News
பள்ளிவாயல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை
திருகோணமலை இராணுவமுகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பயன்பாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் இல்லை. பள்ளிவாயல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான பிரகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறினார்….
இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு
பழுலுல்லாஹ் பர்ஹான்: இஸ்லாமிய இளைஞர் முன்னணியினால் நேற்று முன்தினம் (19) நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் Dr. பவ்சுள் ஹக் அவர்களால் நடத்தப்பட்டது. இதில் சுமார் 67 மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர். இந்தக்கருத்தரங்கில் மாணவர்களின் உளவியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்றத்தை பார்வையிடவரும் மாணவர்களுக்கு நினைவுச் சின்னம்!
பாராளுமன்றத்தை பார்வையிட வரும் மாணவர்களுக்கு ஏதாவது நினைவுச் சின்னமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமுத்திர பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை பார்வையிடுவதற்காக மாகொல அநாதை இல்லத்தில் இருந்து 135 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். இது தொடர்பில் சபைக்கு தலைமை வகித்த குழுக்களின் பிரதித்தலைவர் சந்ரகுமார் முருகேசுவின் கவனத்திற்கு கொண்டு வந்த ஏ.எச்.எம்….
பலஸ்தீனத்துக்கு நிதியுதவி வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: ஐ.தே.க
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டார். இன்னொரு நாட்டுக்கு பொதுமக்களின் பணத்தை வழங்கும் போது அங்கீகாரம் போன்ற நடைமுறைகள் அவசியம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். பலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இலங்கை நாட்டின் தலைமைக்கு அவ்வாறு கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். இலங்கை ஜனாதிபதி முன்னரும் இவ்வாறான நிதியளிப்புகளை மேற்கொண்டுள்ளார். உகண்டாவின் தொழில் பயிற்சி…
காலநிலை மாற்றம்: இலங்கையில் யாழ். மற்றும் கம்பஹா மாவட்டங்கள் மோசமாக பாதிப்படையும்!
கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கிறார்கள் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், அறிவு முகாமைத்துவம் மற்றும் நீடித்த அபிவிருத்திக்கான துணைத் தலைவர் பிந்து லொஹானி தெரிவித்துள்ளார். ஆகவே, கடுமையான காற்றின் அதிகரிப்பு, வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றம் ஆகியவை அவர்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். தெற்காசியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்…
இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரதி நிதிகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம்
இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிட உள்ளனர். போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வைளயிட உள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.A
இலங்கை அகதிகள் 157 பேர் விடயத்தில் ஐ.நா தலையிடும் நிலை
மெல்பேர்ன் மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற குறித்த அகதிகள் தொடர்பான வழக்கின் போது, எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் 15ஆம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி நீதிபதி கென்னத் கெய்னின் தலைமையில் முழுமையாக கென்பராவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒக்டோபர் விசாரணையின் போது ஐக்கிய நாடுகள் சபையையும் வழக்கில் தொடர்புபடுத்த அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு குறித்த 157 அகதிகளும் இலங்கைக்கு மீண்டும் அனுப்பப்படக்கூடாது என்பதற்காகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆழ்கடலில் அவுஸ்திரேலிய…
புறக்காட்டையில் மிதக்கும் சந்தை நாளை திறந்துவைக்கப்படும்!
கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தை நாளை 22 ஆம் திகதி மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட வுள்ளதாக காணி முகாமைத்துவ திட்ட அமுலாக்கல் சிரேஷ்ட ஆலோசகர் வீரசேன அதிகாரி தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது; சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு…
மாலைதீவு – இலங்கை உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு
இலங்கை விமானப் படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க, மாலைதீவு பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அஹமட் சியாம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறுதி நூற்றாண்டு இதுவே’ – சம்பிக்க ரணவக்க
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறுதி நூற்றாண்டு இதுவென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்னும் சில தசாப்தங்களில் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்நோக்கிய நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கள மக்களின் வருடாந்த சனத்தொகை அதிகரிப்பு வீதம் 0.74 வீதமாகும் என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் சனத்தொகை இரட்டிப்பாக உயர்வடைதற்கு இன்னமும் 160 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பாடசாலைகளின் தோற்றத்தினால் சிங்கள…
பொதுபல சேனாவின் சவால்களை எதிர்கொள்ள அமைச்சர் ராஜிதவுக்கு பூரணமான உதவி – பசில் ராஜபக்ஷ
பொதுபல சேனா அமைப்பின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பூரணமான உதவி வழங்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் பேரை கலந்து கொள்ள செய்து ராஜித சேனாரத்ன தனது அரசியல் பலத்தை நிரூபித்து காட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, மகிந்த அமரவீர, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் உரையாற்றியிருந்தனர். இதனிடையே…
இலங்கை சுங்கப் பிரிவினரின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும்
இலங்கை சுங்கப் பிரிவினரின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பொது பல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் மற்றும் பால் மா வர்த்தகம் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞனாசார தேரர் அறிவித்துள்ளார். சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் குறித்து எழுத்து மூல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன பால் மா மோசடி வர்த்தகம் தொடர்பிலான…
