News
கட்டார் மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் – ஹமாஸ்
கட்டாருக்கும் ஹமாசுக்குமிடையிலான உறவு புதிதல்ல. ஹமாஸுக்கு விசாலமான ஒரு சர்வதேச தொடர்பு இருக்கின்றது. கட்டார் வாழ் மக்கள் , அந் நாட்டு அரசுக்கு நாம் எப்போதும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இயக்கம் என்ற வகையில் கட்டாரின் உதவிகள் ஹமாசுக்கு கிடைக்கின்றது என்பது கருத்தல்ல மாறாக, பலஸ்தீன் மக்களுக்கான உதவிகள் அவை இப்போது இருக்கும் அமீர், இவருக்கு முன்னாள் இருந்த அமீர் காசாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.காசாவின் கீழ்கட்டுமான அபிவிருத்திக்கு உதவியுள்ளனர். காலித் மிஷால் – பேச்சு
முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள் முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள்
முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ…
எபோலா வைரஸ் இலங்கைக்கும் பரவும் அச்சுறுத்தல்!
கிழக்கு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் இந்த எபோலா வைரஸ், இலங்கைக்குள் வரும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாகவும் அதனை தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விசேட மருத்துவர் திபால் பெரேரா தெரிவித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினர், அங்கு சுற்றுலா சென்ற இலங்கையர்கள், அங்கு தொழில் புரிந்து வருபவர்கள் நாட்டுக்கு திரும்பி வரும் போது, அந்த வைரஸ் இலங்கைக்குள் பரவக் கூடும். இந்த வைரஸ்…
”இஸ்ரேலுக்கும், பொதுபல சேனாக்கும் சார்பாக மஹிந்த ராஜபக்ஸ செயற்படுகிறார்” தம்பர அமில தேரர்
தமிழில் – எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி இலங்கையில் சிங்கள, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாகும் தருவாயில் உள்ளது. மீண்டும் நூறு வருடங்களுக்குப் பின்னரும் ஆரம்பத்தின் அதேநிலைக்கு வேறு ஒரு முறையில் சென்று கொண்டிருக்கின்றது. எனினும், கிடைக்கக்கூடிய பிரதிபலன்கள் முன்னையதைவிட மோஷமானதாக இருக்கும். கடந்த நாட்களில் ஏற்பட்ட சம்பவங்கள், இதற்கான நிழற் பிரதிகளேயாகும். நாட்டினுள் பரவுகின்ற இனவாதப் பின்னணி பற்றி அரசியல் தொடர்பான ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக் கழகத்தின் தொல் பொருளியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர்…
கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி கடற்கரையில் பள்ளிவாயல் திறந்து வைப்பு (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் 22-08- இன்று வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது இப் பள்ளிவாயளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், சவூதி…
ஹமாஸ் தளபதிகளை இஸ்ரேலுக்கு காட்டிக்கொடுத்தது யார்..?
இஸ்ரேலிய கைகூலிகளான எகிப்திய ஸீஸீயின் இராணுவமே ஷஹீதுகள் மூவரும் ரபாஹ் பிரதேசத்தில் உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் வழங்கியதாக பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மனஸூர் தெரிவித்துள்ளார்
ஹமாஸ் தலைவர்களின் நோக்கிய இறுதிப்பயணத்தில் சனத்திரள்
(Abu Ariya) இலட்சக்கணக்கான ஈமானிய்ய உள்ளங்களின் பிரார்த்தனையோடுதான் இந்தப் போராளிகள் புறப்படுகிறார்கள். 21-08-2014 அதிகாலை இஸ்ரேலால், ரபா பகுதியில் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட, 1. ராஇத் அல் அத்தார் 2. முஹம்மத் அபூ சம்மாலா 3. முஹம்மத் பர்ஹும் ஆகிய சகோதரர்களின் சுவனத்தை நோக்கிய இறுதிப்பயணத்தில் கலந்து கொண்ட காஸாவின் சனத்திரள்..!
ISIS கோழைகள், நிச்சயம் தோற்பார்கள் – ஒபாமா சாபம்
அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட செயல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், நாங்கள் ஈராக்கில் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை நிறுத்தப் போவதில்லை. அஞ்சப் போவதில்லை. மக்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். எந்தக் கடவுளும் இந்த அக்கிரமச் செயலை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி கொடூரமாக தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டதற்கு அவர் கடும் கண்டனமும்…
உள்ளதை உள்ளபடி சொன்னவர் நவிபிள்ளை – பான்கி மூன்
ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஐநா பாதுகாப்புச்சபை உலக நாடுகளின் அரசுகளுடன் ஒன்றிணைதல், ஒத்துழைத்தல் மற்றும் சேர்ந்து செயற்படுதலுக்கான புதிய காலகட்டம் உருவாகியிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டார். உலக அளவில் நம் சமகாலத்தில் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவி பிள்ளையின் நேர்மையான கருத்துக்கள் மற்றும் நகாசுபூச்சு செய்யப்படாத வெளிப்படையான அறிக்கைகளில் இருந்து ஐநா பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் பெருமளவு பயன்பெற்றார்கள் என்றும் அவர் கூறினார். தாம் கண்டதை…
லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை
உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக்கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார். சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக…
ததேகூ குழுவினர்- சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு
இலங்கையில் தமிழர்களின் நலனை பேணிக்காப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தியதாக இரா.சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் வெள்ளிக்கிழமை (22) புதுடில்லியில் தெரிவித்துள்ளனர். புதுடில்லி வந்துள்ள கூட்டமைப்பின் குழுவினர் (22) காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பின் போது, தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை முறையாக பெற்றுத் தருவதற்கு உதவிபுரிய…
ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திருப்பப்பட்டது!
நாட்டின் சகல மாவட்டங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகொப்டர் பயணம் பாதி வழியில் தடைப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற பிரஜைகள் குடிநீர் பயன்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்கு பயணித்தார். எனினும், சீரற்ற காலநிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கொழும்பிற்கே ஹெலிகொப்டர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
