Headlines

JVPயின் எஸ்.மாயாதுன்னே தனது பா.உ. பதவியை ராஜினாமா!




மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

முன்னாள் கணக்காய்வாளரான மாயாதுன்னே, இன்று (03) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவதாக  தெரிவித்தார்.

மாயாதுன்னே பதவி விலகியதும் அவ்விடத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த அல்லது வசந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராஜினாமா செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் என கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

மாயாதுன்ன ராஜினாமா செய்யும் பட்சத்தில் அந்த இடத்துக்கு தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *