News
39ஆவது சட்டமா அதிபரின் 7ஆவது சிரார்த்த தினம்
நாட்டின் 39ஆவது சட்டமா அதிபராக பதவிவகித்த மறைந்த கே.சி.கமலசபேஷனின் 7ஆவது சிரார்த்த தினம், சட்டக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் சட்டமா அதிபர் பாலித்த பெர்னண்டோ பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதியோர் தினத்தில் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு
முதியோர் தினத்தை முன்னிட்டு கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.எதிர்வரும் 1 ம் திகதி முதல் 7 ம் திகதி வரை முதியோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவர்கள் முதியோர் இல்லத்துக்கு இவர்கள் ஆற்றிய சேவைகள் நினைவு கூரவுள்ளதாக இல்லத்தின் பணிப்பாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளியை தண்டிக்கும் அதிகாரம் மகிந்தவுக்கே – மெக்ஸ்வெல் பரணகம
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் சட்ட மா அதிபருக்குமே காணப்படுகின்றது என காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்ற செயல்கள் தொடர்பில் உயர் நீதிமன்ற நீதவான்கள் விசாரணை நடத்த உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்…
புறக்கோட்டை தங்க ஆபரண கடைத்தொகுதி இன்று திறப்பு; அமைச்சர் பசில் பிரதம அதிதி
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றவுள்ளனர். 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன்…
மங்கள சமரவீரவுடன் லண்டனில் அரச உயர்மட்டம் பேச்சுவார்த்தை
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்றுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் வழங்கும் விடயத்தில் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர தற்போது லண்டன் சென்றுள்ள நிலையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த…
முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கும் மின்சார வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் ரிசாத்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சரிடம் குறித்த கிராம மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். புல வருடங்களாக தாம் இருளில் இருப்பதாகவும், இதுபற்றி பல அரசியல் பிரமுகர்களிடம் கூறியும் தமக்கு மின்சார…
அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்த அரச அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லைவட மாகாண முதலமைச்சருக்குஅமைச்சர் பதில்
வன்னி மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்தவொரு அரச அதிகாரியும் ஈடுபடுத்தப் படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன், அவ்வாறான ஒரு கருத்தை எந்தவொரு அரச அதிகாரியும் கூறவும் மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது. வடமாகாண சபைத் தேர்தலின் போது அரசு வடக்கு ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் றிசாத்…
குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரக்கடன்
குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுவதற்கு கடனுதவித் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.எரிசக்தி மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமூவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெறுகிறது.மஹிந்த சிந்தனை தேசிய வேலை திட்டத்தின் கீழ் சகருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நடைமுறைபடுத்தும் நோக்கில் இந்த கடன் திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் ஒருவர் 40,000 ரூபாவை கடனாக பெற…
பேச்சுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முன்வைக்கவேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் பேச்சு நடத்து வதற்கு முன்னர் அரசியல் தீர்வுத்திட்ட வரைபை இதயசுத்தியுடன் அரசு முன் வைக்கவேண்டும் என்றும், பேச்சு நடத்த வேண்டும் என் பதற்காக பேசாது, தீர்வை விரைந்து காணும் வகையில் பேச்சு நடத்தவேண்டும் எனவும் அரச பங்காளிக்கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வலியுறுத்தியுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும், அப் பேச்சைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அதி உயர்பீடக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்…
பிரித்தானிய தம்பதியிடம் மன்னிப்பு கேட்ட சவூதி அரேபியா!
சவுதி அரேபியாவில் பொது இடங்களில் ஆணும், பெண்ணும் கலந்து பழகுவது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சவுதியில் ஷரியா சட்டத்தின் கீழ் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமிய அறநெறிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் நல்லொழுக்க மேம்பாட்டு ஆணையம் மற்றும் துணை தடுப்பு நிர்வாகம் என்னும் இஸ்லாமிய மத சம்பந்தப்பட்ட காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள வர்த்தக தொகுதியொன்றில் பெண்கள் மட்டும் வெளியேறும் வழி ஒன்றில் பிரித்தானிய பிரஜை ஒருவர்…
அபாயாவுக்குத் தொடர் சோதனை..!
-M.I.MUBARAK- முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத செயற்பாடுகளுள் முஸ்லிம் பெண்கள் முக்கிய குறியாகவே இருந்து வருகின்றனர். அவர்களின் ஆடைகளை இழிவு படுத்துவது, அவர்களின் செயற்பாடுகளுள் குறைகளைக் காண்பது, ஒழுக்க ரீதியாக அவர்களைச் சிதைப்பதற்கு முற்படுவது போன்ற பல்வேறு வகையான சதித்திட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் பேரினவாதிகள் முஸ்லிம் பெண்களை மிக மோசமாகச் சித்திரிக்கின்றனர்; ஏனைய இனங்களைச் சேர்ந்த பெண்களை விட முஸ்லிம் பெண்களே மோசமானவர்கள் என்ற பிரசாரங்கள் சமூக…
இலங்கையில் பாகிஸ்தானியர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
அகதிகளுக்கான ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக புகலிடம் கோரிய நிலையில் நீர்கொழும்பில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் மீண்டும் கைது செய்யப்படுவதாக பாகிஸ்தானியர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிரிஹானையில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது வரை 128 பேர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 56…
