Main News
பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமனம்
பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், மொரட்டுவை, சப்ரகமுவ,ஊவா,வெல்லஸ்ஸ, தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள், கலைப் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வடமேல் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.9 வீதமாக வீழ்ச்சியடையலாம்: உலக வங்கி
தெற்காசியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.9 வீதமாக வீழ்ச்சியடையலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. பொதுத்துறையினருக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் அதிகரித்துள்ள செலவிடப்படும் வருமானம் போன்றவை இந்த நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும், பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவாகவிருந்த கடந்தகால முதலீடுகளை புதிய அரசாங்கம் மீளாய்வுசெய்ய ஆரம்பித்திருப்பதால் போட்டித்தன்மை தொடர்ந்தும் சவாலாக இருப்பதாகவும் உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள…
மஹிந்தவின் உதவியில் பதவியைப் பிடித்த பான் கீ மூன் – கொரிய நாளிதழ் அதிர்ச்சித் தகவல்
பான் கீ மூனை ஐ.நா பொதுச்செயலராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான, சங் வொன்- ஜொங் தெரிவித்த தகவலை கொரிய நாளிதழான Dong-A Ilbo வெளியிட்டிருக்கிறது. தாம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி, சிறிலங்கா சார்பில் 2006ம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட ஜயந்த தனபாலவை போட்டியில் இருந்து விலக வைத்ததுடன், பான் கீ மூனை ஆதரிக்கச் செய்ததாகவும், தென்கொரிய…
இலங்கை பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு!
இலங்கையின் இனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா கட்டமைப்பு ரீதியாக பொருத்தமில்லாத நாடு என, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உணர்வு மற்றும் தேர்தல் அதிகாரங்களோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை ஜயதிலக்க ஞாபகப்படுத்தியுள்ளார். மேலும் இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும்…
அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக றிஷாத் பதியதீன் ஜனாதிபதியால் நியமனம்
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்தல், அசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும், இந்த மூன்று மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்குபடுத்தல், அவதானித்தல் மற்றும் பணிகளுக்கான அனுமதியை வழங்கல் என்பன இந்தத் தலைமைத்துவத்தின் பணிகளாகும் என ஜனாதிபதி வழங்கியுள்ள இந்த நியமனக் கடிதத்தில்…
கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் – றிஷாத் பதியுதீன்
கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்.தமிழ் மக்கள் எம்மோடு இருக்கின்றார்கள் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் இன ரீதியான சாயத்தை எம்மீது பூசுகின்றனர் என்றும் கூறினார். வவுனியா வெளிக்குளம் கிருபை இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போத அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் –…
காத்தான்குடி நூதனசாலையில் உருவச் சிலை: ACJU பத்வா குழு கடிதம்
காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூதனசாலை’ தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது…
100 நாள் வேலைத்திட்டம் வெற்றி: ஹர்ஷ டி சில்வா
நூறு நாள் வேலைத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, ஜனநாயக நல்லாட்சி உருவாக்கம், திருட்டுக்கள், ஊழல் ஒழிப்பு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களும் வெற்றிகரமாகி மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை திட்டமிடல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா இவ்வாறு தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பது அரசின் நோக்கமாகும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கி வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இடைக்கால…
எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காது….
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி தேர்தலின் மூலம் கிடைத்த திருப்புமுனை குறித்து பேரதிர்ச்சி க்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேன, நாடு ஒரு குடும்பத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்க இனிமேலும் இடமளிக்கப்படாது என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார். “நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சிறிது காலம் கடந்துள்ள போதும் நான் தான் ஜனாதிபதி என்பதனை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”யென ஜனாதிபதி மைத்திரிபால…
நவ்ரூ தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப தீர்மானம்
இலங்கையர்கள் உட்பட நவ்ரூ தீவில் தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. புகலிடம் கோரி, சட்டவிரோத படகு பயணங்கள் மேற்கொண்டு வருகின்றவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏற்கனவே தமது நாட்டை வந்தடைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பீ.பீ.சீ. உலக சேவை தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் இந்த முடிவானது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகலிடம் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகளை…
தேசிய கீதத்தினை வடகிழக்கு பிரதேசங்களில் தமிழில் பாடவேண்டும்!- அமைச்சர் ராஜித சேனாரட்ன
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது மிகவும் சிறந்ததாக அமையும் எனவும் இனிவரும் காலங்களில் நான் இங்கு வருகை தரும் போது தமிழிலோ, ஆங்கிலத்திலே தான் பாடவேண்டும் என கௌரவ சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் நான் இங்கு மிகுந்த மனவேதனை அடைகின்றேன் காரணம் தமிழில் பேசமுடியாதமையினை இட்டு இதற்கு முதற்காரணம் எமது நாட்டில் உள்ள கல்விக் கொள்கையாகும்…
(UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் றிஷாத் பதியுதீனுடன் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் மலேசியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும்(UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் இன்று கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். மலேசிய குழுவிற்.கு இந்தியா ETA நிறுவனத்தின் பொது முகமையாளர் அகமத் றிபாய் தலைமை தாங்கினார். மலேசியாவில் இயங்கிவரும் University College Of Teechnology Sarawak பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரம் கல்வி செயற்பாடு தொடர்பில் அமைச்சருக்கு பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர்.அதே வேளை உயர்கல்வி தொடர்பில் இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்கு இந்த பல்கலைக்கழகம் தயாராகவுள்ளதாக அமைச்சரிடத்தில பல்கலைக்கழக…
