Main News
தலைவர் றிஷாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது -சுபைர்
அரசாங்கத்தின் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் என்றும் கூறினார். புதிய அரசாங்கத்தின் 100 வது நாள் தொடர்பில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில்…
இணைந்தன இரு கரங்கள் ;அமைச்சர்களான றிஷாத் – ஹக்கீம் இணைந்து கோரிக்கை
அஸ்ரப் ஏ சமத் நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மற்றும் அமைச்சர் றவுப் ஹக்கீம் இணைந்து மலையக மற்றும் தென் பிரதேசத்தில் 11 மாவட்ட தமிழ் மொழி மூல பாடாசாலைகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் நியமன விடயத்தில் ஒன்று பட்டு தமது கோரிக்கை வென்றெடுத்தார்கள். இது போன்று ஏனைய விடயங்களிலும் மற்றைய அமைச்சர்களான ஹலீம், கபீர் காசீம் ;ஆகியேர்களையும் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டால் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பல விடயங்களில் இந் அரசில் வெற்றி காணலாம்….
பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக முகம்மது அலி றயிசுதீன்…
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக சமூக சேவையாளரும்,வர்த்தகருமான முகம்மது அலி றயிசுதீன் (ஸலபி) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னார் கொன்டச்சியை பிறப்பிடமாக கொண்டவர். அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது
ஜூன் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி உறுதியான அரசை உருவாக்க வேண்டும்
ஜூன் மாத இறுதிக்குள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி உறுதியான அரசாங்கத்தை உருவாக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதனால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம் பெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-…
நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிப்பு
முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பு வெளியிடப் போகும் -“மஹிந்த ராஜபக்ஸ ஊழல்” நூல்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை நூல் வடிவல் ஆவணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த தகவல் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பிற்கு அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்இ ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நூல் வெளியிடப்பட உள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த…
மஹிந்த பாவமாம்; விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம், போராட்டத்தில் சிலர் தூக்கம். ( அனைத்து படங்களும் இணைப்பு)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்படவுள்ள விசாரணையை மீளப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை மீளப் பெறும் வரை நாடாளுமன்றத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை நாடாளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும்…
அரசாங்க வைத்தியர்களுக்கான மாதாந்த விஷேட அலவன்ஸ் அதிகரிப்பு
அப்துல்லாஹ் அரசாங்க வைத்தியர்களுக்கான மாதாந்த விஷேட அலவன்ஸ் ஏப்ரல் மாதம் தொடக்கம் ரூபா 35 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக இருந்தது. இது தொடர்பான சுற்றறிக்கை அந்த அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் ஆர் பி திஸநாயக்காவினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் அதிகரித்த கொடுப்பனவு பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய சுற்றறிக்கையின்படி ஏப்ரல் மாதம் தொடக்கம் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாவுடன் மொத்தம்…
பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று
பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று (21) பாராளுமன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் (22) இவ்விவாதம் நடைபெறவுள்ளது. நேற்று (20) பாராளுமன்றில் நடைபெறவிருந்த விவாதம் கட்சித்தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இன்றைக்கு பிற்போடப்பட்டது.
நீதிமன்ற தடையையும் மீறி நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்ரம் விதித்துள்ள தடையையும் மீறி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
செனரத்தின் வங்கி கணக்கு விவரங்களை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியாட்தொகுதியின் பிரதானியான காமினி செனரத், அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80 தொடர்பிலான கணக்குகள் குறித்த விவரங்கள் இரகசிய பொலிஸாரிடம் (சி.ஐ.டி) சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது காமினி செனரத், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கிடைத்த முறைபாடு தொடர்பிலான அறிக்கையை இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர். நிதி தூய்மையாக்கல்…
ஷசி வீரவன்சவிடமும் விசாரணை
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்சவிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர், இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது 15ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
