News
தமிழ் மக்களைப் புறக்கணிக்கக் கூடாது – பாப்பரசர் பிரான்ஸிஸ்
(வத்திக்கான் இணையத்தளம்) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ். தனது இலங்கை விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்வார். இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற போர் பேரழிவை ஏற்படுத்தியிருந்து ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளது. அப்படிப்பட்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் ஒன்றுக்கு செல்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் விஜயம் சில போக்குவரத்து பிரச்சினைகளை…
டுபாயில் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்
தமது பணி வழங்குநர் உரியமுறையில் சம்பளம் வழங்காமையால் அவருடைய தங்கநகைகளை திருடியமையை இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். பத்திரிகை விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் தமது வீட்டுக்கு பணியாளாக வந்த இலங்கை பெண், இரண்டொரு நாட்களில் தமது பெருமளவு நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பணிவழங்குநர் பெண் மன்றில் முறையிட்டிருந்தார். எனினும் தாம் பணியில் இணைந்து நான்கு நாட்களாகியும் பணி வழங்குநர் உறுதியளித்தப்படி நாட் சம்பளத்தை வழங்காமை காரணமாக பழி தீர்க்கும் வகையில்…
பாராளுமன்றம் கலைக்கப் பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!:10 ரஷ்யத் துருப்புக்களைக் கைது செய்தது அரசு
திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஆக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் தேசிய இணக்கப் பாட்டைக் கொண்டு வரக் கூடிய எந்தவொரு முடிவிலும் ரஷ்யா பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனுக்கு இவ்வாரம் 2 ஆவது மனிதாபிமான உதவித் தொடர் வாகன அணியை அனுப்பவும் ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்….
பேஸ்புக்கில் அண்ணன் செய்த வேலையால் யாழில் அடிவாங்கிய தம்பி
கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து, யாழ். கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதான சகோதரன், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். இதேவேளை, தாக்குதல் நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அதே இடத்தைச் சேர்ந்த இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 24…
நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 90நாள்!
நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 90 நாள் நிறைவடைகிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் நிழல் போல ஊழல் கரையும் படிந்து காலத்தோடு நகர்ந்து வந்தது என்பதை பலரும் மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், திட்டமிட்டு அயராது பிரச்சாரம் செய்து, காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை நரேந்திர மோடி அள்ளினார் என்பதையும் பலரும் மறுக்க மாட்டர்கள். இப்படிப்பட்ட சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து…
8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கையெழுத்து இடப்பட்டது… அல்லாஹு அக்பர் ….
8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால ஒப்பந்தத்தத்தில் கைச்சாதிடப்பட்டுள்ளது. 1 -காஸா மீது யூதபயங்கரவாதிகளின்முற்றுகை முழுமையாக விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல். 2-சர்வதேச நாடுகளின்மேற்ப்பார்வைகளின் கீழ் காஸா புனரமைப்பு. 3- மின்சார பிரச்சினைகளை முழுவதுமாக காஸாவின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்குதல். 4- காஸாவுக்கான கடல் எல்லையில் இருந்து மீன் பிடித்தல்களை 96 மைல்களில் இருந்து அனுமதித்தல். 5- காஸாமீதான நிதி தடைகளை முற்று முழுதாக நீக்குதல்….
‘முஸ்லிம்கள் ஜெயித்தனர்’ அடிபணிந்தது இஸ்ரேல்
பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம் – அபூ ஸஹ்ரி, பேச்சாளர், ஹமாஸ் 1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு 2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம். 3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம் 4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை…
காஸாவில் வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கம்..!
26-08-2014 இரவு காஸாவில் இஷா தொழுகைக்கான பாங்கோசைக்குப்பிறகு பெருநாளுக்காக கூறப்படும் தக்பீரைப் போன்று தக்பீர் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்தே இவ்வாறு வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கமும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ‘டெசோ’ தீர்மானம் நிறைவேற்றம்
தமிழீழ ஆதரவாளர்களுக்கான டெசோ கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்வதேச விசாரணை குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா…
அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாகவே பேச்சு
ஊவா மாகாண தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய,அனைத்துக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேசாமல்,ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாகவே பேசவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் நாளையும்,நாளை மறுதினமும் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (DC)
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு ; பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்
திவிநெகும திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மவாட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுக அபிவிருத்தி குழு தலைவர்கள் ஆககேயார்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் உரையாற்றுவதை படத்தில் காணலாம். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் , வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்து…
யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரை வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் முகநூலில் வைரஸ் போன்று பரப்பப்பட்டது. தாம் அணிந்திருந்த ஆடை குறித்து, அந்த இளைஞன் கூறிய வார்த்தைக்காகவே யுவதி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இளைஞர் எவ்வித எதிர்ப்புகளையும் அதன்போது வெளியிடவில்லை. 30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமார்…
