News
‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ காத்தான்குடியில் செயலமர்வு!
காத்தான்குடி அல் மனார் நிறுவனம் இம்முறை ஹஜ் செல்லவிருப்பவர்களின் நலன் கருதி ‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு அல் மனார், அர்ராஷித் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது. ஹஜ் நடைமுறைகளிலும் மற்றும் சவூதி சட்டதிட்டங்களில் நன்கு புலமை பெற்றவருமான ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி மற்றும் எம்.எம்.எம். மன்ஸூர் மதனி ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும். சகல ஹஜ் முகவர்கள்…
‘சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்’ : சரத் பொன்சேகா
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு…
பஸ்-முச்சக்கர வண்டி விபத்து! பயணித்த குடும்பம் படுகாயம்!
அப்துல்லாஹ் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்குச் சமீபமாக இன்று (04) வியாழன் மாலை 5 மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இ.போ.ச. கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த…
சுப்பிரமணிய சுவாமி படத்தை எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
சுப்பிரமணிய சுவாமி வீட்டு முன்பு வியாழக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரபிரசாத் தலைமையில் சென்றனர். அவர்களை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது படத்தை தீ வைத்து கொளுத்தினர்.
தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு சவுதியில் நீண்ட கால சிறைத் தண்டனை
புதன்கிழமை சவுதி அரேபியா தனது நாட்டில் தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு 2 முதல் 27 வருடங்கள் வரையிலான நீண்ட கால சிறைத் தண்டனை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஓர் அமெரிக்கரும் யேமென் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர் என சவுதியின் உத்தியோக பூர்வ செய்தி ஊடகமான SPA அறிவித்துள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட கைதிகள் சவுதியின் முக்கிய எண்ணெய் குழாய் வலையமைப்புக்களை அழிக்கத் திட்டம் வகுத்தமை, ஆயுதங்களைத் தாங்கியிருந்தமை, சவுதியிலும்…
அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை!
தற்கொலைகள் அதிகம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது. தர வரிசை அடிப்படையில் கயானா முதல் இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 44.2 சதவீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள வட கொரியாவில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 38.5 சதவீதமானோரும்…
கொழும்பு விளக்கமறியல் சிறையின் பாதுகாப்பு பொலிஸார் வசம்
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைச்சாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதுவரை சிறை அதிகாரிகளே பொறுப்பாக இருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.விளக்கமறியல் சிறையில் இடம்பெறும் அநியாயங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக 50 மோட்டார் சைக்கிள்கள் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளன.
10 ரூபாய் கேட்டதற்காக மருமகளை கொன்ற மாமா
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகேப்கஞ்சில் உள்ள பிந்துதாம் நடுநிலை பள்ளியில் படிக்கும் காஜல் குமாரி என்ற அப்பெண் தனது பாட்டியிடம் ஆசிரியர் தினத்திற்கான தபால் தலை வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பாட்டியின் அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை வழி மாமா அவளது…
தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
தவ்ஹீத் ஜமாத் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய அறிக்கை ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். மேலும்…
ஐ.நா. விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது
ஐக்கிய நாடுகள் விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது. அதனாலேயே அதனை இலங்கை எதிர்ப்பதுடன் நிராகரித்துள்ளது என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நீதியற்ற செயல். வெளி ஊக்குவிப்புக்களின் அக்கறைக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகான முனைப்புகள் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை ஸ்திரமற்றதாக்கிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள அவர்…
ஆசிரியையை நான்கு நாட்களாக காணவில்லை
பசறை – வோனகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியை ஒருவர் காணாமல் போயுள்ளார். பசறை 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த எஸ். சரஸ்வதி (35 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை காணாமல் போயுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வழமைப் போல் பாடசாலைக்கு சென்ற குறித்த ஆசிரியை மாலை வரை வீடு திரும்பாததையடுத்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய யானை பலி
கிராந்துருகோட்டைப் பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஊவா மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சி ஆதரவாளர்களே இவ்வாறு யானையை சுட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.வன ஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (VK)
