News
ஐ.நா. விசாரணைக்குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது; அதற்கு மக்களும் ஆதரவு: சுசில் பிரேமஜயந்த
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்கிற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளினால் விசாரணைக்குழு அமைக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற அரசின் நிலைப்பாட்டிலும், ஜனாதிபதியின் முடிவிலும் மாற்றங்கள்…
எமது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வெளிநாட்டவர்களை அனுமதிக்கப் போவதில்லை: ராஜித சேனாரத்ன
எமது கடல் எல்லைக்குள் எந்தவொரு காரணம் கொண்டும் எந்தவொரு வெளிநாட்டவரையும் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சரான ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார். மன்னார் குடாவில் மீன் விருத்தி செய்வதற்கு பல காலங்கள் செல்வதால் மூன்று வருடத்திற்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு இடைக்கிடை அனுமதி வழங்குமாறு பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியம் சுவாமி நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் உரையாற்றும்…
அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது – ஜே.வி.பி
அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த இலத்திரனியல் அடையாள அட்டையின் ஊடாக மக்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்கும் உரிமை முடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அரசாங்கம் செய்யும் பிரச்சாரம் ஆச்சரியமளிக்கின்றது. எனினும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை….
இலத்திரனியல் அடையாள அட்டை முறைமை சிறந்தது: பிரதமர்
புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான தகவல்களை திரட்டும் போது நபர்களின் அந்தரங்கத்திற்கு பாதுகாப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய அடையாள அட்டையின் ஊடாக நாடு மக்களும் பாதுகாக்கப்படுகின்றனர். இன்று பலர் பல்வேறு தேவைகளுக்காக சாரதி அனுமதிப் பத்திரத்தையே சமர்ப்பிக்கின்றனர். ஆட்பதிவு திணைக்கதளத்தின் ஊடாக தரவுத் தளமொன்று உருவாக்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!
முஹம்மது மசூத் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன். பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன். இப்போது நானும் ஒரு முஸ்லிம். சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும். கீல்லிங்க்டொன் என்ற தனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!
அங்காரா: இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு (ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்தநூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கியசீடராவார். இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப்பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை…
முஹம்மது நபி பற்றி தவறாக கூறிய கிறிஸ்துவ பாதிரியாரிடம் சவால் விட்ட 8வயது சிறுவன்!
-முஹம்மது மசூத் லண்டன் நகரில் பாதிரியார் ஒருவர் முஹம்மது நபி அவர்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதனை கவனித்த 8 வயது சிறுவன் அருகில் இருந்த முதியவரிடம் தங்களின் சேரை 5 நிமிடம் தாருங்கள் என்று கேட்டு அதன் மேல் ஏறி நின்று கிருஸ்த்துவ பாதிரியாரிடம் நீங்கள் முஹம்மது நபியை பற்றி தவறாக பரப்புரை செய்கிறீர்கள். முடிந்தால் ஆதாரத்தை தாருங்கள் என்று சவால் விட்டான். இதை பார்த்து கொண்டு இருந்த முஸ்லிம் அல்லாத…
ஜனாதிபதி தலைமையில் 5000 பேருக்கு காணி உறுதிகள் கையளிப்பு!
மஹிந்த சிந்தனை தூரநோக்கு திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் 13 ஆவது தேசிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் இன்று (19) நடைபெற்றது. நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 5000 காணி உறுதிகள் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டன. அவர்களுள் ஒரு சிலருக்கு ஜனாதிபதி தமது கரங்களால் காணி உறுதிகளைக் கையளித்தார். மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்க, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பிரதியமைச்சர்…
தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தமை பெரிய தவறாகும்; ரொஹான்
தமிழ் தேசிய கூட்டணி, எல் டி டி ஈ அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்தது பெரிய தவறாகும் . இவர்களிடையே இன்னும் தீவிரவாதம் இருக்கிறது இவை தீவிரவாத கருத்துக்கள் கொண்ட கட்சிகளாகும் இக்கட்சிகளை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்ததே பெரிய தவறாகும். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் ரொஹான் குணவர்தன தெரிவித்தார். இவர்கள் தீவிரவாதத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்….
‘ஹஜ் வியாபாரிகளினால் ‘ முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டு வரும் அவமானம்
M.ஷாமில் முஹம்மட் பொதுபலசேனா அமைப்பிற்கும் ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே தெரிவித்துள்ளார். “ஹஜ் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த குழுவினரே இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார் . ஹஜ் முகவர்களின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஹஜ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த விடயத்தில் பொது பல சேனாவை தலையிடுமாறு அவர்கள் கோரிக்கை…
கதிரவெளியில் ஆயூதங்கள் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி இராணுவ முகாமுக்கு முன்னாள் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரீ – 81 ரக மோட்டார் குண்டு ஒன்றும் கைக் குண்டு ஒன்றும் நேற்று (20) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் இருந்து ரீ – 81 ரக மோட்டார் குண்டு ஒன்றும் கைக் குண்டு ஒன்றும் வாகரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவூம் கைக்குண்டில் எல்.ரீ.ரீ.ஈ….
மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு!
அஸ்ரப் ஏ. சமத் சம்மாந்துறை கலாபூஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய ‘வரலாற்றிலோர் ஏடு’ நூல் வெளியீடு ஆகஸ்ட் 25 திங்கட் கிழமை பி.பகல் 04.00 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லீம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் ஆய்வு உத்தியோகத்தர், மௌலவி ஏ.சி.எம். புகாரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான ‘வரலாற்றிலோர் ஏடு’ எனும் நிகழ்சியின் நூல் வெளியீடு முன்னாள் முஸ்லீம் சமய கலாச்சார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.எம் ஜெமீல்…
