Headlines

பஸ்-முச்சக்கர வண்டி விபத்து! பயணித்த குடும்பம் படுகாயம்!





அப்துல்லாஹ்

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்குச் சமீபமாக இன்று (04) வியாழன் மாலை 5 மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இ.போ.ச. கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த முச்சக்கர வண்டி உரிமையாளரான சிவநேசலிங்கம் பிரபாகரன் (வயது 35) மற்றும் அவரது மனைவி சங்கீதா (வயது 32) மகன் பிரவீன் (வயது 2) ஆகியோர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *