Headlines

பொலிஸாருக்கு எதிராக களமிறங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள்

பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பொது நீதிக்கு முரணான வகையில் பொலிஸார் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சேவை புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Read More

மன்னர் காலந்தொட்டு முஸ்லிம்களுடனான உறவு தொடர்கிறது – ஜனாதிபதி

முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேசநாடுகளே! மன்னர் காலந்தொட்டு எமக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு தொடர்கிறது. இந்த உறவை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மொனராகலை வாழ் முஸ்லிம் மக்களை நேரடியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எனது…

Read More

நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர்? – கலகொட அத்தே ஞானசார தேரர்

நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை எதிர்வரும் 28 ஆம் திகதி அறிவிக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் மஹா சங்க மாநாட்டில் இதனை வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது நாட்டுக்கும் இனத்திற்கும் ஆதரவான தலைவர் ஒருவருக்கான கடும் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹா சங்க மாநாட்டில் அது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளோம். உண்மையான உணர்வுகளை…

Read More

ISIS க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்த ஈரான் – அயதுல்லா கமேனி பச்சைக்கொடி…!

ஈராக்கின் வடபிராந்தியத்தில் ஐ.எஸ் க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிடுவதற்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு ஒத்துழைக்குமாறு தமது உயர்மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி அதிகாரம் அளித்துள்ளார். ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பாரம்பரியமாக ஈரான் எதிர்ப்பையே வெளியிட்ட வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு ஆதரவான சியா படையினர் மற்றும் குர்திஷ் படையினர் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து…

Read More

ISIS க்கு இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் கண்டனம்

ISIS க்கு, இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்  கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் கவுன்சிலின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக இவ்வாறான குற்ற செயல்களை நிறுத்துமாறு ஐ.எஸ். வாதிகளின் தலைவரான அபூ பக்ரால் பக்டாடியை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

Read More

இமாம் சுதைஸ் இரத்த தானம் வழங்கினார்..!

இந்த வருட ஹஜ் புனித கடமைக்கு வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஐந்து நாள் இரத்த தான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் புனித மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் அவர்கள் தனது இரத்தத்தையும் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். இது போன்ற இரத்ததான முகாம்கள் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு தேவைக்கு அதிகமாகவே இரத்தம் சேமிக்கப்படுகிறது. இந்த முகாமை வருடாவருடம் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு வெற்றிகரமாக…

Read More

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் – கனடா பிரதமர்

 மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்போவதாக கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார்.பிரித்தானியாவின் லண்டன் நகரில்,  உரை நிகழ்த்திய அவர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தால் மோசமாக நடத்தப்படுவதாக கூறினார்.ஐஎஸ் வாதிகளின் ஆட்சியில் இருக்கும் பிரதேசம், பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்கான பெரும் தளமாக மாறலாமென கூறிய அவர், அந்த நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாதென தெரிவித்தார்.இதேவேளை, ஈராக்கிற்கு முற்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்ட கனேடிய வெளியுறவு அமைச்சர்…

Read More

கத்தாரில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இருவர் மாயம்

 நேபாள வம்சாவளி பிரிட்டிஷ் நாட்டவர்களான கிருஷ்ணா உபாத்யாயா(52), குன்டேவ் கிமிரே(36) ஆகியோர் கத்தாரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய்ச்சி செய்துவந்தனர். நார்வேயைத் தலைமையகமாகக் கொண்ட உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான குளோபல் நெட்வொர்க் நிறுவனத்திற்காக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இவர்கள் அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.வரும் 2022ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்த உள்ளதால் அங்குள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவு வேலை வாங்கப்படுவதாக எழுந்த விமர்சனங்களைத்…

Read More

அல்கொய்தா இந்தியாவுக்கு எதிரான மிரட்டல் அல்ல

அல்கொய்தா இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்குவதாக அறிவித்து இருப்பது பற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் கெய்டன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறுகையில், இது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை- என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘அல்கொய்தாவின் இந்த புதிய அறிவிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. இது தொடர்பான தகவல்களை கவனித்து வருகிறோம். இது இயக்கங்களிடையேயான போட்டியாக கருதுகிறோம். மேலும் அமெரிக்கர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் கருத…

Read More

தேசிய கீதம் தமிழ் மொழியில் படப்பட வேண்டும்- ரவூப் ஹக்கீம்

தேசிய கீதத்தைக் கூட நாங்கள் இன்னும் ஒரே மொழியில் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை இருப்பது வருந்தத்தக்க விடயம், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என   நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாங்களாக இருக்கிற ஒரு மாகாண சபையில் கூட இரண்டு மொழிகளிலும் இசைப்பதற்கு நாங்கள் துணிய வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அது உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம். என்னைப் பொறுத்தமட்டில் நாங்கள் துணிகரமாக…

Read More

விசமானது உணவு; ஆபத்தான நிலையில் 60 பேர் வைத்தியசாலையில்

இலங்கை சுதந்திர வர்த்தக வலயங்களில் ஒன்றான கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, விஷமாகியதில் 60 பேர் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவே விஷமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

Read More

அல்-கொய்தாவின் மிரட்டல்- இலங்கை அரசு தீவிர கவனம்

இந்திய துணைக்கண்டத்திலும் அல்-கொய்தா அமைப்பின் பிரிவை அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அல்-கொய்தா, தீவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு விஸா கட்டுப்பாடுகள் மற்றும் விஸா மீளாய்வுகளை இலங்கை பரிசீலிக்க உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக்,சிரியா ஆகிய…

Read More