News
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது
K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன.உலக சரித்திரத்தில் கால் நூற்றாண்டு அகதிவாழ்வு(அவலவாழ்வு)வாழ்ந்தோர் என்ற பெயர் இவர்களின் தலையில் எழுதப்படவுள்ளது.மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் வடபுலமண்ணில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் ஒரு 30 வீதமக்களே இதனைச்சரியாகப் பயன்படுத்தி மீளக்குடியேறியுள்ளனர்.ஏனைய மக்கள் சரியான முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடி வருகின்றனர்.அதற்கான காரணங்களாவன,,போதிய காணிகள் இன்மை,அழிக்கப்பட்ட வீடுகள் இன்னும் மீளக்கட்டிக்கொடுக்கப்படாமை.நட்டஈடுகள் வழங்கப்படாமை, பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட 23 வருட தமிழ் முஸ்லிம் உறவிடைவெளி தற்போது மெல்ல குறைவடைந்து…
சீன ஜனாதிபதிக்கு நேற்று வரலாறுகாணாத வரவேற்பு
இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் கடற்போக்கு வரத்து போன்றவற்றை ஊக்குவிக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்வில் நடன கலைஞர்கள், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர். இதன் பின்னர் சீனா ஜனாதிபதி வாகனப்பேரணியாக கொழும்பை நோக்கி பயணித்தார். வழி நெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 28 வருடங்களுக்கு பின்னர் சீனா…
மொனராகலையில் 2.1 ரிச்டர் நிலநடுக்கம்
மொனராகலை மாவட்டத்தில் 2.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்திலேயே இன்று அதிகாலை 5.10 க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைக் குறைப்புக்கு காரணம் என்ன?
தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது எரிபொருட்களின் விலைகளை குறைத்திருக்கிறது.இந்த புதிய விலைகள் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்பது கேள்விக்குறியே என அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களின் தேசமே இலங்கை – பொதுபல சேனா
சிங்கள பௌத்தர்களின் தேசம் இலங்கை என்பதை ஏற்றுக்கொள்பவர்களுக்கே ஊவா மாகாண சபைத்தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான வேட்பாளர் தமிழராக, சிங்களவராக, முஸ்லிமாக இருந்தாலும் பிரச்சினையில்லையென சட்ட விரோத வர்த்தகங்களில் ஈடுபடுவோருக்கு மக்கள் வாக்களிக்க கூடாது உலகில் எங்கும் இல்லாத தேர்தல் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது. ஒருவருக்கொருவர் சேறுபூசிக்கொள்வதும் வன்முறைகளும் கொலைகளும் என கீழ்த்தரமான தேர்தல் கலாசாரமே காணப்படுகின்றது. எந்தவொரு தொழிலுக்கு இணைய வேண்டுமானால் அதற்கு…
ஊவா தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவு
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன. இதற்கிணங்க இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பிரசாரக் கூட்டங்களை நடத்துதல், பிரசாரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தல், பிரசார விளம்பரங்களை வெளியிடுதல் உட்பட தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சகல செயற்பாடுகளையும் நிறுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமும் வேட்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் மாகாணத்தின் இரு மாவட்டங்களிலுமுள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களை நாளை வியாழக்கிழமை…
“முசம்மில் வழங்கும் ஒத்துழைப்பை விக்னேஸ்வரன் அரசுக்கு தருவதில்லை’
கொழும்பு மாநகர சபையில், மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட அரசாங்கத்தின் நகர அபிவிருத்திப் பணிகளுக்கு கொழும்பு மாநகர மேயர் நன்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றபோதிலும் வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார். பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித குடியிருப்பு செயல்திட்டத்தின் (யூ.என்.ஹபிடாட்) ஏற்பாட்டில் நடைபெற்ற “நகர…
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்
சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இதேவேளை இலங்கையின் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனாவும் இலங்கையும் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கையில் கைச்சாத்து
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ளார். இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஷி ஜின் பின்ங் இற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின்னர் சீன ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றது. அதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது,…
சென்னையில் கைதான அருண் செல்வராசனிடம் ராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரணை
சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அருண் செல்வராசன் குறித்து நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அருண் செல்வராசனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நேற்று நீதிபதி மோனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புழல் சிறையில் இருந்து அருண் செல்வராசன்…
உலகில் 9 இல் 1 நபர் பட்டினியால் வாடுகின்றனர்:ஐ.நா
உலக சனத்தொகையில் 9 இல் 1 நபருக்கு அன்றாடம் தேவையான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர் என இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா வெளியிட்ட வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் உலகம் முழுதும் 805 மில்லியன் மக்கள் ‘chronic undernourishment’ எனும் வெகுநாள் பட்டினியால் அவதிப்பட்டு போசாக்குக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உணவுக் குறைபாடானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அனுமதிக்க முடியாத அளவு அதிகமாக உள்ளது என்றும் ஐ.நா இன் உணவு மற்றும் விவசாயத்துக்கான…
நியூயார்க்கில் பேசவுள்ள மோடியின் உரையை நேரலையில் ஒளிப்பரப்பத் திட்டம்?
விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையை அந்த நகரமெங்கும் பெரிய திரை அமைத்து நேரலையில் ஒளிபரப்ப செய்ய தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது. வருகிற 25ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ள நரேந்திர மோடி, அங்கு ஐநா சபையில் உரை நிகழ்த்த உள்ளார். அடுத்த நாள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் டைம் சதுக்கத்தில் பேருரையாற்ற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில், மோடியின்…
