News
பங்களாதேஷ் இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் சாதனை..!
மனித உணர்வுகளை அறியும் கணினி மென்பொருளை வங்கதேச விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். வங்கதேசத்தின் இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். இது பற்றி அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.எஃப்.எம். நஜ்முல் ஹக் நஹின் கூறியது: கணினியைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டு இரண்டு விதத்தில் மனித உணர்வுகளை அறிந்து கொள்ளலாம். விசைப்பலகை பயன்பாடு, அதனைக் கொண்டு உருவாக்கும் எழுத்து அல்லது உரை வடிவம் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மனித உணர்வுகளை அறியலாம். முதல் முறையாக, இந்த இரு…
இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் தீர்மானம்
இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தெற்காசிய நாடுகளின் சமூத்திரக் கண்காணிப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் பிரதமர், இதற்குத் தேவையான திட்டங்களை இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மோடிக்கு நன்றி தெரிவித்து டக்ளஸ் கடிதம்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி அதை அடித்தளமாக கொண்டு நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்று தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈ.பி.டி.பி வரவேற்றுள்ளது. இது குறித்து நன்றி தெரிவித்து நரேந்திர மோடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட…
இலங்கை இராணுவ வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று முன்தினம் வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது.
மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி திறப்பு விழா இன்று
ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பஸ்ரியான் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி இன்று (25) மாலை 5.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மேற்படிக் கடைத் தொகுதிகள் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் கடைகள் அகற்றப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ISIS அமைப்பில் பெல்ஜியம் நாட்டவர்
ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில், 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவலை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு, அவற்றை இணைத்து, தனி இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பில், பெல்ஜியத்தை சேர்ந்த, யூனுஸ் என்ற, 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இளம் வயது போராளியாக, கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ள யூனுசின் புகைப்படத்தை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது….
சவூதி அரேபியாவில் ஒரு நெகிழவைத்த நிகழ்வு..!
(சுவனப்பிரியன்) சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் மலஸ் சிறைச் சாலையை இங்குள்ள பலரும் அறிவர். அந்த சிறைச் சாலையில் சவுதி இளைஞர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் செய்த குற்றம் என்ன? ‘எனது மனைவியின் தோழி அவரது கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு குழந்தைகளோடு வறுமையில் உழன்று வந்தார். நானும் எனது மனைவியும் அந்த விதவையின் மேல் இரக்கப்பட்டு வங்கியிலிருந்து தொழில் தொடங்க 50000 ரியால் லோன் எடுத்து கொடுத்தோம். இந்த…
காஸா மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை! – பெஞ்சமின் நேதன்யாகு
காஸா மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 24-08-2014 மீண்டும் பிரகடணம் செய்துள்ளார். “தங்களுக்குள்ளாகவே கொலைவெறி தாக்குதல் நடத்திக் கொள்ளும் இவர்கள், குழந்தைகள் பலியாவதைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் எதிரிகளால் நாங்கள் சோர்வடைய மாட்டோம். ஹமாஸ் கூட்டத்தாருக்கு மட்டுமல்ல; காஸாவில் இயங்கும் அனைத்து போராளிக் குழுக்களுக்கும் தகுந்த பதிலடி தருவோம்” – என்றும் கூறினார்
ஈரான் அணு உலையை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஈரானில் உள்ள அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய உலகின் சில நாடுகளில் ஒன்றான இஸ்ரேல், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக அறியப்படும் இஸ்ரேல், ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக வேவு…
சிரியாவில் உள்ள Islamic States (IS) மீது தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்கா தீர்மானம்..!
ஈராக் மற்றும் சிரியாவில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு பல நகரங்களை கைப்பற்றியுள்ள அவர்கள் ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். சிரியாவில் போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகை நிருபர் ஜேம்ஸ் போலேவை பிடித்து வைத்து பிணை தொகை கேட்டு பேரம் பேசினர். அவற்றை தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது. எனவே அவரை தலை துண்டித்து கொலை செய்தனர். அந்த வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தினர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்’…
நரேந்திர மோடியை நம்பும் ஞானசாரர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துணை போக மாட்டார். முன்பிருந்த ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை தீர்வு குறித்து பல அழுத்தங்களைக் கொடுத்து வந்துள்ளனர். புதிய பிரதமர் மீது எமக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது என பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கத்தேய நாடுகளின் பகடைக் காய்களாக மாறியுள்ளனர். தமிழ் மக்களுக்கு அதிதியாவசிய தேவைகளை விடுத்து தமிழ் தேசியக்…
”முஸ்லீம்களின் வரலாற்றை தெரியாதவர்களாலே தவறான அபிப்பிராயம் பரப்பப்படுகிறது” பாலித தேவப்பெருமா
(JM.HAFEEZ) ‘முஸ்லீம்களின் வரலாறு பற்றித் தெரியதவர்களாலே முஸ்லீம்கள் பற்றி தவறான அபிப்பிராயம் பரப்பப் படுகிறது. இது தேசிய ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று கலுத்துறை மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் பாலித தேவப்பெருமா தெரிவித்தார்.(23.8.2013) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது தேசிய மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய நூதன சாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, கலுத்துறை மாவட்ட தமிழர்களின் பிரச்சினை…
