Headlines

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55…

Read More

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி

கிளிநொச்சி – இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

 யாழில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

Read More

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மற்றுமொரு பகுதி காணி; விரைவில் விடுவிப்பு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட  காணியில் விடுவிக்கப்படாமலிருக்கும் எஞ்சிய நான்காயிரத்து 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக யாழ் பாதுகாப்புச் சேவைகள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் . கீரிமலை வீடமைப்புத்திட்டம் இம்மாத இறுதியில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். நேற்று (7) கீரிமலைக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்காக…

Read More

வித்தியா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை கோரிய சந்தேகநபர்

மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் வாசித்து காட்டினால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் விடுபட சாத்தியமுள்ளது என நீதவானிடம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் கூறியுள்ளார். குறித்த படுகொலை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்றிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 12 சந்தேக நபர்களையும் நோக்கி நீதிவான் ஏதாவது உங்கள் சார்பாக விண்ணப்பங்களை மேற்கொள்ள உள்ளீர்களா? எனக் கேட்டார். இதன்போது 5வது…

Read More

தவறான சமிக்ஞையை வழங்கிவிடக்கூடாது!

-நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழுகை அறை மூன்றாவது முறையாக தாக்குதலுக்குள்ளான சம்பவம் இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் இனம்தெரியாத சிலர் தொழுகை அறையை தாக்கி அதற்குள்ளிலிருந்த மின் விசிறிகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 650 முஸ்லிம் மாணவர்களுக்கு ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஒதுக்கப்பட்ட பத்து பத்தடியிலான அறையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் நாட்டுக்கு வழங்கும்…

Read More

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்.. . யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தொழுகை அறை தாக்கப்பட்டமை வருத்தத்துக்குரியது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் யாழ் பல்கலைக்கழக நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் கல்விப்பிரிவுப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி ஸிஹாப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் மீண்டும் துளிர்விட்டு வரும் இனநல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், இனந்தெரியாதோர்…

Read More

ஏ9 வீதியில் விபத்து

ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், நாலந்த உடுதேனிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 மற்றும் 24 வயதான இருவர் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம்; நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். தற்போது சடலம் நாலந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது….

Read More

வடக்கு கிழக்கில் உள்ள பாதைகள் அபிவிருத்தி செய்யப்படும்

வடக்கு கிழக்கில் உள்ள 15 கிலோ மீற்றர் தூரமான பாதைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Read More

முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு – விசாரிக்குமாறு வலியுறுத்து

இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் மீது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு முன்னிலையில் இந்த கோரிக்கை முஸ்லிம்கள் சார்ந்த சிவில் அமைப்புகளினால் முன் வைக்கப்பட்டுள்ளன. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு நேற்று (18) வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச…

Read More

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது

-சுஐப் எம்.காசிம் – பல்வேறு கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலேயே தான் எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்றி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (16/08/2016) யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், யாழ் முஸ்லிம் வாட்டாரத்துக்குச் சென்று, அங்கு மஸ்ஜிதுல் மரியம் ஜும்ஆ பள்ளிவாசலில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மீள்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், எதிர்வரும் காலங்களில் இந்தக் கஷ்டங்களை படிப்படியாகத் தீர்க்கக்கூடிய நல்ல…

Read More

அமைச்சர் றிஷாத் அங்கம் வகிக்கும் வடக்கு மீள் குடியேற்ற செயலணி

பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது ரிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் கொண்டதாக உள்ளது. 1990 ஆம் ஆண்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட 90,000 வடபுல முஸ்லீம் அகதிகள் ஒருபுறம் இருக்க 2009 இல் இடம் பெயர்ந்த…

Read More