Headlines

புத்தெழுச்சி பெறத்துடிக்கும் பெரியமடுக் கிராமம்

– சுஐப் எம்.காசிம் – பருவ மழை குறைந்த காலங்களில் விடத்தல்தீவு விவசாயம் பாதிக்கப்படுவதுண்டு. அதனால் வயல்களுக்கு வேண்டிய நீரைத் தேக்கி வைக்கக் குளம் தேவைப்பட்டது. விடத்தல்தீவிலிருந்து எட்டு மைல்களுக்கு அப்பால் கிழக்கில் அமைந்த பெரியமடுக் குளம் தூர்ந்த நிலையில் காணப்பட்டது. இக்குளத்தைப் புனரமைத்துத் தேவையான நீரைப் பெற விடத்தல்தீவு விவசாயிகள் முயற்சித்தனர். அதன் பெறுபேறாக 1955ஆம் ஆண்டளவில் பெரியமடுக் குளம் புனரமைக்கப்பட்டது. குளத்தை அண்டி மக்களைக் குடியேற்ற அரசு தீர்மானித்தது. அதற்கமைய விவசாய முயற்சியில் ஆர்வமும்,…

Read More

தீவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சி!

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் யாழ் குடா தீவுப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக உதைபந்தாட்ட பயிற்சியொன்று அண்மையில் (25) நடாத்தப்பட்டது. இச்செயற்றிட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்தர விஜேகுணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி உதைபந்தாட்ட பயிற்சியின் ஒரு கட்டமாக அண்மையில் (27) மண்டை தீவில் அமைந்துள்ள வெலுசுமன கடற்படை முகாமில் நயினாதீவு மற்றும் மண்டை தீவு அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது. மேற்படி போட்டிகளின் மூலம் தேசிய மட்டத்தில்…

Read More

வடக்கில் 700 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியேற்றும் அரசின் செயற்றிட்டங்களுக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 701.3 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்கேசன்துறையில் இடம்பெற்ற தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறே மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 201.3 ஏக்கர் காணிகளை…

Read More

25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி பாவனைக்கு!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன. இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில்…

Read More

நீதிமன்றத்தில் மீன் ஏல விற்பனை

தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார். அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்;பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி…

Read More

சீன தூதுவர் – வடமாகாண ஆளுனருடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங்லியாங் அடங்கிய குழுவினர் இன்று(14) வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுனர் தூதுவரிற்கு விளக்கமளித்தார்.

Read More

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் பகுதிகள், மழை நீரில் மூழ்கின

-பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் மக்கள் வாழும்  பல்வேறு பகுதிகள் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட வாழக்கை பாதிப்படைந்துள்ளதை காண முடிந்தது. நேற்று முற்பகல் 11.30 மணி முதல் தொடர்ச்சியாக பெருமழை அப்பகுதிகளில்  பெய்துவருகின்றது. சில வீதிகள்  ஆங்காங்கே வெள்ள நீரினால்  மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களில்  நிலவிய கடுமையான வெப்பத்தையடுத்து நேற்று  முற்பகல் முதல் கன மழை தொடர்ந்த  வண்ணமுள்ளது. இதனால் கிராம சேவகர் பிரிவுகளான ஜே-85இஜே-86இஜே-87 இஜே-88 பகுதிகளில்…

Read More

அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் மின்சாரம்! அஜித் பெரேரா

மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (12) மாலை 5.00 மணியாளவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார விநியோக அமைப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா விஜயத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

மூவினங்களையும் பிரதிபலிக்கும் இராணுவமே நாட்டுக்கு தேவை!

நாட்டிற்கு தேவை தமிழ், சிங்கள, முஸ்லீம் இளைஞர் யுவதிகளை கொண்ட அனைத்து இனங்களையும் பிரதி பலிக்கும் இராணுவமே என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரவித்துள்ளார். நாட்டிற்காக உயிர் நீர்த்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வானது கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் அண்மையில் (10.05.2016) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண…

Read More

வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

வடமாகாண பிரமாண அடிப்படை­யிலான மூலதன நன்கொடை வழங்கல் திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பிரதேசத்­தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குட்பட்ட 6 குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சி.அகிலதாஸ் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

Read More