News
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பெய்யாமல் மிக கடும் வறட்சி ஏற்படும். குறிப்பாக அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி, இந்தியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி…
2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம்!
அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி. ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார். 2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார். அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். (TO)
சவூதியில் காணாமல்போன தமிழக பெண், இலங்கையரின் உதவியால் 16 வருடங்கனின் பின் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழக பெண் ஒருவர் 16 வருடங்களாக வீட்டாருடன் தொடர்பின்றி இருந்த நிலையில் நேற்று தமது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார். நயிமுன் என்ற இந்த பெண் 1998 ஆம் ஆண்டு சவூதிக்கு பணிக்காக சென்றார். அங்கு சென்றவுடன் வீட்டாருடன் தொடர்புகளை இழந்த அவர், சவூதி எஜமானரின் வீட்டில் 16 வருடங்களாக சம்பளம் எதுவும் இன்றி பணியாற்றி வந்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் இருந்து அவரின் குடும்பத்தினர் நயிமுனை தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் சவூதியில்…
சீன ஜனாதிபதியே மீண்டும், மீண்டும் இலங்கைக்கு வாருங்கள்..!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்தார். அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றருக்கான விலையை 20 ரூபாவாலும், பெற்றோல் விலையை 5 ரூபாவாலும், டீசல் விலையை 3 ரூபாவாலும் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் தேசிய கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இணைக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே…
84 வயதான அப்துல் சமதுவின் வயிற்றிலிருந்து முருகை கற்பாறை வடிவிலான கல் அகற்றம்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான அப்துல் சமது என்பவரின் வயிற்றில் முருகை கற்பாறை வடிவிலான கல்லொன்று சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கிண்ணியா தள வைத்தியசாலையில் 16-09-2014 குறித்த வயோதிபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அவரின் வயிற்றில் முன்னீர்க்கும் சுரப்பியிலிருந்த 60 கிராம் நிறையுடைய கல்லே அகற்றப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ரொஹான் குமாரவினால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வயோதிபர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று…
முஸ்லிம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவு கண்காணிக்க வேண்டும் – பொது பலசேனா
அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலான்தே விதானகே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளதாக தாங்கள் விடுத்துவரும் எச்சரிக்கை உண்மையாக மாறிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முஸ்லீம்கள் உளவாளிகளாக பயன்படுத்தப்படுவது குறித்த இந்திய தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இலங்கையிலிருந்து செயற்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்தியாவையும் தென்னாசியாவையும் பலவீனப்படுத்த முயல்கின்றனர் என்பதே உண்மை என…
சீனாவுடன் நெருக்கமாகும் இலங்கை
இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இலங்கைக்கும் இடையில் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளார்.இன்று இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கானமூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் கோலாகல வரவேற்பளிக்கப்படவுள்ளன.இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால்…
வாக்குறுதிபடி குடிசைக்கு மாற்றப்பட்டது ஆஸி. பிரதமர் அலுவலகம்
ஆவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் கடந்தாண்டு பழங்குடி மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதியின் படி தனது அலுவலகத்தை குடிசைக்கு மாற்றியுள்ளார். கடந்தாண்டு ஆவுஸ்திரேலியப் பிரதமராகப் பதவியேற்ற டோனி அபோட், ஆண்டுதோறும் ஒரு வார காலம் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் தனது பிரதமர் அலுவலகத்தை மாற்றி செயல்படப் போவதாக அறிவித்தார். அதன்படி நேற்று முதல் இன்னும் ஒரு வார காலத்திற்கு, மேற்கு ஆவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து ஆயிரம் கி.மீ., தொலைவிலுள்ள நுலுன்பை என்ற இடத்தில் தற்காலிக…
இலங்கையை வந்தடைந்தார் சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதியும் அவர் பாரியாரும் சற்று முன்னர் இலங்கை விமானநிலையத்தை வந்தடைந்தனர். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் பாரியாரும் சீன முதற் பெண்மணி பெங் லியோன் ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ வரவேற்க்கவுள்ளதாக ஜானாதிபதியின் ஊடக பேச்சாளர் மோகன் சமரனயகே தெரிவித்தார்.
ஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறும்போது, பொலிஸாரினால் ஒன்றும் செய்யமுடியாது – JVP
ஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித் திரியத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஊவா மாகாண சபைத் தேர்தல் பல்வேறு வகையிலும் சாதனை படைக்கப் போகின்றது. இலங்கையில் அதிகமாக…
ஹஜ்ஜுக்கு குறிப்பிட்டவர்களே போகாமல் அந்த வாய்ப்பை இன்னுமொரு முஸ்லிமுக்கு வழங்குங்கள் – ஜனாதிபதி
இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிமடையில் நேற்று தெரிவித்தார். பல தடவைகள் செல்லும் நடை முறைக்குப் பதிலாக அனைத்து முஸ்லிம்களும் இந்த யாத்திரையை மேற்கொள்ள வசதியாக இத்திட்டம் செயற்படுத்தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி, மத விவகார அமைச்சினூடாக இதற்கான நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வெலிமடையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி…
அரசாங்கத்திலிருந்து என்னை வெளியேற்ற சூழ்ச்சி – அமைச்சர் ராஜித
ஆளும் கட்சியிலிருந்து தம்மை வெளியேற்ற சிலர் சூழ்ச்சி செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுனில் பிரேமசிங்கவினால் எழுதப்பட்ட சதஹஸ் செவனலி என்ற நூல் வெளியீட்டு விழாவில் அண்மையில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த முயற்சிகள் வெற்றியளிக்காது. நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லப் போவதில்லை. சகடும்போக்காளர்கள் தேசத்துரோகி என குண்டு வீசினாலும், தேசப்பற்றாளர் என குண்டு வீசினாலும் நான் யார் என்பது எனக்கே இன்னும்…
