Main News
இனிமேல் பாராளுமன்றில் இனவாத கருத்து வெளியிடுவது தடை
நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. எட்டாம் நாடாளுமன்றின் உறுப்பினர்கள், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் உரைகளை ஆற்ற இடமளிக்கக் கூடாது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை, சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
யார் இந்த சம்பந்தன்..?
இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் பற்றிய சில தகவல்கள். • 1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார். • சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனேயாகும் • சம்பந்தன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார், குருணாகல் புனித அன்னம்மாள், திருகோணமலை…
புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்
புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கை விரல் அடையாளம் மற்றும் டிஜிடல் புகைப்படத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவூச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளார் நாயகம் எம்.என் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார் . ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக் கொள்வதற்கு 1500 ரூபாவும் பெற்றுக் கொள்வதாகவும் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார் ….
தேசிய அரசாங்கம் + அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை சவாலுக்கு உட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார். 19வது திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றில் அதிக ஆசனத்தை பெறும் கட்சி, பாராளுன்றில் உள்ள ஏனைய சுயாதீன குழுக்களுடன் இணைந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கம் என…
உழல் அற்ற ஒரு நாட்டை காண்பதே, எனது குறிக்கோள் – பதவி விலகிய JVP எம்.பி.
தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ். மாயாதுன்ன தெரிவித்துள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்னால், முன்னெடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சிக்குள் வெளியில் இருந்த தனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான…
மத்தல விமான நிலையம், நெற் களஞ்சியமானமை – பாராளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை
மத்தல சர்வதேச விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்தல விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த செயற்பாடு மற்றும் நெல் அறுவடை தொடர்பில் விவாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி தருமாறு எதிர்க்கட்சிகள் கோரிநின்றன. இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்தல விமான நிலையத்தின் களஞ்சிய சாலையில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் மற்றும் மத்தல விமான நிலையம் தொடர்பில் இரண்டு விவாதங்களை நடத்துவதற்கு இடமளிக்க…
சு.க.வின் மாநாட்டில் பங்கேற்காத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது. முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பிற்பகல் பொலநறுவையில் கதுருவெல ரஜரட்ட நவோதைய மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா குமாரதுங்க…
5 ஆண்டுகளுக்குள் காசா, ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் – UNO
மத்திய கிழக்கின் காசாவில் தற்போதைய கெடுபிடிகள் நீடித்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் அவ்விடம் ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் என்று ஐநாவின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் மற்றும் அண்மைய காலத்தில் அங்கு செய்யப்பட்ட மூன்று இராணுவ நடவடிக்கைகள் காரணமாக காசாவின் சமூகப் பொருளாதாரக் குறியீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி தொடர்பான ஐநா நிறுவனமான UNCTAD எச்சரித்துள்ளது. காசாவை இஸ்ரேல் கைப்பற்றிய கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் முன்பில்லாத அளவில் நிலைமை மோசமாக உள்ளதாக…
விஹாரமகாதேவி பூங்காவில் இன்று முதல் இலவச WiFi
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றுமுதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi வசதியினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்
சீன சந்தையின் வீழ்ச்சியினாலும் எரிபொருளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலும் இலங்கையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதும் இலங்கைச் சந்தையில் ஓரளவு விலைக்குறைப்பையே பால்மாவிற்கு மேற்கொள்ள முடியுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபை அலுவலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.கே. ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.(tkl)
ஜனாதிபதியின் 64ஆவது பிறந்ததினம் இன்று!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன. மேலும் பொலன்னறுவை கல்விஹாரையின் ரன்கொத் விஹாரையின் முன்னால் மற்றுமொரு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதேவேளை, பழுகஸ்கமனவில் உள்ள கத்தோலிக்க…
JVPயின் எஸ்.மாயாதுன்னே தனது பா.உ. பதவியை ராஜினாமா!
மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். முன்னாள் கணக்காய்வாளரான மாயாதுன்னே, இன்று (03) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவதாக தெரிவித்தார். மாயாதுன்னே பதவி விலகியதும் அவ்விடத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த அல்லது வசந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜினாமா செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் என…
