News
முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாத அமைப்புகளே எங்களது ஒற்றுமைக்கு வழிகோலியது – ரவுப் ஹக்கீம்
ஊவா மாகாணசபை தேர்தலில் நாங்கள் ஒன்றுபட நேர்ந்ததற்கு அரசாங்கமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ காரணமல்ல. முஸ்லிம்களுக்கெதிராகத் தலைதூக்கியுள்ள தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகளே எங்களது ஒற்றுமைக்கு வழிகோலியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். ஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டையிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பதுளை சைமன் பீரிஸ் நகர மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…
ISIS களை ஒழித்துக்கட்டுவேன் – ஒபாமா சூளுரை
IS, ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து “இஸ்லாமிய நாடு” என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில், IS மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த IS, அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோரை பிடித்து சில தினங்களில் ஸ்காட்லாப்பை தலை துண்டித்து கொன்றனர். மற்றொரு பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலேயும் தலை…
யார் ஜனாதிபதி என்பதை முஸ்லிம்களின் வாக்குகள் தீர்மானிக்க வேண்டும் – ரிசாத் பதியுதீன்
முஸ்லிம் சமுகத்தின் மானத்தையும் மரியாதையும் காப்பாற்றி சமுகத்தை கௌரவமாக வாழவைப்பதற்கான கூட்டுத்தான் நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இணைந்த இந்தக் கூட்டாகும். பொதுபலசேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யார் ஜனாதிபதி என்பதை இங்குள்ள 20 இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். பதுளை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும்;…
இஸ்லாத்துக்கு மாறுங்கள், நேரடியாக சொர்க்கம்தான்”: டில்ஷானிடம் ஷேஜாத், பாக். கிரிக்கெட் சபை விசாரணை!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது. இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு, கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன்…
முல்லைத்தீவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சார இணைப்புக்கள் வழங்கிவைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் கிடைக்காத தமிழ் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட மின்சாரம் வழங்கும் நிகழ்வு இன்று 03 புதன்கிழமை இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமுனை, பூவரசன் வெளி, குமுளமுனை ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியினால் மின்சாரம் இணைப்புக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர்- இது வரை மின்சாரம் கிடைக்காத முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராமங்களுக்கு இரண்hடம் கட்ட…
ISIS மீது குண்டு மழைப் பொழியும் அமெரிக்கா
ஈராக்கில் 124 தடவை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. இதனால் ISISகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்தீஷ் படைகள் பல பகுதிகளை மீண்டும் மீட்டுள்ளனர். மொசூல் அணையும் ISIS களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதி முழுவதையும் மீட்க அமெரிக்க போர் விமானங்கள் ISISகள் மீது நேற்று குண்டு மழை பொழிந்தன. அதில், ISISகளின் 16 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. பல வாகனங்கள்…
யாழ். வருகிறார் ஜேர்மனிய தூதுவர்
இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜூர்கன் மொர்காட் ஒரு நாள் விஜயமாக நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.யாழிற்கு வரும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. வடக்கின் அபிவிருத்தி குறித்தும் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அவர் ஆராய்வார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை பல்கலையில் சுகாதார மாநாடு
சர்வதேச சுகாதாரத்துறை மாநாட்டினை முன்னிட்டு பேராதனை பல்கலைக்கழகத்தினால் ஒரு சுகாதாரம் எனும் தலைப்பிலான மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சுகாதார மாநாடு ஒரே சுகாதாரம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற புதிய தீர்வு முறைகள் மற்றும் சர்வதேச சுகாதார சமூகத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நன்மைகள்…
துஸ்பிரயோகத்தின் பின் யுவதி கொலை : வைத்தியருக்கு மரணதண்டனை
சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த யுவதியான சமிளா 2007 ஆம் ஆண்டு, சிகிச்சைக்காக கொள்ளுப்பிட்டி வைத்தியசாலைக்கு சென்றவேளை சந்தேக நபரான வைத்தியர் யுவதிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.அதன் பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து யுவதியை கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.அவருக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…
இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் புதிய சட்ட திருத்தம்
இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்தது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்து காணொளியை வெளியிட்டுள்ளனர். அதில் காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில்…
ஈராக் இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் பக்தாத்திலுள்ள பாராளுமன்றத்தை முற்றுகை!
ஈராக்கில் தாம் கைப்பற்றிய இராணுவ வீரர்களை ISIS குவியலாக நிறுத்தி சுட்டுக் கொலை செய்து வரும் நிலையில் இப்படுகொலைக்கு நியாயம் வேண்டி ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அந்நாட்டுப் பராளுமன்றத்தை குறித்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் இதன் போது தமது அன்புக்குரியவர்களின் முடிவு என்ன ஆனது என்பது குறித்துத் தெரியப் படுத்துமாறு குறித்த உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். கிறீன் ஷோன் எனும் சர்வதேச பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் ஈராக் பாராளுமன்றத்தை இராணுவ வீரர்களின் சுமார்…
