News
இலங்கைத் தமிழ் பெண் தீயில் எரிந்து சாவு
திருவண்ணாமலை வந்தவாசி பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளார். என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த முகாமில் வசித்து வந்த பரமேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பெண்ணுக்கும் விழுப்புரம் கீழ்புதுப்பட்டு அகதி முகாமைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த பெண் கணவனை…
மோதல்களின் மத்தியில் ஈராக்கில் புதிய அரசு பதவியேற்பு
ஈராக்கில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில் ஒன்றிணைந்த புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னி மற்றும் குர்திஷ் இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிப் பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கின் பாதுகாப்பு அமைச்சராக ஹைதர் அல் அபாதி செயற்படவுள்ளதோடு இப்ராஹிம் ஜபாரி வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார் பல அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு பிறகே ஈராக்கில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கில் புதிய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டு வந்த ஸலேஹ்…
குருணாகலில் பதற்றம்- நான்கரை வயது குழந்தை கடத்தல்
நான்கரை வயது குழந்தையை இனந்தெரியாத நபர்கள் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் ஒன்று குருணாகல், வெல்லவ நிகந்தளுபொத்த எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீட்டின் இறப்பர் சீட் அடிக்கப்பட்டிருந்த யன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தே குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாகவும்இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்துடனான பேச்சுக்கு தயார் – தமிழ்க் கூட்டமைப்பு
இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் அமையக்கூடாது எனவும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக காணப்படவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்பு சாதனத்துறை சம்பந்தமான பயிற்சிப்பட்டறைக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது
(எம்.எச்.எம். அன்வர்) தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில்நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் தெரிவித்தார். இதுவிடயமாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கணனி உதவியுடன் கமெரா, வீடியோ, ஓடியோ போன்ற தொடர்பு சாதனத்துறைக்கு அவசியமான கருவிகளை கையாளுவதற்கும், செய்திகள் சேகரிப்பதற்கும், அதனை முறையாக எழுதுவதற்கும் தேவையான நுணுக்கங்கள் இப்பயிற்சி பட்டறை மூலம் வழங்கப்படும். எமது அல்மனார் நிறுவனம் ஆற்றிவரும் செயல்வடிவங்களில் இன்னுமொரு நடவடிக்கையாக இது அமைவதுடன்…
எபோலாவின் தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம்!
-உலக சுகாதார நிறுவனம்- மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் மிக வேகமாகபரவுவதால் அடுத்த சில வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் தாக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு நேற்று (08) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவியுள்ளது. அதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. இதுவரையில் எபோலா வைரஸ் தாக்கி கினியா, சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியாவில்…
ஜனாதிபதிக்கு எதிரான வழக்கில்- சரத் என் சில்வா
நாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துப்படி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார். 18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அதில் சில சிக்கல்கள் இருப்பதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோருவதற்கு ஜனாதிபதிக்கு முடியாது என்றும் சரத்…
இலங்கை அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்
திருவண்ணாமலையின் விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது குடும்பங்களுடன் மீளிணைக்க வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் எங்கிருக்கிறார்கள் என்ற விடயம் தெரியாமலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தப்போராட்டத்தில் 24 பேர் இணைந்துள்ளனர். தாம் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நூதனசாலையில் இலங்கை அகதிகளின் படகு
இலங்கை அகதிகள் 66 பேரை ஏற்றி வந்த இந்த படகு கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி வடக்கு பேர்த்தை சென்றடைந்தது. இந்த படகு எல்லைப் படையினரின் கண்காணிப்புக்கு அப்பால் எவ்வாறு சுறுசுறுப்பான கெரால்டன் துறைமுகத்துக்கு வந்தது என்பது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் குறித்த படகை பாதுகாக்க முடியாமையை தொடர்ந்து அதனை நூதனசாலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழக முதல்வர் வழக்கு!
தாம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதாக அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டிருந்தார். இந்த தகவல் மூலம் சுப்பிரமணியன் சுவாமி அவதூறை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு வந்து சுப்பிரமணியன் சுவாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.
சீனா பொருளாதாரத்தில் அமெரிக்காவைப் பின்தள்ளி விடும்!:IHS
இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் தற்போதைய உலகில் 2 ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனா முதாலாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவைப் பின் தள்ளி நம்பர் 1 இடத்துக்கு வந்து விடும் என IHS என்ற அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக பொருளாதாரத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் அமெரிக்கா இன்னும் 10 வருடங்களில் 2 ஆவது இடத்துக்கு வந்து விடும் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக சீனாவில்…
மன்னார் விளையாட்டுப் பெருவிழா – பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்
மன்னார் விளையாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் நாணாட்டன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.
