வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்களை மக்கள் தண்டிக்க துடிப்பதையும் ஆக்ரோஷப்படுவதையும் நாம் குறைகூற முடியாது என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த சட்டத்தை கையில் எடுக்கவேண்டாம் என்றும் சட்டம் தன் கடமையை சரியாக செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புங்குடுதீவு மாணவி…
