News
ஐ.எஸ் இயக்கத்தை எதிர்கொள்ள மத்திய கிழக்கு அரசுகள் சந்திப்பு
ஐ.எஸ் (இஸ்லாமிய அரசு) சுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. தமது பதில் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக, எகிப்து, ஜோர்தான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை சவுதி அரேபியா கூட்டியுள்ளது. சிரியாவின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று எகிப்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இராக்கிய பிரச்சினையில் முக்கிய பங்காற்றி வருகின்ற இரானின்…
டில்லியிலிருந்து சம்பந்தன் குழுவினர் தமிழ்நாட்டிற்கு திடீர் விஜயம்!
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக விஜயத்தின் போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தியப்…
கட்டாரில் இலங்கையர் மாரடைப்பினால் வபாத்
வில்பொல அரணாயக்கவை சேர்நத சகோதரர் ரஹ்மதுல்லாஹ் 23-08-2014 காலை மாரடைப்பால் கட்டாரில் அல் ருமைலா வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் கத்தாரில் தொழில் புரிந்து வந்தார். தற்பொழுது அவரது ஜனாஸா கத்தார் அல் ருமைலா வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ் நாளை அபு ஹமூர் மையவாடியில் இடம் பெரும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னார் சகோதரர் பஸ்லுல்லாஹ் – Qatar Airways (00974 55898066…
ஹமாஸ் தாக்குதலில் 4 வயது இஸ்ரேல் குழந்தை பலி – தக்க பதில் தரப்படும் பென்ஜமின்
தெற்கு இஸ்ரேல் பகுதியில், ஹமாஸ் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 4 வயது குழந்தை பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை அதிகாரிகள் தெரிவித்தனர். காஸா முனையிலிருந்து, நேற்று இரவு தெற்கு இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில், மழலையர் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கார் தகர்க்கப்பட்டது. இதில் காரில் இருந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஹமாஸ்…
ISIS யினால் அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பு – பெண்டகனில் முக்கிய ஆலோசனை
”வழக்கமான முஸ்லிம் அமைப்பிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., முற்றிலும் வேறுபட்டு உள்ளது. இது போன்ற அமைப்பை, நாங்கள் பார்த்ததே இல்லை. இந்த கும்பலை ஒழிக்காவிட்டால், மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும்,” என, அமெரிக்க ராணுவ அமைச்சர், சுக் ஹேஜெல் கூறினார். ஆலோசனை : ‘பென்டகன்’ எனப்படும், அமெரிக்க ராணுவ தலைமையகத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை ஒடுக்குவது குறித்து, நேற்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதில், சுக் ஹேஜெல் மேலும் பேசியதாவது: இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை ஒடுக்க, நாம் எதையும்…
‘விக்னேஸ்வரனை சந்திக்க மோடி விருப்பம் தெரிவித்தார்’
இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் புதுடில்லியில் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, புதுடில்லி வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை இன்று சனிக்கிழமை காலை சந்தித்தார். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தங்களின் மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் இரா. சம்பந்தன்…
சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி
2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப்…
மாபெரும் இறுதிப் போட்டியாக ஜனாதிபதித் தேர்தல்! ரணில் சூளுரை!
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியான ஜாதிக யொவுன் பெரமுனவின் கொழும்பு கிளை சார்பில் விளையாட்டுப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.தே. க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அதனைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எந்தவொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் இளைஞர்களின் பங்களிப்பின் மூலமாகத் தான் நிகழ்ந்துள்ளது. இந்நாட்டிலும் அவ்வாறானதோர் மாற்றம் நிகழ இளைஞர்களின் ஆர்வமும், பங்களிப்பும் தேவைப்படுகின்றது. விளையாட்டுப் போட்டிகளைப் போன்றது தான் அரசியல் களமும். எதிர்வரும் ஜனாதிபதித்…
த.தே.கூ.வும், இலங்கை அரசாங்கமும் தனித்தனியாக இந்தியாவுடன் பேசுவதால் பயனில்லை: வாசுதேவ நாணயக்கார
இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கை அரசாங்கமும் தனித்தனியா இந்தியாவுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றமை தொடர்பில் தான் அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு ஏற்படாத விடயங்களையும், இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களையும் குறித்துக் கொண்டு, இந்தியாவுடன்…
சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் வேலை வாய்ப்புக்காக செல்ல வேண்டாம்
ற்றுலா அல்லது கல்வி வீஸாவில் டுபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்பும் மோசடி வியாபாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவர்களை அந்த நாடுகளில் தவிக்க விட்டுவிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது. இத்தகைய குழுக்கள் குறித்து பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார். கடந்த காலங்களில் இவ்வாறான பல சட்டவிரோத…
பள்ளிவாசலுக்குள் ஷியாக்கள் வெறியாட்டம் – 70 முஸ்லிம்கள் வபாத்
ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது. சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வகையில், ஒடுக்கப்படும் பிரிவினர் தகுந்த நேரம் பார்த்து ஆதிக்கவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கின்றனர். இத்தகைய வன்முறை தாக்குதல்களில் இருதரப்பிலும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, ஐ.எஸ்.போராளிகளும் ஈராக்கில் சமீபகாலமாக ஏராளமான வன்முறை…
காட்டிக்கொடுப்பவர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ் போராளிகள்..!
இஸ்ரேல் நாட்டிற்கு இன்பார்மர்களாக செயல்பட்டதாகக் கூறி 18 பேரை ஹமாஸ் போராளிகள் கொலை செய்துள்ளனர். காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியதில், ஹமாஸ் இயக்கத்தின் 3 கமாண்டர்கள் கொல்லப்பட்டனர். தங்கள் இயக்கத்தின் தலைவர்களை குறிவைக்கும் இஸ்ரேலை பழிதீர்ப்பதாக ஹமாஸ் சபதம் செய்தது. இந்நிலையில், 22-08-2014 அதிகாலையில் இன்பார்மர்கள் என்று சந்தேகிக்கப்படும் 18 பேரை காசா நகர காவல் தலைமையகத்தில் கொன்றதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் 11 பேரும் ஏற்கனவே காசா…
