்முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதேச முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். பொதுபல சேனாவின் நிகழ்வு தொடர்பில் பாணந்துறையில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு…
முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலே ஊவா தேர்தல்- அமைச்சர் ரிசாத் சூளுரை
முஸ்லிம்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை தான் பார்ப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிதித்தார் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிடும் அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மு.கா. , அ.இ.ம.கா இத்தேர்தலில் ஒற்றுமைபட்டதானது நாடு பூராகவும் உள்ள 20 இலட்சம்…
