Headlines

வடக்கு மாகாண சபைக்கு ஒரு வயது

25 வருடங்களின் பின்னர் 2013 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

Read More

பலியெடுத்தது இராவணன் வெட்டு : இரு குழந்தைகள் சாவு

திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் உள்ள கடலில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இன்று மதியம் 01.00 மணியளவில் குழந்தைகளுடன் கடலில் குதித்தவேளை மூவரும் கடற்படையினரால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது 12 வயதான சிறுமி மற்றும் 09 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ள நிலையில் தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.கற்பாறைகளின் மேலிருந்து கடலை பார்த்து கொண்டிருந்த போது மகன் தவறி விழுந்து விட்டதாகவும்…

Read More

வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.இதேவேளை…

Read More

ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014: வாக்களிப்பு ஆரம்பம்!

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. 834 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவு பெறும் என்று தேர்தல்கள் அத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்றையதினமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

Read More

போனஸ் ஆசனம் தருவதாக பொதுபலசேனா அழைத்தாலும் அய்யூப் அஸ்மீன் சென்றுவிடுவார்

முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க போனஸ் ஆசனம் தருகின்றோம் வாருங்கள் என பொதுபலசேனா அழைத்தாலும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் சென்றுவிடுவார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவம் இல்லை என குற்றம் சுமத்தும் கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அவரது செயற்பாடுகள் அவ்வாறு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. கல்முனை வடக்கு இளைஞர்  அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் வெயியிட்டுள்ள அறிக்கையில் மேற்படடி குறிபிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தமிழ் தேசிக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் வடக்கு முஸ்லிம்கள்…

Read More

பல்கலை மாணவர்கள் கொழும்பில் போராட்டம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியை விற்கின்றமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து நேற்று கொழும்பில் பல் கலைக்கழக மாணவர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தாமரைத்தடாக சுற்றுவட்டத்துக்கு அருகாமையிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தை மாணவர்கள் முன்னெ டுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக பல கோ­ங்களை எழுப்பியிருந்தனர். அரசால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை விற்பனை செய்வதற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாள்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், மஹாபொல…

Read More

மாண்ட குழந்தை மீண்டதாம்; மானிப்பாயில் பரபரப்பு

 யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர்.  இதனை அடுத்து  குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது  குழந்தை…

Read More

இலங்கை பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு காரணம் கூறும் அமெரிக்கா

சர்வதேசமே இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில்  உள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு சமூகமே பொறுப்பாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் 27வது அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது.இலங்கை உட்பட்ட சில நாடுகளில் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அமெரிக்கா இதன்போது தெரிவித்துள்ளது.இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட அமெரிக்கா, ருவண்டா, டார்பூர், சிரியா போன்ற நாடுகளிலும் இதேநிலையை காணக்கூடியதாக உள்ளது…

Read More

மஹிந்த அரசின் பொய்யுரைகளை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்

தேர்தலுக்கான மஹிந்த அரசின் இலஞ்சமே மின்கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைக் குறைப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவினதும் அவர் தலைமையிலான அரசினதும் பொய்யுரைகளை இனியும் நாட்டு மக்கள் நம்பப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  “நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் ஆட்சிக்கு வந்த நான் தேர்தலுக்காகச் செயற்படும் தலைவன் அல்லன். மின்கட்டணத்தை நாம் குறைத்தது தேர்தலை இலக்காகக் கொண்டல்ல. அன்று நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அதனை மேற்கொண்டோம்” என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில்…

Read More

ஆபிரிக்க நாட்டு மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் ஒரு மில்லியன் கையுறைகள் அனுப்பிவைப்பு

ஆபிரிக்காவில் எபோலாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கான இலங்கையின் பங்களிப்பாக, ஒரு மில்லியன் சத்திரசிகிச்சைக் கையுறைகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (செப். 18) அலரி மாளிகையில் வைத்துக் கையளித்தார்.

Read More

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை விரைவில் அறிவிப்போம்: த.தே.கூ

எதிர்வரும் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினாவியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் நிச்சயமாக தீர்மானமெடுக்கும். நாட்டின் ஆட்சியினை தீர்மானிக்கும் தேர்தலில்…

Read More

பிரிவிற்கு எதிராக ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களிப்பு

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதை வாக்கெடுப்பு முடிவுகள் தெளிவாகியுள்ளன. இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இவை இணைந்துள்ள பகுதி கிரேட் பிரிட்டன் அல்லது பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுடன் வடக்கு அயர்லாந்தும் இணைந்துள்ளது.   இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு ஆக செல்ல முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஸ்கொட்லாந்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரிட்டனிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தது.   ஆனால் ஸ்கொட்லாந்து…

Read More