News
போர் இடம்பெற்ற காலத்தில் ஞானசார தேரர் எங்கிருந்தார்? மேர்வின் சில்வா கேள்வி
போர் இடம்பெற்ற காலத்தில் பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருந்தார் என அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்புப் படையினர் போர் செய்த காலத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் பற்றி கேள்விபடவில்லை. எல்லா சண்டியர்களும் போரின் பின்னரே வெளியே இறங்கியுள்ளனர். பௌத்தம், காவி ஆகிய இரண்டையும் கைவிட்டு எந்தவொரு சேனைப் படையை அமைத்தாலும் பரவாயில்லை. சமயத்தை பயன்படுத்தி சண்டித்தனம் காட்டுவோரை கண்டிக்க வேண்டும். காவி உடையை பயன்படுத்தி சிலர் அதிகாரம்,…
நாளை நிரூபித்தால் நாளை மறுதினம் பதவி விலகுவேன்! பந்துல சவால்
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொருளியல் வினாத்தாளில் தவறு இடம்பெற்றுள்ளதாக நாளை நிரூபித்தால், நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் இராஜினாமா செய்வேன் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதும், அரசாங்கத்தின் மீதும் சேறு பூசுவதே, ஆசிரியர் சங்கத்தின் நோக்கம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னரே வௌியானதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியதாகவும், அது தொடர்பான…
மோடி இலங்கை வரப் போகிறாரார் – சுவாமி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வரலாம் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள 4வது பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட சுப்ரமணியன் சுவாமி ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை இந்த நவம்பர் மாதமளவில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம் செய்வார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கை…
நான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன் – போப் ஆண்டவர் பிரான்சிஸ்
77 வயது போப் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்று இருந்தார். தனது பயணம் முடிந்து வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன். அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் சில காலம் மட்டுமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன்…
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மேலும் இருவர்
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மேலும் இருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அவ்தாஸ் கெளஷல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அக்மீர் பி.சூஃபி (Ahmer B.Soofi) ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர். ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டி கிரைன் ஆகிய மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழுவை ஜனாதிபதி…
ஊவா தேர்தலில் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் இனவாதத்திற்கு பாடம் புகட்டுவதாக அமையுமா?
-சத்தார் எம் ஜாவித்– முஸ்லிம் சமுகம் கடந்த முப்பது வருட காலத்தில் யுத்தம் காரணமாக உடல் ரீதியாக ஒரு விதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து துன்பப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் தற்போது இன்னுமொரு விதத்தில் அதாவது பொதுபல சேனா என்ற அரக்கர்களினால் உணர்வு ரீதியாக துன்பத்தை அனுபவித்து வரும் இத்தருணத்தில் ஊவாத் தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் சிறுபான்மையினர் என்ற வகையில் இத்தேர்தல் ஒரு முக்கியமான கருவியாகவே கருதப்பட வேண்டியுள்ளது. காரணம் முஸ்லிம் சமுகத்தை புறந்தள்ள நினைக்கும்…
ஊவா மாகாணசபை தேர்தல் ; 11,380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென விண்ணப்பித்த 11 ஆயிரத்து 380 அரசாங்க உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. நாடு முழுவதுமுள்ள அரசாங்க காரியாலயங்களில் செப்டம்பர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஊவா மாகாணத்திற்கென 42 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றுள் 30 ஆயிரத்து 657 விண்ணப்பதாரிகளே தபால்…
இலங்கையின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்!- தேசிய சுதந்திர முன்னணி
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்த 10 அம்சக்கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 13வது அரசியலமைப்பு ரத்துச்செய்யப்படவேண்டு;ம் என்ற யோசனையும் உள்ளடங்குகிறது. எனினும், தேசிய சுதந்திரமுன்னணியின் அனைத்து யோசனைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்லமுடியும் என்று முஸம்மில் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புக்கு 36 வயது. அதனை…
இலங்கை மீதான ஐ.நா. விசாரணை நீதியை துஷ்பிரேயோகம் செய்யும் செயற்பாடு: ஜீ.எல்.பீரிஸ்
இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைகள் நீதியைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடாகும். அதனால்தான், இலங்கை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு அமைச்சரின் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான சில சம்பவங்கள் எமக்குத் தெரியவந்துள்ளன….
அமெரிக்க விமானத் தாக்குதல் உதவியுடன் ISIS வசமிருந்த மோசுல் அணையைக் கைப்பற்றியது குர்டிஷ் படை
மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன. குறித்த மோசுல் அணையை அமெரிக்கா உலகின் மிக ஆபத்தான் அணை என விவரித்துள்ளது. ISIS வசமுள்ள நகரங்களை மீட்பதில் சமீப காலமாக குர்து இனப் படைகள் அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் கடுமையாகப் போராடி வருகின்றன. ISIS குர்து இனத் தலைநகரான மோசுலைக் கைப்பற்ற முன்னர்…
நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை வெள்ளம்:நூற்றுக் கணக்கானோர் பலி
நேபாள நாட்டில் இவ்வருடம் பருவ மழை கனமழையாகப் பெய்து வருவதால் அங்குள்ள மலைத் தொகுதிகளில் இருந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலங்கள் ஊடாக பாயும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதனால் உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 60 பேர் இறந்துள்ளதாகவும் 4 இலட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளதுடன் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப் பட்டன. நேபாளத்தில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட…
ஈக்வடோர் தூதரகத்திலிருந்து வெளியேறவுள்ளேன் – விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய தகவல் தொடர்பாடல்களை அசாஞ் அம்பலப்படுத்தியிருந்தார். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்திலிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜூலியன் அசாஞ் வெளியேறுகின்ற போதும், அதற்கான காரணத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. அவர் இதய மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயினால் அவதிப்பட்டு வருவதாக அண்மைய நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தபடியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருந்துவருகின்றார். தூதரகத்தை விட்டு வெளியில் வந்தால் கைதுசெய்யப்பட்டு சுவீடனிடம்…
