Headlines

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு 2 வருடங்களில் சுத்தமான குடிநீர் : ஜனாதிபதி

எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கான நாளொன்றுக்கு 24,000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பில் விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகக்…

Read More

சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் – சம்பந்தன்

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் குறித்த உங்களது…

Read More

பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராகிறார் லக்ஸ்மன் கிரியால்ல….!

பாராளுமன்ற அவை தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். இன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள  அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில்  கண்டி மாவட்டத்தில் இம்முறை அதிகூடிய சாதனை விருப்பு வாக்குகளை பதிவு செய்த லக்ஸ்மன் கிரியல்ல பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதங்கள், மலசலகூட குழிக்குள் இருந்து மீட்பு (படங்கள்)

மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிகாரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும் அவற்றில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடிதங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, தராதரம் பாராது தண்டிக்குமாறு தபால் நிலைய அதிகாரிகளிடம் கோரியதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

மூக்குடைபட்ட விமலும், கம்மன்பிலவும்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புரிமையை இழந்துள்ளனர். இந்த இரண்டு கட்சிகளையும் நாடாளுமன்றில் தனிக் கட்சியாக கருதுவதில்லை என பிரதான கட்சிகளின் தலைவர்களின் தீர்மானித்துள்ளனர். இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டும் கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களுக்கான வரப்பிரசாதங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படாது. இதன்படி> குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் முன்வரிசை ஆசனங்களையும் இழப்பார்கள்….

Read More

இந்த நாட்டில் மீண்டுமோர் அழிவைக் காண சிலர் துடிக்கின்றனர்– றிஷாத் பதியுதீன்

இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (03) பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனவாதம் தான் இந்த நாட்டிலே 30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்தது. யாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கஇல்லை. இவ்வாறான யுத்தம் வருவதற்கு காரண கர்த்தாக்களாக, இன்று இனவாதக் கருத்துக்களைப் பேசியவர்களைப் போன்று, அன்று பேரினவாத சக்திகள் ஆட்சியைக் பிடிப்பதற்காக சுயநல கொள்கையோடு இனவாதக்…

Read More

அமைச்சரவைப் பதவிப் பிரமாணம் ஜூம்ஆ நேரம் 12.30 மணிக்கு – முஸ்லிம் MPகள் தர்ம சங்கடத்தில்

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று (04) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரம் 12.30மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. கெபினட் அமைச்சர்களின்; எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பதற்கு நேற்று பாராளுமன்றம் அனுமதி வழங்கியதையடுத்தே இன்று இந்த அமைச்சரவை பதவிப்பிரமானம் இடம்பெறவுள்ளது. குறித்த அமைச்சரவையில் முகா தலைவர் ரவுப் ஹக்கீம் , அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன், ஐதேக எம்பிக்களான கபீர் ஹாசிம், ஹலீம் மற்றும் சுகா எம்பியான ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு தேசிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அமைச்சர்களாக…

Read More

பள்ளி நம்பிக்கையாளர் சபைகள் – சமகாலப் பார்வை

பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல என்பது உண்மைதான். இஸ்லாமிய அரசின் ராஜ காரிய அலுவல்களின் கேந்திரமாக பள்ளிவாயல்கள் காணப்பட்டன.ஸகாத் சேகரிப்பு, போருக்குப் படை திரட்டுதல்,கனீமத் பொருட்கள் பகிர்ந்தளித்தல், குற்றவிசாரணைகள் நடத்துதல்,வெளிநாட்டு அரசதானிகளைச் சந்தித்தல் போன்ற பலவகையான நோக்கங்களுக்காக பள்ளிகள் பாவிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால் ஹசனலி அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என ஏன் அறிக்கை விட்டீர்கள் என்ற கேள்விக்கு பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் அல்ல என்ற பதில் சற்று ஜீரணிக்க முடியாமல்  இருக்கிறது. இவர்கள் இஸ்லாத்தை…

Read More

மோடி -­சந்­தி­ரிகா சந்­திப்பு

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இன்று வியா­ழக்­கி­ழமை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை புது­டில்­லியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். புது­டில்­லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடை­பெ­று­கின்­றது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க கலந்து கொள்­கின்றார். இந்த மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியும் பங்­கேற்­க­வுள்­ள­துடன் இரு­வரும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­திப்பின் போது இலங்­கையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்றம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை: அனுமதி வழங்கினார் சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். அந்தவகையில் அமைச்சர்கள் 48 பேரும் பிரதியமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படுவர்.

Read More

எதிர்க் கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் எதிர்க் கட்சித் தலைவருக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More