Main News
செயிட் அல் ஹுசைன் நாடு திரும்பினார்
செயிட் அல் ஹுசைன் டுபாய் நோக்கி பயணமானார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்!
இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக போலி வைத்தியர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலி வைத்தியர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை,…
சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 24.3 சதவீதத்தால் அதிகரித்து 194,280 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து முதல் இடத்தை வகிப்பதுடன் சீனா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28,895 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சீனாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 122 சதவீதத்தால் அதிகரித்து 26,083 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது….
ஐ.தே.க.வுக்கு ஆபத்து காத்திருக்கிறது – மஹிந்த சாபம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் மூலம் பல நெருக்கடிகளை ஐக்கிய தேசிய கட்சிய எதிர்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தொடர்பில் ஐ.தே.கவின் முடிவு பிரச்சினைக்குரிய ஒன்றாகும். இந்தப் பதவியை வழங்குவதற்கு இன்னும் எவ்வளவோ தகுதியானவர்கள் உள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதனால், அதிகம் நெருக்கடிகளை சந்திக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் யாராவது அதற்கு எதிராக…
சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்
தேசிய ஜனநாயக கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் நேற்று (10) நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணஞ் செய்து கொண்டார். மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்தன வின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார்.
சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது
அரசியலமைப்பு சபை இன்று (10) பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை
மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை. இது இலங்கையின் செயற்பாடாகவே அமையும் என்று…
மஹிந்த அணியின் கோரிக்கை சபாநாயகர் கருவினால் நிராகரிப்பு
பாராளுமன்றத்தில் பொது எதிரணியாக சுயாதீன மாக செயற்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்த மஹிந்த அணியினரின் வேண்டுகோள் சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டதையடுத்து மஹிந்த ஆதரவு அணி எம்.பிக்கள் சபை மத்தியில் வந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இக்கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைத்த உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. 52 எம்.பிக்கள் கையெழுத்திட்டு இணைந்த பொது எதிரணியாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட போதும் அதற்கு…
ஞானசார தேரருக்கு பிணை
ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று (10) ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
யோஷிதவின் முன்னாள் காதலி புறக்கோட்டையில்!
கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுத்துவரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விசாரணைகளில் கடந்த வாரம் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் ஐவர் கைது…
ஹுஸைன்- மைத்திரி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.
