Headlines

கெஹலிய உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை….!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை உற்பட மூவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றுக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தனத்துக்கு கொள்ளவனவு செய்யப்பட்ட பைப் வகை ஒன்றில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஊழல் மோசடி பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் பேரில் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலபிட்டிய இன்று இவ் அழைப்பாணையைப் பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் தவிர அப்போது இருந்த ரூபவாகினி கூட்டுத்தாபன தலைவர் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோர் எதிர்வரும் 20 ஆம்…

Read More

நாளை பாராளுமன்றம் கலைக்கப்படுமா? நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால நாட்டு மக்களுடன் உரையாடுகிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (23) இரவு 9.00 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,ஔிபரப்பு செய்யப்படவுள்ளது.

Read More

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைத்தால் எந்தவொரு இலங்கை பிரஜையும் செல்ல கடமைப்பட்டுள்ளனர்

பிரதி வெளிவிவகார அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு ஆணையிடப்பட்டால் இந்நாட்டில் எந்தவொரு பிரஜையும் வருவதற்கு கடமைப்பட்டுள்ளனர். முடியாது என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – இலங்கையிலுள்ள பௌத்த குருமார்கள்- கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட அனைத்து மத போதகர்கள் உட்பட…

Read More

பாராளுமன்றை கலைத்து தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும்,…

Read More

பாலைவன நிலத்தில் கிடைத்த வெற்றி… கத்தார் தலைநகர் தோஹாவில் நெல் அறுவடைக்குத் தயார்.

அபூ சுமைய்யா கேரள விவசாய ஆர்வலர்களால் Al Dosari Park shahaniya வில் சிறிய நிலப் பரப்பில் முதலாவதாக செய்யப் பட்ட நெற் பயிர் செய்கை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெற் பயிர் செய்கை நீர் வளமுள்ள நிலத்திலே (water rich soil ) செய்கை பண்ணப் படுவது வழக்கம் இவர்கள் பாலைவன நிலத்தில் வெற்றிகரமாக நெற் பயிர் செய்து வெற்றி கண்டிருகின்றார்கள்.

Read More

12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கு கப்பலில் அடைக்கலம் தருகிறது கட்டார்

வரும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக நடத்த கத்தார் அரசு ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இந்த போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக மிதக்கும் ஓட்டல்களை அமைக்க பலரும் ஐடியா கொடுத்த போது முதலில் அதை நிராகரித்து விட்ட கத்தார் அரசு இப்போது மீண்டும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, போட்டியை காணவரும் 12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கும் மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களில் அடைக்கலம் அளிக்க…

Read More

சிறுவர்களை பாதுகாக்க கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்!

திருமலை அரசாங்க அதிபர்  திருகோணமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் 21.04.2014 மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதுடன் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார நேற்று (21) தெரிவித்தார். அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற திருமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

Read More

தொழிற்சந்தையும் கல்வி கண்காட்சியும்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு…

Read More

தாமரை கோபுரம் இந்தியாவை கண்காணிக்கும் திட்டம் அல்ல – சீனா மறுப்பு

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய் என்ற ஆய்வாளர், இலங்கையில் தாமரை கோபுரத் திட்டத்தை நிறைவு செய்ய இடமளித்தால் அது இந்து சமுத்திரத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும்…

Read More

லலித் வீரதுங்கவிடம் நிதி மோசடி பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்க மீது நிதி மோசடி குற்றச்சாட்டில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்தாதீர்கள்: ரணிலின் இன்றைய சுப்பர் பேச்சு (வீடியோ இணைப்பு)

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கோஷமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது….

Read More

மஹிந்த ஒன்றும் கடவுள் இல்லை: சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும்…

Read More