News
யாழ்.தேவியின் பரிட்சார்த்த ஓட்டம் தொடர்கிறது
யாழ்ப்பாணத்திற்கான சேவையினை முழுமையாக வழங்கும் வகையில் யாழ்தேவியின் பரீட்சார்த்த ஓட்டம் இன்றும் தொடர்ந்தது.பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை இன்று பகல் 11 மணியளவில் வந்தடைந்தது. இன்றைய வெள்ளோட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலர் இளங்கோவன் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இன்றும் ரயிலைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக…
நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.
சவூதி உதவியில் மருதானையில் குடும்ப நடைமுறை நிலையம் திறப்பு
இலங்கை இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் அமைத்துள்ள குடும்ப நடைமுறை நிலையமும், உடல்சார் சிகிச்சைப் பிரிவும் மருதானை பியதாச சிரிசேன மாவத்தையில் செப்டம்பர் 24ஆம் திகதி காலை திறந்து வைக்கப்படும். இஸ்லாமிய நிலையத் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான எம். எச். முஹம்மத் தலைமையில் நடைபெறும் இவ் வைபவத்தில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். சவூதி அரேபிய இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி அநுசரணையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே – ஏ.எல்.தவத்தின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை
“ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே, முஸ்லிம் கூட்டமைப்பல்ல” என்ற கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பாக, உண்மைதான், நீங்கள் சொல்வது போல முஸ்லிம் கூட்டமைப்பு தோற்கவில்லை ஏனெனில் அரசாங்கத்தின் தேவைப்படி ஐ.தே.கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் உறுப்பினரையும் வெற்றி பெற விட்டுவிடக் கூடாது என்பதை மறைமுகமாக வைத்து களமிறக்கப்பட்ட உங்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதும் ஊவா முஸ்லிம்கள் கடந்த முறைபோல இம்முறையும் பிரதிநிதித்துவம் இன்றி தோற்றுவிட்டார்கள் என்பதும் வெறுப்பூட்டும் ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரும்…
ஞானசாரரிடம் பொலிசார் விசாரணை
கண்டியில் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீதான தாக்குதல் குறித்து ஞானசார தேரரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கண்டியில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது குண்டர்கள் சகிதம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஞானசார தேரரிடம் நேற்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பியுள்ளனர்….
இலங்கைக்கு வந்த விமானத்தை, பறவை தாக்கியது – விமானம் அவசர தரையிறக்கம், காற்றாடி பழுது
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2:30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து விமானம் மேலே எழும்பியபோது பறவை ஒன்று விமானம் மீது மோதியது. விமானத்தின் முன்பக்க காற்றாடியில் பறவை சிக்கியதால் காற்றாடி பழுதடைந்தது. இதை கவனித்த விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 139 பயணிகளும் திருச்சி ஹோட்டலில் தங்க…
வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கும் போது, புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர்
வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கும் போது தற்போது பாவனையில் உள்ள உத்தியோக பூர்வ முத்திரைக்கு பதிலாக புதிய பாதுகாப்பு ஸ்டிக்கரை பயன்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்பொருட்டு அவ்வாறான ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு, தற்போது அரசாங்கம் அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அச்சகத்தின் முத்திராதிபதி லலித் டி சில்வா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இந்த புதிய நடைமுறையின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு முற்னேற்றகரமானதும் முழுமையான பாதுகாப்பானதுமான விசாவை பெற்றுக்கொடுக்க முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர்…
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை – வாசுதேவ நாணயக்கார
மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை வழங்கியுள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியிலேயே அரசாங்கம் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுளளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை, வறட்சி போன்ற காரணிகளை விடவும் பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஊவா மாகாண மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சிறுபான்மையின மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான…
இனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி – தயான் ஜயதிலக
அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவவில்லை என்பது உண்மை. எனினும், 2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. தார்மீக ரீதியாக அரசாங்கம் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச…
ஐக்கிய தேசிய கட்சியில் ஹரின் பெர்ணாண்டோவின் சூடு பறக்கிறது..!
ஊவா மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியகட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின்பெர்ணாண்டோ வெளிப்படுத்திய தலைமைத்துவ பண்புகள் மற்றும் கட்சிக்கு கிடைத்துள்ள சாதகமான முடிவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து அவரை கட்சியின் பிரதித்தலைவராக்க வேண்டும் என கட்சியின் தலைவர்கள் சிலர் கருதுவதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஹரின்பெர்ணாண்டோவின் பெயரை பிரதிதலைவர் பதவிக்கு சிலர் முன்மொழியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில்விக்கிரமசிங்க சஜித்பிரேமதாஸாவின் பெயரை கட்சியின் பிரதிதலைவர் பதவிக்கு முன்மொழிவார் என ஊவா…
ஊவா; 6 ஆசனங்களை இழந்த ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கின்றது. ஆனாலும், 2009ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடும் போது 6 ஆசனங்களை இழந்துள்ளதுடன், மக்களின் அபிமானத்தையும் பெருமளவில் இழந்துள்ளமை தேர்தல் முடிவுகளில் தெரிகின்றது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகி வந்தது. இறுதி முடிவு சற்று முன்னர் வெளியானது. அதன் பிரகாரம், ஐக்கிய மக்கள்…
இழுபறி நிலையிலிருந்த ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகள் நாளை
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நேட்டோ துருப்புகளின் பாதுகாப்புடன் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னணியில் இருந்ததாக அறிவிக்கப்பட்டார்.இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப்கனி அகமதுசாய் முன்னணியில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா மறுக்கவே முடிவுகளை வெளியிட முடியாமல் அங்கு குழப்பமான சூழ்நிலை எழுந்தது.அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரி தொலைபேசி…
