News
பாதணிகள் என்னுடையதுதான் ஆனால் பழையது
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையில் 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு, காலி முகத்திடலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தான் அணிந்து சென்ற பாதணிகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வீட்டிலிருந்த பாதணிகளில் இரண்டை அணிந்து சென்றேன். அந்த பாதணிகளில்…
அமெரிக்காவை எதிர்கொள்ள தயார் – ISIS
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். களை ஒடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால், அமெரிக்க இணைதளபதி மார்டின் டெம்ப்சி கூறும்போது, அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் மட்டும் பலன் தரும் என்று நினைக்கவில்லை. அது பலன் தராதபட்சத்தில் தரைவழி தாக்குதல் நடத்தவும் தயாராவோம் என்று கூறினார். இதையடுத்து ஐ.எஸ். வாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 52 வினாடிகள் ஓடும் இந்த…
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 96 எம்.பி.க்கள் O/L பரீட்சையில் சித்தியடையாதவர்கள்..!
பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமைகள் கூட கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். தற்போதைய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 142 பேருக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வித் தகமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது மொத்தமாக 142 பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 94 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாதாரண…
பதுளை பள்ளிக்கு ரிசாத் விரைவு பொலிசாருக்கு கடும் கண்டனம்
(எ.எச்.எம்.பூமுதீன்) பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை கைது செய்வதிலும் துரித கவனம் செலுத்தினார். இதற்கமைய . ஒருவர் கைது செய்யபட்டதுடன் மூவரைத்தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர். பொலிசாரின் அசமந்தப் போக்கே இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதற்கு காரணம் என அமைச்சர் அதன்போது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பதுளை ஜூம்ஆ பள்ளிவாசல், அல்-அதான் பாடசாலை மற்றும் மூன்று முஸ்லிம் வரத்தக நிலையங்கள்…
ஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; தேர்தல் கடமைகளில் 12,500 அரச அதிகாரிகள்
ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு தினங்களேயுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதேவேளை தேர்தல் நடைபெறவுள்ள பதுளை, மொனராகலை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் இன்று முதல் தமது தேர்தல் கடமைகளை ஆரம்பிப்பதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார். இன்று முதல் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதுடன், நாளை (19) வாக்குப் பெட்டிகள். வாக்குச்…
233 ஹெக்டயர் கடலை நிரப்பி சொர்க்கபுரி நிர்மாணம்: இருநாட்டு ஜனாதிபதிகளால் நேற்று ஆரம்பித்து வைப்பு
கடலை நிரப்பி 233 ஹெக்டயரில் உருவாக்கப்படும் துறைமுக நகரத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி i ஜின்பிங் ஆகியோரினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1337 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படும் இந்த பிரமாண்டமான அபிவிருத்தி திட்டம் 8 வருடங்களில் முழுமையடைய இருக்கிறது. இரண்டு கட்டங்களாக மேற் கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் மூலம் பெருமளவு நேரடியான மற்றும் மறைமுகமான தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வுள்ளன….
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 % ஆல் அதிகரிப்பு!
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள் (15) நடைபெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான காலாண்டு மதிப்பீட்டின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வரவு செலவு திட்டங்கள் அதிகரிப்புக்கள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியின் மூலமாகவே அளவிடப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் 2014 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல்…
புதிய மின் கட்டணக் குறைப்பு அமுலாகப் போவது இப்படித்தான்!
மாதாந்தம் பெறப்படும் கட்டணப் பட்டியலின் அடிப்படையிலேயே 25 வீத மின்சாரக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.கனேகல தெரிவித்துள்ளார். தற்போது மின்சாரக் கட்டணம் நிலையான கட்டணம் மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கியே தயாரிக்கப்படுகின்றது. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எதுஎவ்வாறு இருப்பினும் மின்சாரக் கட்டணம் புதிய முறைப்படி அனைவருக்கும் 25 வீதம் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். உதாரணமாக 100 ரூபா மின் கட்டணமாக விதிக்கப்படும் ஒருவருக்கு நூற்றுக்கு…
தர்மபால மீது இனவாதி முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனை நாங்கள் மாற்றியுள்ளோம் – மகிந்த
-Gtn- இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாகந்தவில் அனாகரிக தர்மபாலாவின் 150 பிறந்ததினத்தை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்னர் மக்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என சொல்வதற்கே தயங்கினர். நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னை கடிந்துகொண்டனர், யாரும்…
அல்லாஹ் வழங்கிய ஒரு சந்தர்ப்பமாக நினைத்து, உறுப்பினர்களை தெரிவுசெய்வோம்..!
(அஷ்ரப் ஏ. சமத்) நேற்றிரவு பதுளை தியாத்தலாவையில் இரட்டை இலை கட்சியான ஜனநாயக ஜக்கிய முன்ணனியின் இறுதிக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் றிசாத்பதியுத்தீன், வை.எல்.எஸ் ஹமீட், பாரளுமன்ற உறுப்பிணர் ஹசன் அலி அஸ்லம் ஹாஜி, நிசாம் காரியப்பர், மாகாணசபை உறுப்பினர் சுபைர், நவாஸ் முஸ்தபா, மற்றும் முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்களர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பதுளை மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இரண்டு கட்சியும் இணைந்து…
இஸ்ரேலுக்கு அமெரிக்கா போன்று, இலங்கைக்கு சீனா..!
“சீன ஆட்டச்சீட்டை’ அதிகளவுக்கு விளையாடும் போக்கை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருப்பதாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சமனான எதிரிடையாக சீனா செயற்படுமென்ற எண்ணப்பாட்டை இலங்கையின் பாதுகாப்பு நிர்வாகத்துறை கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளதாக “இந்து’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. “அந்தப் புரிந்துணர்வில் மிகைப்படுத்தல் இருக்கிறது’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். “கடந்த சில வருடங்களாக இந்திய சீன உறவுகள் மேலெழுந்து வருகின்ற நிலைமையில், “சீன ஆட்டச்சீட்டின்’ பருமன்…
இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது – நோர்வே
இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயகௌரவம், பல்வகைத் தன்மை போன்றவற்றை நோர்வே அரசாங்கம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் கடும்போக்குடைய அமைப்புக்களை ஊக்குவிப்பதாகவும், இன முரண்பாடுகளை தூண்டுவதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கையில் முரண்பாடுகளை…
