Main News
சென்ற முறை பாராளுமன்றத்தில் 19 முஸ்லிம் உறுப்பினர்கள்.. இம்முறை 15 பேர்தான்
எட்டாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்பூட்டும் செயற்றிட்டத்தினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட உலமா சபையின் முன்னாள் செயலாளரும், அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். எட்டு விடயங்களை உள்ளடக்கி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், செயலாளரை விளித்து எழுதப்பட்டுள்ள அவரது கோரிக்கைக் கடிதத்தின் பிரதிகள் தேசிய ஷுரா கவுன்சில், கிழக்கு முஸ்லிம் கல்விப்…
எதிர்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமனம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் சபாநாயகர் கரு ஜயசூர்ய அவர்களால் நியமிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
தாஜுடீன் தொடர்பாக நீதிமன்றில் அறிக்கை!
ரகர் வீரர் வசிம் தாஜுடீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே இவ்வாறு நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு, இவ் வாகன மாதிரி தங்கள் நிறுவனத்தின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்ய முடியொதென குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் இறக்குமதியாளர்கள் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் இவ் வாகன…
ஹுனுபிட்டிய பள்ளிவாசலில் சமயக் கடமைகளை தொடரலாம் : நீதிமன்றம் அனுமதியளிப்பு
திப்பிட்டிகொட, ஹுனுபிட்டிய மொஹியத்தீன் பள்ளிவாசலில் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து சமயக் கடமைகளையும் இடையூறுகள் எதுவுமின்றி நடத்துவதற்கு கடவத்தை நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவு வழங்கியதுடன் கிரிபத்கொட பொலிஸினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை நிராகரித்தார். இதனால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த சமய கடமைகளுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹுனுபிட்டிய மொஹியதீன் பள்ளிவாசலின் மேல்மாடி சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்படுவதாகவும் இது ஒரு மத்ரஸாவேயன்றி பள்ளிவாசல் அல்ல. அதனால் சமயக் கடைமைகளைத் தொடர முடியாதெனவும் இது…
இந்தியா புறப்படுகிறார் பிரதமர் ரணில்
பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம்…
மக்களின் கோபங்களையும் சபையில் பிரதிபலிப்போம்
தமிழ் முற்போக்கு முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு வந்துள்ள ஆறுபேரைக் கொண்ட நாம் எமது மக்களின் மகிழ்ச்சியையும் துன்ப துயரங்களையும் கண்ணீர் சிந்தும்விடயங்களையும் இந்தப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதைப் போன்றே எமது மக்களின் கோபங்களையும் சபையில் பிரதிபலிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். புதிய பாராளுமன்றத்தின் நேற்றைய சம்பிரதாய நிகழ்வின் போது கட்சித் தலைவர்கள் உரைகள் இடம்பெற்றன.இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் என்ற வகையில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மனோ கணேசன் இங்கு மேலும்…
வத்தளை பள்ளிவாயலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை எனத் தெரிவித்து இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிரிபத்கொட பொலிஸாரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்வதற்கும் நிர்மாணத்திற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆர்.ஆர்.டி சட்ட ஆலோசனை அமைப்பு, இந்த வழக்கிற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக போராடியதுடன் இந்த பள்ளிவாசல் முஸ்லிம்…
புதிய அமைச்சரவை, வெள்ளிக்கிழமை பதவியேற்கும் – ரவி
புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக ஐ.தே.கவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 45 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக அது அமையும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியதோடு இதில், ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அமைச்சுகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை அமைச்சுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் அன்றைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…
கம்மன்பிலவின் கருத்தால் சபையில் கடும் சர்ச்சை
நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடியாது போனதால் அரசியல் ரீதியாக அதனை முன்னெடுக்க ஆயுதக் குழுக்களின் அரசியல் பிரதிநிதிகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக உதய கம்மன்பில எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்ததால் முதல் நாள் சபை அமர்விலேயே சர்ச்சை தலைதூக்கியது. இவ்வாறு சபையில் ஆயுதங்கள் தொடர்பாக உரையாற்ற முடியாது என உதய கம்மன்பில எம்.பி.யின் உரைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டார். எட்டாவது பாராளுமன்றத்தின்முதலாவது சபை அமர்வு, சபாநாயகராக தெரிவான கருஜயசூரிய தலைமையில் நேற்று இடம் பெற்றது. இதன்…
கோத்தா, துமிந்த, தனசிறி, உபாலி உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை – கல்கிஸை மாநகர மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினரால் விஷேட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்…
போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லதொரு மாற்றம் : ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி
போருக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால், நாட்டில் ஜனநாயகமும், சமாதானமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐந்தாவது தடவையாக் கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாதுகாப்பு மாநாடானது ‘பூகோள அச்சுறுத்தல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசிய…
நீண்ட இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றில் தம்பதிகள்
மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகே மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அனோமா கமகே ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். வர்த்தகரான தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தயா கமகே இதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின்…
