News
இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு
ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், சரீஆ கவுன்சில், மேமன் ஹனபி பள்ளி வாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் தக்கியா, ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை – முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன்
தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
பௌத்த அரசை நிர்மாணிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது – பொதுபல சேனா
பௌத்த அரசை அமைப்பதற்காக நேரம் நெருங்கியுள்ளது. பௌத்த கொள்கைக்கமைய இலங்கையில் சிங்கள பௌத்த மக்களின் ஒத்துழைப்பில் அரசாங்கம் பௌத்த அரசொன்றை அமைக்காவிடின் அப்பொறுப்பை பொதுபலசேனா நிறைவேற்றுமென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். கிருலப்பனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பொதுபலசேனா அமைப்பின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பொது மாநாடொன்று நடைபெறவுள்ளது….
பருத்தித்துறையில் 1000 கிலோ ஆனைத்திருக்கையை பிடித்த நீர்கொழும்பு மீனவர்கள்
முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப்பட்டுள்ளது. மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அரிதான வகை திருக்கை மீனான ஆனைத்…
கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது…!
(டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு கரையோரப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டதுமாகும். நீண்ட காலக்குறைபாடு இத்தகைய பிரதேசத்தில் இதுவரை ஜனாஸாக்களை அரச, தனியார் வைத்தியசாலைகளில் இருந்து எடுத்து வருவதற்கான பிரத்தியேகமான வாகனங்கள் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வந்தது. முன்னேற்றம் கண்ட இந்தப் பிரதேசத்தில் வாகனங்கள் மலிந்தே காணப்பட்டாலும், ஜனாஸாக்களை தமது வாகனங்களில்…
சிங்கப்பூரில் தங்கம் வழங்கும் ATM
ஏ.டி.எம். என்றாலே நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தேவைக்கேற்ப எடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரம் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் சிங்கப்பூரில் தற்போது புதிதாக இரண்டு ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணத்திற்குப் பதிலாக ஜொலிக்கும் தங்கம் வெளிவருகிறது. சிங்கப்பூரில் உள்ள வேர்ல்டு சென்டோசா அண்டு மரியான பே சாண்ட் ரிசார்ட்டில் இரண்டு ஏ.டி.ஏம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த சுவிஸ் நகை சுத்திகரிப்பாளர்களால் சுத்தம் செய்யப்பட்ட தங்கத்தை இந்த இரண்டு ஏ.டி.எம். மையங்களும்…
மியன்மார் விராத்து இலங்கை வருகிறார்..!
28 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் பொதுகூட்டத்தில் தேசிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக பொதுபல சேனா வட்டாரங்கள் தகவல் வெளிட்டுள்ளன. அதேநேரம் மியன்மாரின் சர்ச்சைக்குரியபௌத்த மத அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.
பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை
உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தாகள் 11-9-2001 அன்று அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் 100 மாடிகள் கொண்டநியூயார்க்கின் இரட்டை கோபுர கட்டிடத்தை மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்து நொறுங்கியது. 4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள். இந்த தாக்குதலில் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுர கட்டிடங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது….
சவுதி அரேபியாவில் வாசிங் மெசினில் சிக்கிய 3 வயது குழந்தை
பெற்றோர்கள் வீட்டில் விளையாடும் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் கொள்வது அவசியம் என்பதை எத்தனையோ விபரீத சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நகரில் 3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வாசிங் மெசின் மேல் ஏறி நின்று போது தவறி உள்ளே விழுந்து வெளியே வர முடியாதபடி சிக்கி கொண்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களால் மிகுந்த கவனமாக…
Breaking News மாவனல்லையில் கடைகள் தீப்பிடித்து எரிகின்றன.
மாவனல்லையில் பஸ் ஸ்டான்ட் தரிப்பிட கட்டிடத் தொகுதியில் (பிரதேச சபை கடைத்தொகுதி) சுமார் நான்கு முதல் ஏழுகடைகள் தீப்பிடித்து எரிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இன்று காலை 11 மணியளவில் இக்கடைகளுக்கு தீப்பிடித்ததாகவும், தற்போது போலீசார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது.தீ விபத்துக்ககான காரணம் இதுவரை தெரியவரவில்லை. தீப்பிடித்த குறிப்பிட்ட கடைதொகுதியில் முஸ்லிம்கள் மற்றும் பெரும்பான்மை சகோதரர்களின் கடைகள் காணப்படுகின்றன.
இஸ்ரேலின் பிரபல மொசாட் உளவாளி மரணம்
இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் பிரபலமான உளவாளி மைக் ஹராரி தனது 87ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன் னணியில் நின்று செயற்பட்டவராவார். ஹராரி, டெல் அவிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்ததாக இஸ்ரேல் குறிப் பிட்டுள்ளது. இவர் 1970களில் மொசாட்டின் முக்கிய உளவு செயற்பாடுகளில் பங்கேற்ற வராவார். 1972 மியுனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரர்களை படுகொலை செய்த ஆயுததாரிகளை இலக்குவைத்து கொலைசெய்த மொசாட் உளவு நடவடிக்கையை முன்னெடுத்ததில்…
முசலி நவீன நகர திட்டமிடல் அமைச்சர் ரிஷாத் கொழும்பில் முக்கிய பேச்சு
மன்னார் – முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க நகர அபிவிருத்தி அதிகார சபை இன்று விஷேட குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்குமிடையில் இன்று கொழும்பில் இடம் பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தே குறித்த குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தம் காரணமாக மிக மோசமாக அழிந்து போயிருந்த முசலி…
