News
ஜப்பானுக்கு WHO எச்சரிக்கை
ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 70 வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் நுளம்பினால் பரவும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெங்குக் காய்ச்சல் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஏனைய வியாதிகள் டோக்கியோவில் தலை தூக்கி வருவதாக உலக சுகாதாரத் தாபனமான WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. டோக்கியோவில் கடந்த வாரம் குறைந்தது 55 பொது மக்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருப்பதாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோயாளிகள் அனைவருக்கும் ஓர் பொது…
பிரேசில் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து
பிரேசில் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செப்டம்பர் 7, 1822ல் போர்ச்சுக்கல் இடமிருந்து பிரேசில் தனது சுதந்திரத்தை பெற்றது, பிரேசில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக உயிரினை தியாகம் செய்த போராளிகளை தான் இந்த தினத்தில் நினைவு கூறுவதாகவும் மேலும் பிரேசில் நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்த நாம் கடமைப் பட்டுள்ளோம். உலக நாடுகளில் இந்தியாவுக்கான ஒரு முக்கிய நட்பு நாடு பிரேசில் இரு நாடுகளுக்கு இடையேயான…
ஜப்பான் வங்கிக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் உடன்படிக்கை
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தாhர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் மார்ச் மாதம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது விடுத்த அழைப்பிற்கு அமைய ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கை வந்தனர். கட்டுநாயக்க வானூர்தி தளத்தின் இரண்டாவது பயணிகளுக்கான கட்டமைப்பை திறந்து வைக்கும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில்…
சீனாவுடனான ஒப்பந்தம் உலக ஆடை வர்த்தகத்திற்கு பாரிய நன்மை!
எதிர்வரும் இலங்கை – சீனா ஒப்பந்தமானது 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குறையாத மாபெரும் உலக ஆடை வர்த்தகத்திற்கு இட்டுச்செல்லுவதோடு உலகில் பாரியளவிலான சேட் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பில் நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றோம். தீர்வையற்ற சந்தை அணுகலுக்கு சீனா இலங்கைக்கு மிகவும் ஒரு முக்கிய நாடாக திகழ்கின்றது. இது ஆடை பங்கீட்டு நிறுவனங்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் காணப்படும். இந்த தீர்வையற்ற சந்தை அணுகல் எங்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆசியாவில் இருந்து…
இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கவனம் – இளவரசர் அல் ஹூசெய்ன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக…
ISIS இயக்கத்தில் 100 அமெரிக்க இளைஞர்கள் – பென்டகன் உறுதி
ஐஎஸ் இயக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் உள்ளனர் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. சிரியா, இராக் ஆகிய நாடுகளை இணைந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய நாடு அமைக்கப்போவதாக கூறி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக ஆயதப் போராட்டத்தில் ஐஎஸ் வாதிகள் குதித்துள்ளனர். இவர்கள் சிரியா மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்தியாவில் இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் சென்று இந்த…
”இலங்கை முஸ்லிம்கள் பிறநாட்டு போராட்டங்களை, இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் கிடையாது”
-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு சிந்தனை முகாம்களில் இருந்தாலும் தங்களுக்குள் நிலவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தொடர்ந்தேர்ச்சியான பாரிய முரண்பாடுகளாகவோ, பிணக்குகளாகவோ குழுச்சண்டைகளாகவோ இதுவரை காலமும் வளர்த்துக் கொண்டதில்லை. இலங்கை முஸ்லிம்கள் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்கு மகத்தான பங்களிப்பினைச் செய்தவர்கள், தமது உரிமைகளுக்காக வன்முறையை நாடாது ஜனநயாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் வரலாறு நெடுகிலும் பங்கெடுத்தவர்கள், யுத்தமாயினும் சமாதானமாயினும் ஏனைய சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாது பாரிய விலையை செலுத்தியவர்கள், தேசிய…
உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு தடை
போட்டோ உருளைக்கிழங்கு இறக்குமதியை நேற்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுபோகத்தின் மூலம் பெறப்பட்டுள்ள உருளைக்கிழங்கு அடுத்த வாரத்துக்குள் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் எம்.ஜி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதன் ஊடாக உள்ளூர் உருளைக்கிழங்கு செய்கையாளர்களை பாதுகாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை சுங்கப் பிரிவிற்கும்…
தங்க ஆபரண கடைத்தொகுதி புறக்கோட்டையில் திறந்து வைப்பு!
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி கடந்த வெள்ளிக்கிழமை (05) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றினர். 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல்…
ஐ.எஸ். படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு
ஐ.எஸ் இன் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகர்களின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது, ஐ.எஸ். இக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பங்களிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, அதையொட்டிய முடிவு எட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஈராக் நகரங்களில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான அமைப்பு,…
யசூசி அகாசி – ஜனாதிபதி சந்திப்பு
ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். எனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் ஆகியயோர் கலந்து கொண்டிருந்தனர்.
நோயாளியைப் பார்க்க சென்றவர் மயங்கி விழுந்து மரணம்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நண்பனின் தந்தையை பார்வையிடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மரணமான சம்பவமொன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. ஊரெழுவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பிரபாகரன் (வயது 29) என்பவரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பனின் தந்தையின் நிலையறிந்து, வவுனியாவிலுள்ள நண்பருக்கு சொல்வதற்காக வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார். வைத்தியசாலைக்கு சென்றவர், வைத்தியசாலை வளாகத்தில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார்….
