Headlines

நோயாளியைப் பார்க்க சென்றவர் மயங்கி விழுந்து மரணம்




தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நண்பனின் தந்தையை பார்வையிடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மரணமான சம்பவமொன்று நேற்று முன்தினம்  இரவு இடம்பெற்றுள்ளது.

ஊரெழுவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பிரபாகரன் (வயது 29) என்பவரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பனின் தந்தையின் நிலையறிந்து, வவுனியாவிலுள்ள நண்பருக்கு சொல்வதற்காக வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்றவர், வைத்தியசாலை வளாகத்தில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். உடனடியாக மேற்படி நபரை வைத்தியர்கள் சோதனை செய்த போது, அவர் மரணமடைந்திருந்தார்.

சடலம் மரண விசாரணைகளுக்காக பொருட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *