Headlines

மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று இரவை பாராளுமனரத்தில் கழிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்….

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தை மீறி செயற்படுவதாக குற்றம் சாட்டியும் முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமனரத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகினறனர். குறித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் நாளை விடியும் வரை பாராளுமன்ரத்தில் வீற்றிருந்து தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு தவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு…

Read More

விசாரணைக்கு வேறு திகதி கேட்கிறார் கோத்தபாய!

லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவினால் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரும் முன்னாள் ஜனாதபிதியுமான மஹிந்த ராஜபக்சவுடன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் தன்னால் குறித்த தினங்களில் சமூகமளிக்க முடியாது என்பதால் மாற்றுத் திகதியை நிர்ணயிக்கும்படி அவர் கோரியுள்ளார். மிஹின் லங்கா நிறுவனம் பற்றியும் அதேவேளை அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றியும் விசாரிக்க 24 மற்றும் 27ம் திகதி அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தான் வேறு பணிகளில் குறித்த நாட்களில் ஈடுபடுவதால் மாற்றுத் திகதி வழங்குமாறு அவர் கடிதம் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரிப்பதில் என்ன பிழை – ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தீர்மானம் சுயாதீனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சாட்சியமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு மஹிந்த அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடி;ககைகளில் அரசங்கம் தலையீடு செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் ஏதெனும் பிரச்சினை இருந்தால் முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியின் ஊடாக உரிய…

Read More

ஐ.நா போதை பொருள் – குற்றவியல் தடுப்பு அலுவலகம் இலங்கையில்

ஐக்கிய நாடுகள்  அமைப்பின் போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐநா போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு காரியால பிரதானி யூரி பெடட்டோவுக்கும் நீதிமன்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. இந்து சமுத்திரத்தை கேந்திரமாக கொண்டு உலக நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகப்படுத்தை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும். ஐநாவின் போதை பொருள் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சபையின் 13ஆவது உயர் மட்ட குழுக்கூட்டம்…

Read More

மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் – பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவைக்கு நடுவே அமர்ந்திருந்தே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பில் இன்றே எமக்கு தீர்மானம் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடமைகள் சம்பந்தமாகவே அழைக்கப்பட்டுள்ளார். அது பிரச்சினையாக…

Read More

கோட்டாபயவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

ஒரு சமூகத்திற்கு மட்டும் இந்த நியமனத்தை வழங்குவதாக பிரசாரங்களை செய்தனர் -றிஷாத் பதியுதீன்

எமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்ங்கள் தொடர்பிலும் சகல சமூகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடியே அதனை செய்கின்றோம்.நாம் இவ்வாறான வெளிப்படைத்தன்மையினை பேனுவது எம்மில் இனவாத கொள்கையின்மையே ஆனால் சில அரசியல் கட்சிகள் அவர்கள் சார்ந்த மக்களை மட்டும் அழைத்து கலந்துரையாடுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் வடக்கு மக்களின் புரந் தியாகங்கள் இருப்பதாகவும் கூறினார். மன்னார்…

Read More

சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பபாடு செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (2015-04-18) வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வீடமைப்பு,சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு இந்த கௌரவப்பட்டங்களை வழங்கி வைத்தனர்..

Read More

சொந்த மண்ணுக்கு திரும்பும் விடத்தல்தீவு மக்கள்

சுஐப் எம் காசிம் மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ். நகர் செல்லும் கரையோரப் பாதையில் 15வது மைலில் அமைந்துள்ள அழகிய கிராமம் வித்தல்தீவு. கிராமத்தின் கிழக்கில் அமைந்த வன்னி மேட்டு நிலங்களில் பெய்யும் மழை நீர் ஆறாக உருவாகி ‘நாயாறு’ என்னும் பேராறாகப் பெருகிக் கிராமத்தைச் செழிப்படையச் செய்துள்ளது. இந்த ஆறு கிராமத்தின் வட, தென் எல்லைகளில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் சங்கமிக்கிறது. ஆற்றின் கழிமுகம் சிறந்த துறைமுகமாக விளங்குகிறது. கிராமத்தின் கிழக்கில் அமைந்த…

Read More

குவைத்தில் இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்

குவைத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று 18-04-2015 நாடு திரும்பியுள்ளனர். தற்காலிக கடவுச்சீட்டுகள் மூலம் அவர்களை நாட்டிற்கு அழைத்துவந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்பெண்கள் குவைத்திற்கான இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 80 பணிப்பெண்களும் நாடு திரும்ப வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது. இதன்பின்னர் இந்தப் பெண்கள் பணிபுரிந்த இடங்களின் எஜமானர்களுடன்…

Read More

பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை, 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிடலாம்..!

பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் நேற்று (17) திறந்துவைக்கப்பட்டது. முதல் நாளிலேயே சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையைப் பார்வையிட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர டி சில்வா குறிப்பிட்டார். குறிப்பாக பின்னவலை யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடச் செல்கின்றவர்கள், அதன் அருகாமையிலுள்ள திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கும் சென்று மிருகங்களைப் பார்வையிடுவார்கள்…

Read More